இடுகைகள்

ஜூலை, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரூ.33 லட்சம் அரசிற்கு நிதி இழப்பு செய்த களப்பாகுளம் ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம்!!

படம்
ரூ.33 லட்சம் அரசிற்கு நிதி இழப்பு செய்த களப்பாகுளம் ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம்!!  -  அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டு தென்காசி கலெக்டர் அதிரடி நடவடிக்கை. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

தமிழ்நாட்டின் அண்ணா, காந்தி காவல் பதக்கங்களை அவமதித்து டெல்லிக்குச் சேவகம் செய்யும் விஜய்!!

படம்
முதலமைச்சர் தன் கைவசம் வைத்துள்ள காவல்துறையில், தமிழ்நாடு காவலர்களுக்குப் பதக்கம் வழங்கும் விழாவில், அண்ணா பதக்கமே முதன்மையானது. அதுபோலவே காந்தி காவல் பதக்கமும் மதிப்பிற்குரியது. தமிழ்நாட்டின் இந்த இரு பதக்கங்களையும் இருட்டடிப்பு செய்துவிட்டு, விழா மைதானத்தின் பின்னணியில், அமித் ஷா பொறுப்பு வகிக்கும் 'ஒன்றிய உள்துறை அமைச்சர்' பதக்கத்திற்கு வானளாவிய பிரம்மாண்ட பேனர்களை வைத்துள்ளார் டம்மி முதல்வர் விஜய்! காவல்துறையினருக்கு வழங்கப்படும் அண்ணா மற்றும் காந்தி பதக்கங்களே தமிழ்நாட்டின் பெருமை. அதை விடுத்து, ஒன்றிய அரசின் பதக்கத்தை மட்டும் வெட்கமில்லாமல் முன்னிலைப்படுத்தி, பெருமைக்குரிய காக்கிச் சீருடை பதக்க விழாவில் காவி நிறத்தைக் காட்டியிருக்கிறது தவெக அரசு. தன் மாநிலப் பதக்கத்தின் மாண்பைக் கூடக் காப்பாற்ற வக்கில்லாத இந்த அரசால், தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க முடியும்? தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

தமிழ்நாடு முதலமைச்சர் தரப்பில் இருந்துதான் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக கர்நாடகா முதலமைச்சர். டி.கே. சிவகுமார் தெரிவிப்பு!!

படம்
    கேட்டது அவங்கதான்! தமிழ்நாடு முதலமைச்சர் தரப்பில் இருந்துதான் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவிப்பு. அந்த கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எனினும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு வந்துள்ள இச்சூழலில்| அவர் வருவது சரியான நேரம் இல்லை எனவும் பேட்டி! தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

தமிழ்நாடு முழுவதும் போராட்டம் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை!!

படம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டோம் கர்நாடக அரசு தண்ணீரை திறக்காமல் இருக்கிறது.  தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் உச்ச நீதிமன்றத்தை முன்னதாக உறுதியாக நாட வேண்டும். தமிழகத்தில் வாக்குறுதி கொடுத்தபடி விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் இல்லை என்றால் அதிமுக தமிழகம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

நெமிலி மத்திய ஒன்றிய திமுக நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர்.ஆர். காந்தி தலைமயில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மதிய ஒன்றிய திமுக சார்பில் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் ஆர். காந்தி தலைமயில் நடைபெற்றது.ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர். காந்தி அழைப்பின் பேரில் நெமிலி  மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ் ஜி. சி. பெருமாள் கலந்து கொண்டார். மேலும் இவருடன் ஒன்றிய அவை தலைவர். நரசிம்மன் ஒன்றிய துணைச் செயலாளர்கள். சீனிவாசன், வழக்கறிஞர். தமிழன் அன்சாரி, சாவத்திரி சுந்தர வடிவேலு, பொருளாளர். எஸ். ஆர். பி. ரமேஷ் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள். சுரேஷ், தனசேகரன், தசரதன், சண்முகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில்  மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு  பேசியபோது விரைவில் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது ஆகவே கழகத்தின் சார்பில்  அதிக இடங்களை வென்றெடுக்க வேண்டும் அதற்காக இப்பொழுது முதலே அதற்கான ஆய்த்த பணிகளில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

அரக்கோணத்தில் நடைபெற்ற நகர்புற பசுமை பிரச்சாரம்!!

படம்
இராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணம் நகராட்சியில் MRF மற்றும் அரக்கோணம் நகராட்சியும் இனைத்து மரம் நடும் விழா நடைபெற்றது. தோல் ஷாப் அருகில் உள்ள இடத்தில் நகர மன்ற தலைவர்.லட்சுமி AK பாரி செடிகளை வைத்தார். உடன் ஆனையாளர். ஆனந்தன் B.Com MRF நிறுவனத்தை சேர்ந்த  கஜேந்திரன்,இளங்கோ மற்றும் பொது பணி மேற்பார்வையாளர். பிரேம்சுந்தர் மற்றும் MRF நிறுவன அலுவலர்கள் உடன் இருந்தனர். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

அறந்தாங்கி அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு !!

