இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேனியில் நடைபெற்ற பாஜக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்!!

படம்
தேனி மாவட்டத்தில் பாஜ௧ தலைமை அலுவலகத்தில் போடி, ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர். இராஜபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மூன்று சட்டமன்ற பாஜ௧ நிர்வாகிகள் கலந்துகொண்டு வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.

அரக்கோணம் மளிகை வியாபாரிகளிடம் ஆதரவு!அதிமுக வேட்பாளர். சு.ரவி சேகரித்தார்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம்  மளிகை வியாபாரிகள் சங்க அலுவலகம் தர்மராஜா கோவில் அருகில் உள்ளது இங்கே ஒன்று கூடி இருந்த மளிகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்; அங்கத்தினர்களை அரக்கோணம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர். சு.ரவி எம்.எல்.ஏ கட்சி நிர்வாகிகள் உடன் வந்திருந்தார். அப்போது நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.  கூட்டத்தில் பேசிய வேட்பாளர்.சு. ரவி கடந்த அதிமுக ஆட்சியின் போது பல்வேறு திட்டங்களை நமது தொகுதிக்கு கொண்டு வந்திருக்கிறேன் அதே போன்று மேலும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதுடன் மளிகை வியாபாரிகளின் கோரிக்கைகளையும் உடனுக்குடன் சரி செய்து தருவேன் ஆகவே எனக்கு வணிகர்கள் முழு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார் அதற்கு கூடியிருந்த நிர்வாகிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

ஏப்ரல் 1 முதல் E20 பெட்ரோல்!!

படம்
ஏப்ரல் 1 2026 முதல் E20 பெட்ரோல் விநியோகிக்கப்படும்.E என்பது எத்தனால். எத்தனால் என்பது சர்க்கரை கரும்பு மக்காச்சோளம் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை எரிபொருள். 80 சதவீதம் பெட்ரோலும் 20 சதவீதம் எத்தனாலும் கலந்த கலவையை இனி உபயோகத்திற்கு வரும். E10 வகை பெட்ரோல் உபயோகத்தில் இருந்தது.  E20 பெட்ரோல் RON 95 என்ற தரத்தில் இருக்கும். RON என்றால் ரிசர்ச் ஆக்டேன் நம்பர் என்பதாகும் பெட்ரோலின் தரத்தை அளக்கும் அளவீடு தான் இது. RON 91 என்பது சாதாரண பெட்ரோல். RON 95 என்பது தரத்தில் உயர்ந்த பெட்ரோல். RON அளவு அதிகமாக இருந்தால்தான் இன்ஜினில் knocking குறைவாக இருக்கும். Knocking  என்றால் என்ஜினுக்குள் எரிபொருள் முறையாக எரியாமல் இருந்தால் உருவாகும் சத்தம் தான் அது.இந்த சத்தம் வர காரணம் என்ஜின்  அதிக வெப்பமடைவதாலும் குறைவான எரிபொருள் பயன்பாட்டாலும் உருவாகிறது. RON அளவு அதிகமாக இருந்தால் சிறந்தது. இந்த E20 பெட்ரோல் பயன்பாட்டுக்கு வர காரணம்  1, வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதியை குறைக்க  2, சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்க 3, உள்நாட்டு விவசாயிகளுக்கு ஆதரவு  (எத்தனால் தயாரிக்க கரு...

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பாங்கு வளர்க்க வானவில் மன்றம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கு!!

படம்
வேலூர் மாவட்டம், காட்பாடி வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு பாராட்டு! அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லை யில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் ‘வானவில் மன்றம்’ திட்டம் பள்ளிக் கல்வித் துறையின் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  இந்த கல்வியாண்டில் இறுதி நிகழவாக வேலூர் மாவட்டத்தில் உள்ள கருத்தாளர் களின் பணிகளை பாராட்டி கேடையம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.வேலூர் மாவட்ட அளவிலான வானவில் மன்றத்தின் கருத்தாளர்கள் மார்ச் மாத மீளாய்வு வேலை அறிக்க சமர்பித்தல் மற்றும் கருத்தாளர்களின் பணிகளை பாராட்டி கேடையம் வழங்கும் நிகழ்வு இன்று வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிகல்வி கூட்ட அரங்கில் நடை பெற்றது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா அவர்கள் பங்கேற்று கருத்தாளர்களின் வேலை அறிக்ககளை ஆய்வு செய்தார் மேலும் அவர்களின் பணிகளை பாராட்டி தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்ட பாராட்டு கேடையங்களை வழங்கி பேசினார். வேலூர் ஒருங்கிணை ந...

