விழுப்புரம் அருகே 4 ஏக்கர் பரப்பளவில் தனிநபர் விவசாயி கொய்யாக்கன்று பயிரிட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் சென்று ஆய்வு!
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேமங்கலம் ஊராட்சியில், தோட்டக்கலைத்துறை சார்பில், 4 ஏக்கர் பரப்பளவில் தனிநபர் விவசாயி கொய்யாக்கன்று பயிரிட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இருவேல்பட்டு ஊராட்சியில், வேளாண்மைத்துறையின் கீழ், இயங்கும் விதை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்