படம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பெற்றது. திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டமும், புதுக்கோட்டை மாவட்ட நிருவாகமும் இணைந்து, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியருக்காக அண்மையில், வல்லத்திராக்கோட்டை பொறியியல் கல்லூரியில் ஒரு வார கால பேரிடர் மேலாண்மை பயிற்சியை வழங்கின. இப்பயிற்சியில் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 26 பேர் பங்கேற்று, பயிற்சியை நிறைவு செய்து வந்தனர்.அவர்களுக்கு  கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை, பாராட்டுகளைத் தெரிவித்தார்.துறைத்தலைவர்கள் முனைவர் து.சண்முகசுந்தரம், முனைவர் கா.காளிதாஸ், அ.கணேசன், முனைவர் பா.கிளாடிஸ், முனைவர் ரா.பிரகதாம்பாள் உள்ளிட்ட பேராசிரியர்கள், முனைவர் ச.ரமேஷ், மு.பழனித்துரை ஆகிய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், அலுவலகப்பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

"முதலமைச்ச விஜய் கர்நாடகா வரவேண்டாம்.." -டி.கே.சிவக்குமார்!!

படம்
தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இப்போதைக்கு கர்நாடகா வரவேண்டாம்" என்று கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.  காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் (தமிழக வெற்றிக் கழகம் - TVK), வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூரு சென்று கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்தச் சூழலில் தான் கர்நாடகத் தரப்பில் இருந்து இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. "முதலமைச்சர் விஜய் கர்நாடகா வந்தாலும் கூட, எங்களால் தற்போது தமிழ்நாட்டிற்குத் கூடுதல் தண்ணீர் திறந்துவிட முடியாது" என்றும், இது தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க உள்ளதாகவும் டி.கே.சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார். ஹெலீகாப்டர் ரெடியா இருக்கு வாங்கன்னானுங்க, இப்போ வரவேணாம் வந்தாலும தண்ணிதரமுடியாதுங்கிறாங்க. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

முதலமைச்சர். விஜய் உடன் கர்நாடகா செல்வோர் யார்? யார்?

படம்
காவேரி பிரச்சினை தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் விஜய் செல்கிறார். கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'கிருஷ்ணா'வில் நடைபெறுகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் உடன் கர்நாடகா செல்லும் 13 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றோர் விவரம்: அமைச்சர்கள். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார். தலைமைச் செயலாளர் & முதல்வர் செயலாளர்கள் 1, 2. தலைமை வழக்கறிஞர் & மூத்த வழக்கறிஞர் ஜி. உமாபதி. முதல்வரின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர், தலைமைப் பொறியாளர் & காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கமுதி அருகே வில்லானேந்தன் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ உடைகுளத்து காளியம்மன் ஸ்ரீ சப்த கன்னிமார்கள் ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆலய ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேக விழா!!

படம்
ராமநாதபுரம் மாவட்டம்,நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஆடி 22 ஆம் தேதி 7 8 2026 வெள்ளிக்கிழமை நவமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 9–15 மணிக்கு மேல் 10–15 மணிக்குள் அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது      ஆடி மாதம் 15 ஆம் தேதி 31–7–2026 வெள்ளிக்கிழமை காலை 9–15 மணிக்கு மேல் 10–15 மணிக்குள் அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனையும் முகூர்த்த கால் நடுதலும் காப்பு கட்டுதலும் நடைபெறும்  இதனைத் தொடர்ந்து 7–8 2026 வெள்ளிக்கிழமை காலை விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி, எடுத்து ஸ்ரீ உடைகுளத்து  காளியம்மன் ஆலயம் வரை எடுத்துச் சென்று விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெறும் இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் மாபெரும் பொது அன்னதானம் நடைபெறுகிறது. அன்று இரவு சாத்தநாயக்கன்பட்டி பாலையா குழுவினர் குழுவினர் நடத்தும் கிராமிய நிகழ்ச்சி நடைபெறுகிறது 8–8 2026 சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் பொங்கல் வைத்து கிடா வெட்டி அன்று மதியம் ஒரு மணி அளவில் மாபெரும் அசைவ பொது அன்னதானம் நடைபெற உள்ளது. ஆடி மாதம் அருள் பொழியும் அம்மன் திருநாளில், ஸ்ரீ உடைகுளத்து...

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின், முப்பத்தி மூன்றாவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, எஸ்.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், எஸ்.என்.ஆர். கல்லூரி, வளாகத்தில் நடைபெற்றது!!

படம்
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின், முப்பத்தி மூன்றாவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, எஸ்.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், எஸ்.என்.ஆர். கல்லூரி, ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.  கல்லூரியின் முதல்வர், முனைவர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருந்தியல் ஆணையத்தின் செயலாளர் மற்றும் அறிவியல் இயக்குநரான முனைவர்  கலைச்செல்வன், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினர். முன்னதாக  ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின் துறைத் தலைவர்கள், தங்கள் சம்பிரதாய ஆடைகளை அணிந்து, நிறுவனத்தின் பாரம்பரியம் மற்றும் சிறப்பின் அடையாளமாக விளங்கினர். முதல்வர், முனைவர் ஸ்ரீராம், ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி, வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், பட்டம் பெறும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர்களின் கடின உழை...