பணி ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி காசாளர். தினகரனுக்கு சிவில் ஓய்வூ தியர் கூட்டமைப்பினர் சார்பில் பாராட்டு!!

படம்
வேலூர் மாவட்டம், பணி ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி காசாளர் சிவில் ஓய்வூ தியம் பெறுவோர் கூட்டமைப்பின்  சார் பில் திருவண்ணாமலை மாவட்டம் செய் யாறு வட்டம் செங்காடு இந்தியன் வங்கி யின் காசாளராக 26 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற அ.தினக ரனுக்கு பாராட்டு விழா வங்கி கிளை வளாகத்தில் நடைபெற்றது. இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் விகாஸ் சோப்ரா தலைமை தாங்கினார்.   உதவி மேலாளர் போஸ் சந்திரகாந்த் வரவேற் றுப் பேசினார். வங்கி அலுவலர்கள் ரஞ்சித்குமார் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வங்கியின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.  சிவில் ஓய்வூதியர் கூட்டமை ப்பின் செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பிலும் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் பொன்னாடை போர்த்தி பாராட்டி பேசினார்.ஓய்வு பெற்ற சார் பதிவாளர் க.சக்கரவர்த்தி, சென்னை ச.கோபாலகிருஷ்ணன், ஆற்காடு ஜி.கணேஷ், நகை மதிப்பீட்டாளர் ராஜி, தினேஷ், குப்புலட்சுமி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பலராமன், ஞான சௌந்தரி, நிர்மலா, விஜயன் வ...

மதுரை சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் நடைபெற்ற சோமவார பிரதோஷ விழா!!

படம்
மதுரை மாவட்டம்,மதுரை  சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், சோமவார பிரதோஷ தந்தை யொட்டி, இக் கோயிலில் உள்ள நரசிம்மர், சனீஸ்வர லிங்கம், நந்திபகவான், பிரளயநாத சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது. விழாவில், தொழிலதிபர் எம்.மணி, கவுன்சிலர்கள். வள்ளி மயில், டாக்டர். மருது பாண்டியன், கோயில் செயல் அலுவலர். ராஜா, கணக்கர். சி. பூபதி, எழுத்தர். கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் மதுரையில் உள்ள கோயில்களில் சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது.  திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர், துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோயில், வரசித்தி விநாயகர் கோயில், சௌபாக்ய விநாயகர் கோயில்களில் சோமவார பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் சுவாமி கோயில் விழா! ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கறிவிருந்து நிகழ்ச்சி!!

படம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள உலுப்பகுடியில் வேட்டைக்காரன் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவையொட்டி ஆண்டு தோறும் இங்குள்ள தெற்குத் தெரு பகுதி மற்றும் வடக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர்களில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கறிவிருந்து சமையல் செய்து அன்னதானம் நடைபெறும்.  இதில் சுற்றுவட்டார பகுதிகளான புன்னப்பட்டி, காட்டுவேலம்பட்டி, குட்டூர், வேலாயுதம் பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் ஆண்கள் வரிசையில் வந்து நின்று கறிவிருந்து அன்னதானத்தை தங்கள் பாத்திரங்களில் வாங்கிச் சென்று வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் உண்டு மகிழ்வர். இதையொட்டி கடந்த 23-ஆம் தேதி இரவு உலுப்பகுடி தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கறிவிருந்து சமையல் செய்து அன்னதானம் நடந்தது. இதைப்போலவே வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு 50 கிடாய்கள் வெட்டி 50 சிப்பம் அரிசியில் கம, கம கறிவிருந்து திங்கட்கிழமை இரவு முதல் விடிய விடிய தயார் செய்து அங்குள்ள வேட்டைக்காரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்ததையொட்டி சாமிக்கு படையலிட்டு செ...