குடியாத்தம் அருகே தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி கைது !!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி ஊராட்சி. உப்பரபல்லி. கிராமத்தில். கடந்த ஜூன் 15ஆம் தேதி கஞ்சா போதையில் தாக்கிய வரை கைது செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சேம்பள்ளி. கிராமம் எம்ஜிஆர். நகரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கஞ்சா போதையில் அடித்தும். காதை அறுத்துள்ளார்கள். இதில் . நாக பூஷணம் என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்தார்கள் அங்கு சிகிச்சை அளித்து பலனின்றி நாக பூஷனம் கடந்த 15 6 2026 மாலை 4:30 மணி அளவில் உயிரிழந்தார்.  இச்சம்பவத்தில் தொடர்பு உடைய சேம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாம்பசிவம் த/பெ. வெங்கடேசன் வயது 30 என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று இரவு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் பெங்களூர் சென்று சாம்பசிவம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

குடியாத்தத்தில் மூதாட்டியை ஏமாற்றி போலி இறப்பு சான்று வழங்கிய மர்ம நபர் நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் தகவல்!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியை சேர்ந்த கோகிலா வயது 65 இவருடைய தாய் செல்லம்மாள் கடந்த 2010 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் . உயிரிழந்து உள்ளார்.  அந்த சமயத்தில் கோகிலா தன்னுடைய தாய் இறந்ததை பதிவு செய்யவில்லை  தற்போது இறப்புச் சான்று தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதனை குடியாத்தம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது  நபர் ஒருவர் கோகிலா என்ற மூதாட்டியிடம் எதற்காக வந்துள்ளாய் என்று கேட்டதாகவும் அதற்கு எனது தாய் 2010 இறந்துவிட்டார்கள் அவருடைய இறப்புச் சான்று வாங்குவதற்காக வந்துள்ளேன் எனக் கூறியுள்ளார். உடனடியாக அந்த நபர் இறப்புச் சான்று நான் வாங்கித் தருகிறேன் என்று கூறி சில தொகையை பெற்றுள்ளார்.  நேற்று மூதாட்டி கோகிலா அவர்களின் தாய் செல்லம்மாள் இறப்பு சான்று அந்த நபர் வழங்கி உள்ளார்.  அதனை இன்று குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விசாரித்த போது அந்த இறப்புச் சான்று போலி என்பது  தெரியவந்துள்ளது.  இது சம்பந்தமாக மூதாட்டி கோகிலா குடியாத்தம் வட்டாட்சியரிடம் அந்த இறப்பு சான்று வழங்கியவர் யார் என்பது குறித்...

குடியாத்தம் ஒன்றியம் தனகொண்ட பள்ளியில் சுமார் 65 லட்சத்தில் கட்டப்பட்ட.3 . வகுப்பறை கட்டிடத்தை தென்றல் குமார் MLA திறந்த வைத்தார்!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தனகொண்ட பள்ளி ஊராட்சியில் நபார்டு வங்கி மூலம்.சுமார் 65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட .3. வகுப்பறை. கட்டிடத்தை கே. வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர். தென்றல் குமார் MLA அவர்கள் இன்று திறந்து வைத்தார்.  நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர். லாவண்யா ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.  இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் என். இ. சத்யானந்தம் வட்டார வளர்ச்சி அலுவலர். ஹேமலதா. தலைமையாசிரியர் பொறுப்பு. நிர்மலா உதவி தலைமை ஆசிரியர். ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

சபரிவர்மன் கொலை! - அதிர்ச்சி தகவல்!!

படம்
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக இருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியானது. சபரிவர்மனின் கை, கால்களை லுங்கியால் கட்டிப்போட்டு கொடூரமாக அடித்துக்கொலை செய்தது CBCID விசாரணையில் தெரியவந்தது. மனைவி, குழந்தையை பார்க்க வேண்டும் என சத்தம் போட்ட சபரிவர்மனை சிறை வார்டன், கைதிகள் இணைந்து அடித்துக் கொலை. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

முதல்வர். விஜய் கர்நாடக போவதை அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பது ஏன்? இதுதான் காரணம்!!

படம்
முதல்வர். விஜய் கர்நாடகா சென்று கர்நாடக முதல்வருடன் பேசி தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் வந்துவிட்டால் அதை வைத்து தங்களால் அரசியல் செய்ய முடியாது என பயப்படுகின்றன மற்ற கட்சிகள். ஒரு வேளை, கர்நாடக முதல்வரும் தமிழக முதல்வரும் பேசிய பின்  தமிழகத்துக்கு தேவையான  தண்ணீர் வருகிறது என்றால் அது முதல்வர் விஜய்யால் தான் முடிந்தது என மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள் இதுவரை முதல்வராக இருந்தவர்களால் செய்ய முடியாததை முதல்வர் விஜய் வந்து மூன்று  மாதங்களில் இதை செய்து விட்டார் என்று பேசுவார்கள். முதல்வர். விஜய்க்கு பாராட்டுக்கள் குவியும், அப்படி நிகழும் பட்சத்தில் இனிவரும் தேர்தலில் தவெக அசைக்க முடியாத சக்தியாக மாறும். விஜய் நிரந்தர முதல்வராக ஆகி விடுவார் இது போன்ற சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கட்சிகள் கர்நாடகா போகக்கூடாது என எதிர்த்து வருகின்றன. முதல்வர். விஜய் போய் தான் பார்க்கட்டுமே! தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது நடக்கிறது என்றால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சந்திப்பதில் தவறே இல்லை. ஒருவேளை முதல்வர் விஜய் கர்நாடக போகாமல் இருக...

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு!!