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களுக்கு MCMC குழுவின் முன்அனுமதி கட்டாயம்! ஜெ.யு.சந்திரகலா IAS !!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026: அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களுக்கு MCMC குழுவின் முன்அனுமதி கட்டாயம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள்  தகவல்! தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 - ஐ, முன்னிட்டு,  இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  "ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு" (MCMC) அமைக்கப்பட்டு  செயல்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்கள் பின்வருமாறு: 1. மின்னணு மற்றும் சமூக ஊடகங்களுக்கான விதிகள் (Electronic & Social Media): தொலைக்காட்சி, உள்ளூர் கேபிள் டிவி, வானொலி (FM), சமூக வலைத்தளங்கள் (Facebook, X, Instagram, YouTube), இணையதளங்கள், திரையரங்குகள், பொது இடங்களிலுள்ள டிஜிட்டல் திரைகள் மற்றும் மொபைல் போன் வழி குறுஞ...

மதுரை : மதுரை வர்த்தக சிலிண்டர் பற்றாக்குறையால் கடைகளில் களம் இறங்கிய ராக்கெட் அடுப்பு!!

படம்
மேற்கு ஆசிய போர் காரணமாக வர்த்தக சிலிண்டர் பற்றாக்குறையால் மதுரையில் பெரும்பாலான டீக்கடை, வடை கடைகள், ஹோட்டல்கள் அடைக்கப்பட்டு வருகின்றன . சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக மதுரையில் வடை கடையில் பயன்படுத்தி வரும் ராக்கெட் அடுப்பு வாடிக்கையாளர்களையும், பொதுமக்களையும் கவர்ந்து வருகிறது.  தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

குடியாத்தம் சட்டமன்றத் தனி தொகுதி வேட்பாளர். ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் குடியாத்தம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம் செதுக்கரை 15 ஆவது வார்டு பகுதியில். அனைத்திந்திய அண்ணா திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர். ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள். வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிகள் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்.தென்றல் குட்டி அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள். நிவாகிகள் 15 வார்டு. பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு ‌ தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். உடன் நகர கழக செயலாளர் ஜே. கே. என். பழனி 15 ஆவது வார்டு கழக செயலாளர். வழக்கறிஞர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.  குடியாத்தம் செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

குடியாத்தத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர்.ஜி. பரிதா புருஷோத்தமன் அறிமுக கூட்டம்!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் 2026 சட்டமன்ற தனி தொகுதி அனைத்திந்திய அண்ணா திமுக சார்பாக போட்டியிடும்  வேட்பாளர். ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் அறிமுக கூட்டம்  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர். த.வேலழகன் . தலைமை தாங்கினார்.  இதில் முன்னாள் அமைச்சர். கே. சி. வீரமணி ,நகர கழக செயலாளர். ஜே. கே. என். பழனி ,கே. வி. குப்பம் . சட்டமன்ற வேட்பாளர். ஜெகன் மூர்த்தியார், ஒன்றிய செயலாளர். சிவா, பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர். பொகளூர். பிரபாகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிஜேபி தசரதன். பாமக. குமார்,புதிய நீதி கட்சி. சரவணன், புரட்சி பாரதம் கட்சி. மேகநாதன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம். குணசேகரன் உள்ளிட்ட பல கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிலவன் டிவி செய்திகளுக்காக குடியாத்தம் செய்தியாளர் .கே. வி ஆர்.

சண்சரண் சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா!!