படம்
2026-27 கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு, செப்டம்பர் 17 முதல் 25 வரை காலாண்டுத் தேர்வுகள்; செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டு விடுமுறை. டிசம்பர் 16 முதல் 23 வரை அரையாண்டுத் தேர்வுகள்; டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை அரையாண்டு விடுமுறை. 2027 ஜனவரி 15 முதல் 17 வரை பொங்கல் விடுமுறை. 2027 ஏப்ரல் 23 கல்வியாண்டின் கடைசி வேலை நாள்; ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை தொடங்கும். -பள்ளிக்கல்வித்துறை. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

8 சிறப்பு ரயில்களின் இயக்கம் ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிப்பு!!

படம்
பயணிகளின் அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே 8 சிறப்பு ரயில்களின் இயக்க காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பு தென் தமிழகம் மற்றும் சென்னை இடையே பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. 📅 30.07.2026 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, இந்த சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் இறுதி வரை தொடர்ந்து இயக்கப்படுகின்றன. 🚆 நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் 🚆 06028 போத்தனூர் – டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு 📅 வெள்ளி, சனி, ஞாயிறு 🗓️ 07.08.2026 – 30.08.2026 🚆 12 சேவைகள்🚆 06027 டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு 📅 வெள்ளி, சனி, ஞாயிறு 🗓️ 07.08.2026 – 30.08.2026 🚆 12 சேவைகள் 🚆 06030 திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு 📅 ஞாயிற்றுக்கிழமை 🗓️ 02.08.2026 – 30.08.2026 🚆 5 சேவைகள் 🚆 06029 மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு 📅 திங்கட்கிழமை 🗓️ 03.08.2026 – 31.08.2026 🚆 5 சேவைகள் 🚆 06166 திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு 📅 ஞாயிற்றுக்கிழமை 🗓️ 02.08.2026 – 30.08.2026 🚆 5 சேவைகள் ...

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் ஜாலியாக வந்த சிறுத்தை.. கோவையில் பதறி ஓடிய டூரிஸ்ட்கள்!!

படம்
கோவை  மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. நகர்ப்புற பகுதிகள், எஸ்டேட் பகுதிகள் மட்டுமல்லாமல், பொள்ளாச்சி - வால்பாறை சாலையிலும் சிறுத்தைகளின் உலா தொடர்கதையாகிவிட்டது. அது தொடர்பான ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி காண்போரை பதற வைத்து வருகிறது.கடந்த 4 நாட்களாகவே பகல் நேரங்களிலேயே எஸ்டேட் பகுதிகளுக்குள் சிறுத்தை, யானை, காட்டுமாடு என ஒவ்வொன்றாக வர ஆரம்பித்து விட்டதால், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.இதனிடையே வால்பாறையிலிருந்து அட்டகட்டி செல்லும் சாலையில் யானைகளை தொடர்ந்து சிறுத்தைகளும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டது போலும்.. புதுத்தோட்டம், ரொட்டிக்கடை, அய்யர்பாடி பகுதிகளில் இதன் நடமாட்டம் மிகவும் அதிகமாகவே உள்ளது..மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

WhatsApp Web-ல் புதிய அப்டேட் !!

படம்
கணினியில் செயலியைப் பதிவிறக்காமல், வாட்ஸ்அப் வெப் பிரவுசர் மூலமாகவே நேரடியாக ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளைப் பேசும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அழைப்பைத் துண்டிக்காமல் மொபைலிலிருந்து கணினிக்கும், கணினியிலிருந்து மொபைலுக்கும் மாற்றிக் கொள்ளும் CALL TRANSFER அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது குழு அழைப்புகளைக் கட்டுப்படுத்த WAITING ROOM வசதியும், தெளிவான வீடியோ அனுபவத்திற்கு QUICKHD அம்சமும் வழங்கப்பட்டுள்ளன. பின்னணிச் சத்தங்களை நீக்கி தெளிவான குரலை வழங்கும் NOISE SUPPRESSION தொழில்நுட்பமும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் வெப் வழியே பேசப்படும் அனைத்து அழைப்புகளும் முற்றிலும் இலவசம் என்பதோடு END TO END ENCRYPTED பாதுகாப்பு கொண்டவையாகும். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளுக்காக வரும் ஆகஸ்ட் 7, 8ம் தேதிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

படம்
நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளுக்காக வரும் ஆகஸ்ட் 7, 8ம் தேதிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பாதுகாக்கப்பட்ட அடர் வனப்பகுதி என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தர இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன ஆடி அமாவாசைக்குப் பிறகு தூய்மைப் பணிகளுக்காக ஆகஸ்ட் 15, 16ம் தேதிகளிலும் பக்தர்களுக்கு தடை விதிப்பு. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கோவையில், கட்டிடங்களுக்கு உதவும் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது, ரெனாகான் நிறுவனம்!!

படம்
கோவை மாவட்டம்,பசுமையான, வேகமான மற்றும் பாதுகாப்பான கட்டிடங்களைக் கட்ட, உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வகை, போர்டுகள் இந்தியாவிலேயே முதன்முறையாக லேமினார் ஃப்ளோ  டெக்னாலஜி ஐப் பயன்படுத்தி, பல நிலையான கட்டுமானத் தீர்வுககளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த ரெனாடஸ் குழுமம், தனது ரெனாடஸ் பிராடக்ட் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் மூலம் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது. பசுமையான, வேகமான மற்றும் பாதுகாப்பான கட்டிடங்களைக் கட்ட இந்த போர்டுகள் உதவும். 350 கோடி முதலீட்டில், ரெனாகான், ஆந்திரப் பிரதேசத்தின் நாயுடுப்பேட்டையில் ஏ.ஏ.சி பிளாக்ஸ்  ரேபிட் வால் பேனல்ஸ் மற்றும் ஃபைபர் சிமெண்ட் போர்டு ஆகியவற்றின் உற்பத்திக்காக உலகத் தரத்திலான ஒருங்கிணைந்த தொழிற்சாலையை நிறுவியுள்ளது. வெறும் 12 மாதங்களில் கட்டமைக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, உலகளவில் அளவுகோலாகக் கருதப்படும் லேமினார் ஃப்ளோ டெக்னாலஜி யை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தி, நவீன கட்டுமானத்தின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய துல்லிய-பொறியியல் வடிவமைப்பைக் கொண்ட நிலையான கட்டுமானப் பொருட்க...