படம்
மதுரை :  சண்சரண் சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் “முப்பெரும் விழா” முன்னிட்டு 20 புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டில் 9 மாதங்களில் எழுதப்பட்ட 20 புதிய சாதனை நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் பாடநூல், இதழ் மற்றும் கல்வியியல் நிறுவனங்களில் பணியாற்றிய முனைவர் சண்முகதிருக்குமரனின் நூல்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில்,  மாணவர்கள், வானொலி தொகுப்பு விரிவுகள் மற்றும் இதயம் கவர்ந்த கவிதைகள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் வெளியிடப்பட்டன. மேலும், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சி   டாக்டர் பி.எஸ். ராகேந்திரன் தலைமை தாங்கினார். தொடர்ந்து, தேவகி மருந்துவமனை மற்றும் மதுரை சார்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்வில், மாண்புமிகு  நீதியரசர் திரு. எஸ். விமலா அவர்கள் முன்னிலை வகித்தார். மௌனத்தை முறியடித்த மலர்கள் என்ற தலைப்பில் மனிதநேய மாமணி *ஸ்டார் குருசாமி* அவர்கள் எழுச்சி உரையாற்றினார் மேலும் உயர் நீதிமன்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாகனத்தை வழி மறித்து தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை!!

படம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வாகனத்தை வழிமறித்த அதிகாரிகள், அதில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் முழுமையான சோதனை மேற்கொண்டனர்.  முதல்வரின் வாகனம் என்ற பாகுபாடின்றி தேர்தல் ஆணையத்தின் விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்ட இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையின் முடிவில் எவ்வித ஆட்சேபனைக்குரிய பொருட்களும் கண்டறியப்படாததைத் தொடர்ந்து, முதல்வரின் வாகனம் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கோவை ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த் எனும் க்ளப் தொடக்கம் புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு!!

படம்
கோவை மாவட்டம்,ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த், ஆர். ஐ மாவட்டம் 3203 சார்டர் இன்ஸ்டாலேஷன் விழா கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த ஜோதிபுரம் பகுதியில் உள்ள கே. வி. என். மஹாலில் நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஆப் காரமடை ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும், மணி அடித்தும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஸ்பான்சர் கிளப் ரோட்டரி கிளப் ஆப் காரமடை தலைவர் ரோட்டேரியன் எம்.பி.ஹெச்.எப் குமணன் நடராஜன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து புதிதாக தொடங்கப்பட்ட ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த் கிளப்பில் இணைந்த உறுப்பினர்களுக்கு பதவியேற்பு சத்தியப்பிரமாணத்தை அசிஸ்டண்ட் கவர்னர் ரோட்டேரியன் விஜய் பிரபு நடத்தி வைத்தார். அதையடுத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் ரோட்டரி கிளப் பேட்ஜ் அணிவிக்கப்பட்டு உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். இதில் ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த் சார்ட்டர் தலைவராக ரோட்டேரியன் முகமது ஹனீஃப், சார்ட்டர் செயலாளராக ரோட்டேரியன் ராஜசேகர், சார்ட்டர் பொருளாளராக ர...

யாருடனும் கூட்டணி இல்லை” -முஸ்லிம் மக்கள் கழகம் திடீர் அறிவிப்பு!!

படம்
2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முஸ்லிம் மக்கள் கழகம் திடீர் திருப்பமாக “யாருடனும் கூட்டணி இல்லை” என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில், முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச. சு. ஜைனுதீன் தலைமையிலான நிர்வாகிகள், திராவிட முன்னேற்றக் கழகம் மாநில அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி அவர்களை சந்தித்து, 2026 தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். ஆனால் அதன்பிறகு முஸ்லிம் மக்கள் கழகத்தை அதிகாரப்பூர்வமாக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்காதது கட்சிக்குள் அதிருப்தியை கிளப்பியதாக கூறப்படுகிறது. “மரியாதை இல்லாத கூட்டணியில் இடமில்லை” என்ற மனநிலையே இந்த முடிவுக்கு காரணம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, “வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் எவருக்கும் ஆதரவு இல்லை; மாநிலம் முதல் நகரம், ஒன்றியம், மகளிர் அணி வரை அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் பிஜேபி அல்லாத கூட்டணி வேட்பாளர்களுக்கு தனிப்பட்ட விருப்பப்படி வாக்களிக்கலாம்” என முனைவர் ஜைனுதீன் அறிவித...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு!!

படம்
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

நீண்டகால ஆசை... – சொல்கிறார்! திருமா!!