நேற்று கத்திப்பாரா பகுதியில் 101 அடி உயரத்தில் நின்று “Drone Shot” வைத்து ரீல்ஸ் ஷூட்டிங் எடுத்த இன்றைய முதல்வர்!!

படம்
விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள கத்திப்பாரா பகுதி Red Zone-ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த பகுதியில் எந்தவித Drone-களும் பறக்க எவ்வித அனுமதியும் கிடையாது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாமல் ஒரு முதலமைச்சர் ரீல்ஸ் எடுப்பதற்காக No Fly Zone விதிகளை மீறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.  மத்திய அரசும், @DGCAIndia-வும் இதில் உடனடியாக தலையிட்டு வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ADMK IT WING  தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

மோடி அரசின் ஒடுக்குமுறை!!

படம்
வாட்சப் செயலி மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டது. காரணம், மாணவர் போராட்டம்! வாட்சப்பில் அனுப்பப்படும் செய்திகளுக்கு தொலைத்தொடர்புத்துறை வரையறுத்திருக்கிறது. ஆனால் மோடியின் முகநூல் பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு Meta-விடம் விளக்கம் கேட்டது. எங்களுக்கு யார் விளக்கம் தருவார்கள்? MP-களுக்கே இதுதான் கதி என்றால், டெல்லி காவல்துறை META கண்ணாடிகளை அணிந்து வேட்டையாடி வரும் மாணவர்களின் கதி என்னவாக இருக்கும்? மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன்! தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

மதுரை: சோழவந்தான் அருகே பட்டப்பகலில் வேலை பார்க்கும் இடத்திற்குள் புகுந்து இளைஞர் வெட்டிக் கொடூரக் கொலை!!

படம்
மதுரை: சோழவந்தான் அருகே பட்டப்பகலில் வேலை பார்க்கும் இடத்திற்குள் புகுந்து இளைஞர் வெட்டிக் கொடூரக் கொலை. தேங்காய் குடோனில் வேலை பார்த்து வந்த சஞ்சய் குமார் (23) என்பவரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை.  தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

நீட்க்கு எதிரான பரப்புரைக்கு தடை!.. தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி?

படம்
திமுக தலைவர். மு.க.ஸ்டாலின் கேள்வி? “திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்? கடந்த காலங்களில் அமைதியாக அறவழியில் கண்ணியத்தோடு போராட்டத்தை நடத்திய இயக்கத்தின் பரப்புரை பயணத்தை தடை செய்வது வன்மையாக கண்டனத்துக்குரியது”- மு.க.ஸ்டாலின். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

“நாடகம் அம்பலமாகிவிட்டது!”-முரசொலி தலையங்கம்!!

படம்
முதல்வா். விஜய் கா்நாடகா செல்வதாக தவெக மழுப்புகிறது, விஜய் பேசினாா் ஹெலிகாப்டா் தயாா் என்கிறாா் டி.கே.சிவக்குமாா். காவிாி நீர் விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரும், தமிழக முதல்வா் விஜயும் சோ்ந்து நடத்தும் நாடகம் அம்பலமாகி உள்ளது. மத்திய பாஜக அரசை எதிா்த்து பேசும் துணிச்சலும், காங்கிரஸ் கட்சியை கேள்வி கேட்கும் தைாியமும் விஜய் அரசுக்கு இல்லை தமிழ்நாட்டின் உரிமையை தாரைவார்க்கும் விதமாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் செயலை CM செய்யக்கூடாது தமிழ்நாட்டு காவிரி உரிமை சட்ட ரீதியாக நிலைநாட்டப்பட்ட ஒன்று, அதனை அடகு வைத்து விடக்கூடாது.  - முரசொலி தலையங்கம். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

அரிசி, மளிகைப் பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு!!

படம்
அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்டை மாநிலங்களில் அரிசி உற்பத்தி குறைவு, ஏற்றுமதி அதிகரிப்பு, ஆன்லைன் பதுக்கல் ஆகியவை விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. அரிசி விலை (கிலோ): - ஆர்.என்.ஆர். ₹63.50 → ₹71.15  - கோ-51 ₹35 → ₹45  - குண்டு இட்லி ₹39 → ₹41.55  - குருணை ₹25 → ₹30  - கர்நாடகா பொன்னி ₹51.95 → ₹61.50 மளிகைப் பொருட்கள் விலை (கிலோ): - குண்டு மிளகாய் ₹260 → ₹320, - உளுத்தம் பருப்பு ₹120 → ₹150 - தனியா ₹160 → ₹250 - கடலைப் பருப்பு ₹80 → ₹100   - பூண்டு ₹200 → ₹250 |  - துவரம் பருப்பு ₹130 → ₹140 - புளி ₹180 → ₹200 |  - சர்க்கரை ₹41 → ₹51 தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

நிலவன் டிவி செய்தி எதிரொலி!!

படம்
மதுரை:  நெல் பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில்  பள்ளி சிறுவர்கள் முதல் மர்ம நபர்கள் வரை மூடி கிடந்த மார்க்கெட்டில்  தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பயன்படுத்திய  இடத்தை உடனடியாக கதவு வைத்து மூடிய  தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும், மதுரை மாநகராட்சி ஆணையாளர் கெளரவ் குமார் (IAS)அவர்களுக்கும் பெண்வியாபாரிகள் நன்றியை தெரிவித்தார்கள். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!

படம்
🔹காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு. வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் 15 நாட்கள் நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு ஆணை. 🔹தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது என டி.கே.சிவக்குமார் மீண்டும் திட்டவட்டம். வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு. 🔹முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல அரசியல் தலைவர்கள், விவசாயிகள் எதிர்ப்பு. மக்களின் உரிமை பிரச்னை என்பதால், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவும் வலியுறுத்தல்... 🔹மேகதாது விவகாரத்தில் தவெக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. தவெக அரசை கண்டித்து வரும் 3-ம் தேதி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு. 🔹மேகதாது குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்துக்கொண்டே காரில் ஏரிச் சென்ற நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்.  🔹தண்ணீர் இல்லாமல், காவிரியின் கடைமடையான திருமருகல் ஒன்றியத்தில் கருகும் நெற்பயிர்கள். வயல், பாலம் பாலமாக வெடித்து குறுவை பொய்த்து போனதால் விவசாயிகள் வேதனை. 🔹யாருடைய அழுத்தத்துக்குப் பணிந்து திராவிட கழக பரப்புரைக்கு அனும...

நிர்வாகம் என்றால் என்ன, மாநில உரிமை என்றால் என்ன என்ற எந்த அடிப்படை அறிவுமே இல்லாத, முதுகெலும்பில்லாத கோழைகளைத் தேர்ந்தெடுத்தால் இதுதான் நடக்கும்! -திமுக ஐடி விங்!!

படம்
கர்நாடக முதல்வர் காவிரியில் தண்ணீர் திறக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் துச்சமாக மதித்துத் தூக்கி எறிகிறார்.  ஆனால், அதைப்பற்றிப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சற்றும் வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டே ஓடுகிறார்! தண்ணீர் தர மறுத்துக் கர்நாடகா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறது. ஆனால் இந்த டம்மி தவெக அரசோ, மைக்கை பார்த்தாலே பயந்து நடுங்கி ஓடுகிறது! திமுக ஐடி விங் தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கூட்டணியில் இருந்தே விஜய்க்கு எதிர்ப்பு..முடக்கிய போலீஸ்! கோபத்துடன் கேள்விகளை அடுக்கிய ஆளூர் ஷநவாஸ்!!

படம்
சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழகத்தின் வாகன பரப்புரைக்கு காவல் துறை தடை விதித்துள்ளது பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், திராவிடர் கழகம் நடத்த இருந்த நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்திற்கு தடைவிதித்து, பெரியார் திடலில் காவல்துறையை குவித்துள்ளது தவெக அரசு. இது கடும் கண்டனத்திற்கு உரியது எனவும், நீட் விலக்கும், நீட்எதிர்ப்பும் தமிழ்நாட்டின் கொள்கை. அது தவெகவின் கொள்கையா இல்லையா? என விசிக முன்னாள் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் வெடித்திருக்கும் நிலையில் தமிழகத்திலும் பரபரப்பு குறையாமல் நீட் எதிர்ப்பு முழக்கம் அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராகவும், உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுக்க வாகன பரப்புரை செய்யப்படும் என திராவிடர் கழகம் அறிவித்தது.அந்த பிரச்சார வாகனம் தமிழகம் முழுவதும் உலா வர இருக்கும் நிலையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் அனுமதி பெற்று கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் திருச்சியில் திராவிடர் கழகத்தின் வாகன ...

வேலூரில் பீடி தொழிலாளர்களின் வாழ்வாதரம் பாதுகாக்க, கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் பீடித்தொழிலாளர்கள் ஆர்பாட்டம்!!

படம்
வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்   தொழிலாளர்களின் வாழ்வாதரம் பாதுகாக்க, மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி   பீடி தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பீடித்தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர்சரவணன்  தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட பொதுசெயலாளர். நாகேந்திரன் உள்ளிட்ட திரளான பீடித்தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள் இதில்  பீடித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் மாதம் ரூ.6000/- வழங்கிடு 1947, 1966, 1976 பீடி சுருட்டு தொழிலாளர் வாழ்வாதாரம் பாதுகாக்க போடப்பட்ட சட்டங்களை பாதுகாத்தது அனைத்து பீடித் தொழிலாளர்களுக்கும் மருத்துவ அடையாள அட்டை வழங்கிடு அனைத்து பீடி மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். மருத்துவ வசதிகளை வழங்காதவரை மருத்துவ சேவைகளை இ.எஸ்.ஐ அனைத்து வகையான பரவலாக்கப்பட்ட உள்கட்டமைப்பு, மருத்துவர்கள், மருந்துகள் போன்றவற்றை முறையாக தொடர்ந்து வழங்கிடு, இ.எஸ்.ஐ. திட்ட உறுப்பினராக சேர்க்கப்படும் பீடித்தொழிலாளர்களின் பங்களிப...