படம்
தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு நீண்டகாலமாக உண்டு. நாடாளுமன்றத்தில் என்ன பேசினாலும் தமிழ்நாடு சட்டமன்றம்தான் தமிழ்நாட்டின் முகம். அமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை, MLAவாக இருந்தாலே போதும். – காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர். தொல். திருமாவளவன் பேட்டி! தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.
படம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர். மகாராஜன் அவர்களுக்கு ஆண்டிபட்டியில் உற்சாக வரவேற்பு !அலைகடலென திரண்ட திமுக கழகத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆண்டிப்பட்டி செய்தியாளர் தனலட்சுமி.

பெண்களுக்குதான் வலி தெரியும்!திமுக எம்.பி. கனிமொழி!!

படம்
பெண்களுக்கு எந்த பொருள் தேவையோ இந்த ₹8000 கூப்பன் மூலமாக வாங்கிக் கொள்ளலாம். ஒரு வாஷிங்மெஷின் வாங்கினால் கையால் துணியை துவைக்கத் தேவையில்லை. அந்த நேரம் அவர்களுக்கு மிச்சப்படுகிறது. அந்த நேரத்தில் வேறு வேலை செய்ய முடியும். நாங்கள் எல்லாருக்கும் ஒரு ஃபிரிட்ஜ் கொடுக்கலாம். ஆனால் சில பெண்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் வைத்திருக்கலாம். அவர்களுக்கு வேறு பொருள் தேவைப்படலாம். அதனால்தான் இந்த கூப்பன் முறை. பெண்களின் வேலைச் சுமையை குறைக்கும்பொருட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே அந்த வலி தெரியும். அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக எம்.பி. கனிமொழி விளக்கம்! தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கம்பத்தில் தவெக கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தவெக வினர் போராட்டம்!!.

படம்
தேனி மாவட்டம், கம்பத்தின் தவெக வேட்பாளராக ஜெகநாத் மிஸ்ராவை அறிவித்ததை எதிர்த்து, கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தவெக வினர் போராட்டம். சுபாஷ் சந்தர் என்பவரை முன்வைத்து கட்சி பணிகளை மேற்கொண்ட நிலையில், வேட்பாளரை கடைசி நேரத்தில் மாற்றியதால் ஆதங்கம் வேட்பாளரை மாற்றாவிட்டால் கம்பம் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் பேட்டி! ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.

அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் போராட்டம் அறிவிப்பு!!

படம்
கன்னியாகுமரி மாவட்டம்,பெஸி ஜெனட் (வயது 73) செம்பவிளை ஊரில் வசிக்கும் இவருக்கு சொந்தமான மனை ஒன்றில் அரசு அலுவலகங்களின் தவறுதலா வட்ட அளவு கூடுதலாக பதியப்பட்டுள்ளது அதை பத்திர ஆவண அளவு படி பட்ட அளவை சரி செய்து கேட்டு தக்கலை சார் ஆட்சியாளர் அவர்களிடம் மனு கொடுத்து பல மாதங்கள் ஆகியும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை பின்பு ஞ் அகில இந்திய மக்கள் நல கழக மாநில தலைவர் டாக்டர் பி. சிவகுமார் அவர்கள் மாவட்டங் ஆட்சியாளருக்கும் தக்கலை சார் ஆட்சியாளர் அவர்களுக்கும் பெசி ஜெனட் அவர்களின் வட்ட அளவை சரி செய்து கொடுக்க வேண்டி மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . பெசி ஜெனட் அவர்கள் 73 வயதான சீனியர் சிட்டிசன் ஆவார் அவர்களை அரசு அலுவலர்கள் பல மாதங்களாக அலைக்கழித்து வருகின்றனர் . இதனால் அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் எனவே அகில இந்திய மக்கள் கழக மாநில தலைவர் டாக்டர் சிவகுமார் தலமையில் பொறுப்பாளர்கள் மற்றும்  அனைவரும் சேர்ந்து தக்கலை கல்குளம் வட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்கள். தென் மண்டல செய்தியாளர் சின்னத்த...