பண்ருட்டி மனவளக்கலை மன்றம் சார்பில் நடைபெற்ற குரு பூர்ணிமா தின விழா !!

படம்
கடலூர் மாவட்டம்,ஆடி மாதத்தில் வரும் முதல் பெளர்ணமி தினம்தான் ‘குரு பூர்ணிமா’. இந்த குரு பூர்ணிமா தினத்தில் குரு பூஜை செய்வது வழக்கம். குரு பூர்ணிமாவை வியாச பூர்ணிமா எனவும் அழைக்கப்பட்டு வருகின்றது. இது பல காலங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. குரு பூர்ணிமா தினத்தில் கல்வியை போதித்த ஆசிரியரை வணங்கும் ஒரு நாள்.  இந்த தினத்தில் வேதம் படித்த மாணவர்கள் தங்களுடைய குருவை நினைத்து வணங்கும் ஒரு நாளாக இதை அனுஷ்டிக்கலாம். நம் பாரம்பரியத்தை நினைவில் வைத்துள்ள சில பள்ளிகள் இன்றளவும் குருவுக்கு பாத பூஜை செய்து குரு பூர்ணிமாவை பின்பற்றி வருகின்றது.  கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் குரு பூர்ணிமா விழா நடைபெற்றது.   மன்ற தலைவர் விஜயரங்கன் தலைமை தாங்கினார். மன்ற பொருளாளர் அபிராமி விஜயரங்கன் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ சாய் அருண் டிவிஎஸ் இயக்குநர் ராமமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  நிகழ்ச்சியில் தவம், துணை பேராசிரியர்களின் சிந்தனை, பேராசிரியர்கள் கெளரவித்தல் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது....

குடியாத்தத்தில் மாண்புமிகு கைத்தறி. துணி.நூல் மற்றும் கதர் துறை அமைச்சர். ம.விஜயபாஸ்கர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் ஒன்றியம் தட்டப்பாறை ஊராட்சியில் 8. வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைத்தார்!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை ஊராட்சியில் நபார்டு வங்கியின் மூலம் சுமார் ரூ.197.92. மதிப்பீட்டில் கட்டப்பட்ட எட்டு வகுப்பறைகளை பொறுப்பு அமைச்சர். ம. விஜய் பாலாஜி அவர்கள் இன்று காலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பி. எஸ்.லீலா அலெக்ஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.. இந்நிகழ்ச்சியில் கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர். தென்றல் குமார்.. வேலூர் சட்டமன்ற உறுப்பினர். வினோத் கண்ணா,குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர். சிந்து அழகப்பன், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர். சுதாகர்,முதன்மை கல்வி அலுவலர். ஆர். பிரேம்லதா மற்றும் ஜெயசுதா ஆகியோர் கலந்து கொண்டனர்  இதேபோல் மூங்கப்பட்டு ஊராட்சியில் சுமார் 45 லட்சத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர். லதா சுகுமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர். செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர். ஹேமலதா, வட்டாட்சியர். பிரியா,மாவட்ட மருத்துவ. அலுவலர் சதீஷ், பேரணாம்பட்டு வட்டாட்சியர். தேவி, பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர். மீனா உள்ளிட்டோர் பல அரசு அத...

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு நடத்திய வால்க் பார் நேச்சர் பெண்கள் விழிப்புணர்வு நடைப்பயணம்!!

படம்
கோவை மாவட்டம்,உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சர்வதேச சமூக மேம்பாடு அமைப்பு நடத்திய, வால்க் பார் நேச்சர் எனும் பெண்கள் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் ஹேப்பி பீரியட்ஸ் நிகழ்வின் எட்டாவது நிறைவு விழா கோவையில் உள்ள நிர்மலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம், எட்டாம் தேதியில் துவங்கி பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், கிராமங்கள், தொழில் நிறுவனங்களில், உள்ள சுமார் 30,000 பெண்களுக்கு பெண்களின் மாதவிடாய், சுகாதார விழிப்புணர்வு, இயற்கை பாதுகாப்பு அவசியம், பற்றிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.  இந்த நிகழ்ச்சியினை கல்லூரியின் செயலர் டாக்டர். குழந்தை தெரஸ் வழிகாட்டுதலின்படி, கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் தலைமை ஆசிரியர் டாக்டர் மேரி பபியோலா, ஆர்த்திடா குழுமத்தின் தலைவர் நீனா ஆர்த்திடா, பிடிஜி அறக்கட்டளை, மனிதவள மேம்பாட்டு நிர்வாகி சரண்யா பிரியா, ஹேப்பி பீரியட்ஸ் சாய் குமார், டிரஸ்ட் மேட் மருத்துவமனை டாக்டர் உத்ரா பிரியதர்ஷினி, ரியல் ரேலியப் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக்தங்கவேல், கோ ...

கோவையில் நோட்டரி வழக்கறிஞராக பொறுப்பேற்று ள்ள வழக்கறிஞர் புஸ்பாணந்தம், தமிழகம் முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு இலவச நோட்டரி கையேழுத்து போடுவதாக உறுதியளித்துள்ளார்!!