என்.பி.எஸ்.சி குரூப் 1, 1ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு; செக் செய்வது எப்படி?

படம்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி வனப் பாதுகாவலர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. மொத்தம் 72 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 2.49 லட்சம் தேர்வர்கள் எழுதினர். இந்த குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இந்த முதன்மைத் தேர்வு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தநிலையில் குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (மார்ச் 30) தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் மற்றும் சான...

நத்தம் அருகே சமுத்திராப் பட்டியில் நடைபெற்ற மந்தை பகவதி அம்மன் கோயில் திருவிழா!!

படம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திராப்பட்டியில் உள்ள மந்தை பகவதி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு அங்குள்ள ஊரணியிலிருந்து கரகம் அலங்கரிக்கப்பட்டு அம்மன் சர்வ அலங்காரத்தில் மேளதாளம் முழங்க அதிர் வேட்டுகளுடன் கோயிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தனர். திங்கட்கிழமை  காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து அக்னிச்சட்டி, பால்குடம் போன்றவைகள் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு அம்மன் சர்வ அலங்காரத்தில் மேளதாளம் முழங்க,  வர்ணக்குடை, அதிர்வேட்டுகளுடன் மின்ரதத்தில் ஊர்வலமாக சென்று இருப்பிடம் போய் சேர்ந்தது. இதில் சடையம்பட்டி, நத்தம், சம்பைப் பட்டி, ஏரக்காபட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த பத்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சமுத்திராப் பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

நத்தம் கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழா!!

படம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பங்குனி மாத பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர்,சந்தனம், விபூதி ,புஷ்பம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து மூலவர் கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும்,தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

தவெக தலைவர். விஜய் மீது வழக்கு!!

படம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர். விஜய், நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.  கையோடு, கொளத்தூரில் பரப்புரை மேற்கொண்டிருந்தார்.  பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக, அவர் மீது காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் மரியாதை!!

படம்
தமிழக பேரவைத் தேர்தல் பரப்புரையை தொடங்கும் முன்பு 'கலைஞர்’ நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

தமிழக முதல்வருக்கு நன்றி! தெரிவித்த தமிமுன் அன்சாரி!!

படம்
எங்கள் மீதான முதலமைச்சரின் அக்கறையை வெளிப்படுத்த இப்போது வார்த்தைகள் இல்லை” -தமிமுன் அன்சாரி. -தமிமுன் அன்சாரி நெகிழ்ச்சி! “அன்பும், பண்பும் நிறைந்த ஒரு சந்திப்பை சிதம்பரம் தொகுதியின் வெற்றிக்காக முதலமைச்சர் இப்படி ஏற்பாடு செய்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. எங்கள் மீதான முதலமைச்சரின் அக்கறையை  வெளிப்படுத்த இப்போது வார்த்தைகள் இல்லை. உங்கள் அன்புக்கும், புரிதலுக்கும், நம்பிக்கைக்கும் பல கோடி நன்றிகள் முதல்வரே" திமுக கூட்டணி கட்சிகளின் தேநீர் விருந்திற்கு பிறகு தனி அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்த சந்திப்பு குறித்து மஜக தலைவர். தமிமுன் அன்சாரி நெகிழ்ச்சி! தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கரூரில் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி வாக்கு சேகரிப்பு!!

படம்
கரூர் மாவட்டம்,கரூர் தொகுதி திமுக வேட்பாளர். தியாகராஜனை ஆதரித்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி  கோடங்கிபட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு! தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டும் கருத்தரங்கு – மவுண்ட் சீயோன் கல்லூரி முன்முயற்சி!!

படம்
புதுக்கோட்டை, மாவட்டம்,மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (தன்னாட்சி) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு, மார்ச் 30, 2026 அன்று கல்லூரியின் கருத்தரங்கக் கூடத்தில், “இந்தியாவில் ஆராய்ச்சி நிதி வாய்ப்புகள்: முகமைகள் மற்றும் உத்திகள்” எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி, மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறைத் தலைவர் திவ்யபிரசாத் ஆற்றிய வரவேற்புரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, கல்லூரியின் இயக்குநர் முனைவர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் தொடக்கவுரை ஆற்றினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினருக்கு, கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. பாலமுருகன் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார். வாழ்த்துரையை, முதன்மையர் (ICT) முனைவர் ச. ராபின்சன் வழங்கினார். இக்கருத்தரங்க அமர்வை, சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Madras) பயன்பாட்டு எந்திரவியல் துறைப் பேராசிரியர் ஆரோக்கியராஜன் வழிநடத்திச் சென்றார். இந்தியாவில் உள்ள பல்வேறு நிதி வழங்கும் முகமைகள், ஆராய்ச்சி மானியங்களைப் பெறுவதற்கான பயனுள்ள உத்திகள், ஆராய்ச்சி முன்மொழிவு எழுதும் நுட்...

அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி ஏழுவேட்பாளர்கள் அறிவிப்பு!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி தலைமை அலுவலகம் அரக்கோணம் விண்டர் பேட்டையில் உள்ளது இங்கு நேற்று மார்ச் 30 தேதி வேட்பாளர்கள் நியமன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திய நிறுவன தலைவர் பிரதம பேராயர் டாக்டர். ஐசக் அய்யா பின்வரும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார். அதில் நியமனம் செய்யப்பட்டவர்கள் விவரங்கள் வருமாறு அரக்கோணம் தொகுதிக்கு ஸ்ரீதர் அவர்களும், சோளிங்கர் தொகுதிக்கு எஸ்ரா அவர்களும், செங்கல்பட்டு தொகுதிக்கு வெஸ்லி அவர்களும், அச்சரப்பாக்கம் தொகுதிக்கு பஞ்சாட்சரம் அவர்களும், விழுப்புரம் தொகுதிக்கு சைமன் அவர்களும்,உத்திரமேரூர் தொகுதிக்கு வெங்கடராமன் அவர்களும் காஞ்சிபுரம் தொகுதிக்கு ஜெய்சன் அவர்களும் என ஏழு தொகுதிக்கு ஏழு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிகார பூர்வமான அறிவிப்பு. முதல் பட்டியலை வெளியிட்டார். மாநில செயலாளர் தேவசித்தம் இளைஞானி செயலாளர் சத்தியன் ஆகியோர் உடனிருந்தனர். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

விஜய்க்கு மொத்தம் ரூ.520 கோடி சொத்து: வேட்புமனுவில் தகவல்!!

படம்
ரூ.520 கோடி தன்னுடைய வேட்புமனுவில் மொத்த சொத்து மதிப்பாக விஜய் குறிப்பிட்டுள்ளார். இதில் ரூ.404.58 கோடி அசையும் சொத்துகள் ரூ.115.13 கோடி அசையா சொத்துகள் எனக் கூறியுள்ளார். விஜயின் அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என குடும்பத்தில் அனைவருமே விஜய்க்கு கடனாளிகள். மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடி, அப்பா சந்திரசேகருக்கு ரூ.3 கோடி, அம்மா ஷோபாவுக்கு ரூ.87 லட்சம், மகன் ஜேசனுக்கு ரூ.8 லட்சம், மகள் ஷாஷாவுக்கு ரூ.4 லட்சம் கடன் வழங்கியுள்ளார் விஜய். விஜய்யிடம் BMW 530, Toyoto Lexus 350, Toyoto vellfire, BMW 17, Maruti Swift, TVS XL SUPER என ரூ.7.52 கோடி மதிப்பிலான வாகனங்கள் உள்ளன. விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தகவல். சுமார் ரூ.3.44 கோடி வருவாய் தொடர்பாக 4 வருமான வரி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேட்புமனுவில் விஜய் தகவல். சுமார் ரூ.1.64 கோடி மதிப்பிலான கடன் பொறுப்புகள் தகராறில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தன்னிடம் ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளி, மனைவி சங்கீதாவிடம் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம், ரூ. 1 கோடி மதிப்பிலான வைரம் உள்ளதாக தெரிவித்துள்ளார் விஜய். நடிப்பை ...