படம்
கோவை மாவட்டம், சிவாஜி காலனி பகுதியில் வழக்கறிஞர். புஸ்பாணந்தம் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு இன்று கூறியதாவது  விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பிறந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கோவை வந்த இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையாற்றி வருகின்றார். மேலும் இலவச சட்ட ஆலோசனை வழங்குதல், மரகன்றுகள் வழங்குதல், முதியோர் காப்பத்திற்க்கு உடை மற்றும் பொருளுதவி செய்து வருகிறார். மேலும் படிக்க வசதிகள் இல்லாத குழந்தைகளுக்கு மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு, கல்லூரி கட்டணம் செலுத்துதல், உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை, அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை என்ற அமைப்பின் மூலமாக செய்து வருகின்றார் கோவையில் உள்ள பல்வேறு சமூக அமைப்பு இவருக்கு பல்வேறு சேவை விருதுகளை வழங்கியுள்ளது. தற்போது கடந்த 13.07.2026 ம் தேதி முதல் மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக நியமித்துள்ளனர். நோட்டரி வழக்கறிஞராக தான் பொறுப்பேற்றதை தொடர்ந்து தான், உலகம் முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு நோட்டரி கையேழுத்து முற்றிலும் இலவசமாக போட்டு தருவதாக உறுதியளித்த்ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை செய்தியாளர் பட்...

சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து அனைத்து மாவட்ட செய்தியாளர்கள் எஸ்.பி-யிடம் புகார் மனு அளித்தனர். சோளிங்கரில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தாக்கிய தமிழக வெற்றிக் கழகம் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கபில் மற்றும் அவருடைய சகோதரர் உட்பட ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து அனைத்து மாவட்ட செய்தியாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் நேரில் சந்தித்து புகார் மனுவை வழங்கினார்கள்.இதனைத் தொடர்ந்து முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மாவட்ட செய்தியாளர்கள் அனைவரும் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.  ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

சூரிய கிரகண நிகழ்வை நேரலை செய்யும் நாசா!!

படம்
பூமியின் சில பகுதிகளில் மட்டுமே தென்பட உள்ள முழு சூரிய கிரகண நிகழ்வை, உலகெங்கிலும் உள்ள மக்கள் காணும் வகையில் நேரலை செய்கிறது நாசா. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நிகழவுள்ள முழு கிரகணத்தை, தனது சமூக ஊடகங்களில் நேரலை செய்ய உள்ளதாக அறிவிப்பு. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

தடையை மீறி இந்த பயணத்தை நடத்த முடியும். ஆனால், முதலில் சட்ட ரீதியாகவே அணுகுவோம்!”-தவெக அரசுக்கு திராவிடர் கழக தலைவர். கி.வீரமணி கண்டனம்!!

படம்
தவெக அரசுக்கு திக கடும் கண்டனம்! “சமூகநீதிப் பிரச்னையில் கை வைப்பது, சமூக விரோதச் செயல் என்பதைத் தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ளட்டும். அறவழியில் நடக்கவிருந்த நீட் தேர்வு எதிர்ப்பு இருசக்கர வாகனப் பிரசாரப் பயணத்தைத் தடை செய்த தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தந்தை பெரியாரை தமது ஆட்சியின் கொள்கை அடையாளமாக அறிவித்த தவெக அரசு, 'நீட் வேண்டாம் என்பது எங்கள் நிலைப்பாடு' என்று அறிவித்துவிட்டு அதற்கு மாறாக நடந்து கொள்வது மக்களின் அதிருப்தியைத்தான் சம்பாதிக்கும். தடையை மீறி இந்த பயணத்தை நடத்த முடியும். முதலில் சட்ட ரீதியாக அணுகுவோம்” -கி.வீரமணி, திக தலைவர். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

தவெக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!!

படம்
 திமுக ஆர்ப்பாட்டம்! விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை கண்டித்து வரும் ஆக.3ம் தேதி தஞ்சாவூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

குடியாத்தம் நகராட்சி கூட்டம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் குடியாத்தம் நகராட்சி ஆணையரை கண்டித்து நகர மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் 36 வார்டு கொண்ட நகராட்சி ஆகும்  நகராட்சியில் நகராட்சி ஆணையராக தனலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார்.  கடந்த சில நாட்களாக குடியாத்தம் நகராட்சியில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சியும் நகர மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. கடந்த திமுக ஆட்சியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்து முடித்த எந்த ஒரு நிதியையும் வழங்கவில்லை என்றும்  நகராட்சி ஆணையர் தன்னிச்சையாக   செயல்பட்டு வருவதாகவும்  அதுமட்டுமின்றி குடியாத்தம் ஒன்பதாவது வார்டில் போடப்பட்ட சிமெண்ட்  சாலை  கடந்த திமுக ஆட்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அமலு அவர்களின் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு போடப்பட்ட சாலையை  தற்போது  தமிழக வெற்றி கழகத்தின் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து அவர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான தார் சாலையை போட்டதாக பொதுமக்களிடம் பொய்யான தகவலை கூறியது கண்டிக்கத்தக்கது என்றும்  இதனால் இன்று குடியாத்தம் நகர மன்ற கூட்டத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் குடியாத்தம் நகராட்சி ஆணையரை கண்டித்து ந...

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சித்தலைவர். மு.அருணா IAS !!

படம்
புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், இந்தியாவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர், இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர். மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (30.07.2026) அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.சுப்ரமணியன் அவர்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.எஸ்.கலைவாணி அவர்கள், ஆதீன சந்நிதானம் திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் .பிரகாஷ்; மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள், பயிற்சி செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.