குடியாத்தம் ஆர்யா. வித்யாஷராம். C B S E. பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சென்றராம்பல்லியில் அமைந்துள்ள ஆர்யா வித்யாஷராம்.  C B S E. பள்ளியில் .10‌‌. ம். ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு. பள்ளியின் நிறுவனர். ரமேஷ் குமார் தலைமை தாங்கினார்.  இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர். ஓய்வுபெற்ற லோக மணி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டது. இதில் பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.   குடியாத்தம் செய்தியாளர் கே. வி. ஆர்.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் குடும்பம்: 3 பேர், 3 கட்சி, 3 தொகுதிகள்!!

படம்
லால்குடியில் அ.தி.மு.க. வேட்பாளராக மார்ட்டினின் மனைவி லீமா ரோஸும், வில்லிவாக்கத்தில் த.வெ.க. வேட்பாளராக மருமகன் ஆதவ் அர்ஜுனாவும் களமிறங்குகின்றனர். அதேபோல் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி வேட்பாளராக மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிடுகிறார். 1990, 2000ஆம் காலகட்டத்தில் தமிழகத்தில் லாட்டரி விற்று கோடிகளை குவித்தவர் மார்ட்டின். பல ஆயிரம் குடும்பங்கள் இந்த லாட்டரி விற்பனையால் சீரழிந்து போயின. இப்போது ஒரே குடும்பத்தில் இருந்து 3 பேர் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடுகின்றனர். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

JEE MAINS APRIL தேர்வுகள் 02.04.2026 அன்று முதல் 08.04.2026 வரை நடைபெற உள்ளன!!

படம்
JEE MAINS APRIL தேர்வுகள்: தேர்வுக்கு செல்லும் குழந்தைகள் தேர்வு தொடங்கும் நேரத்திற்கு 1.30 மணி நேரம் முன்னதாக செல்வது நல்லது. உடன் எடுத்து செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள். 1. ADMIT CARD Print out 2. ஆதார் Card  3. (ஆதார் Card-ல் பிழை இருப்பின் +2 Hall Ticket எடுத்து செல்லலாம்) 4. Passport Size Photos - 2 5. Transparent pens 6. Transparent water Bottle. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

விஜய் வேட்பு மனுவில் வெளியான தகவல்!!

படம்
விஜயின் தொழில்கள் - வேட்புமனுவில் வெளியான தகவல்கள்: 📍. சுய தொழில் 📍. விஜய் வித்யாசரம் - தாளாளர் 📍. ஜெயா நகர் பிராபர்டி - மேலாண்மை இயக்குநர். 📍. வித்யா சாரிடபுள் டிரஸ்ட் - TRUSTEE* 📍: விஜய் சாரிடபுள் டிரஸ்ட் - TRUSTEE* 📍 சாய் விஜய் சாரிடபுள் டிரஸ்ட் - TRUSTEE      வருவாய் ஆதாரங்கள் ▪️. சுய தொழில் ▪️. வட்டி ▪️. சொத்துகளின் வாடகை வருவாய் தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

முதல்வரின் அசையும் சொத்து ரூ.3.30 கோடி.!!

படம்
முதல்வர் மு க ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி என வேட்புமனுவில் தகவல். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி அசையும் சொத்து உள்ளதாக தகவல். அசையா சொத்த்தாக முதல்வர் ஸ்டாலின் பெயரில் ரூ.2.95 கோடியும்  மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.2.10 கோடி உள்ளது. தனக்கு சொந்தமாக கார் கூட இல்லை என சொத்து விவரத்தில் தெரிவிப்பு. சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரம் வெளியானது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

பூந்தமல்லி தொகுதியின் தவெக வேட்பாளர் மீது திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாலியல் சீண்டல் புகார்!!

படம்
பூந்தமல்லி தொகுதியின் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரகாசம் குட்டி மீது கட்சியின் மகளிரணியைச் சேர்ந்த பெண், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாலியல் சீண்டல் புகார் பாலியல் சீண்டல் குறித்து கட்சித் தலைமையிடம் 6 மாதங்களுக்கு முன்பே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அப்பெண் பேட்டி! தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.