இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரக்கோணம் எம்.ஆர்.எப் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எம்.ஆர்‌ எப் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் தேசிய ஒருங்கிணைப்பாளர் அகில இந்திய இளைஞர் அணி காங்கிரஸ் வழக்கறிஞர். நரேஷ் குமார்,  ஒன்றிய கவுன்சிலர். ஆஷா பாக்கியராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அரக்கோணம் இச்சிப்புத்தூரில் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது.  இங்கு ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தங்களுக்கு சம்பள உயர்வு, நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று உணவு வசதி, பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடத்தில் தொழிற்சாலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தொழிலாளிகள் கலைந்து சென்றனர். ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

சென்னை மாமன்ற உறுப்பினர் இளைய அருணாவிற்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்!

படம்
சென்னை ராயபுரம் ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை முதல் அண்ணா பூங்கா இதற்கு இடையில் டிரைனேஜ் பள்ளம் தோண்டப்பட்டது. கடந்த இரண்டு மாதமாக வேலை மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இதை மாமன்ற உறுப்பினர் இளைய அருணா அவர்களிடம் எடுத்துக் கூறினோம் வேலை விரைவாக முடிக்கப்பட்டு போக்குவரத்தும் சரி செய்யப்பட்டது பொதுமக்கள் ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அட்டெண்டர்கள் மற்றும் அண்ணா பூங்கா நடப்போர் அனைவரும் நடப்பதற்கும் பஸ் போக்குவரத்தும் எளிதாக்கப்பட்டுள்ளது இதற்கு உறுதுணையாக இருந்த திரு இளைய அண்ணா அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்து கொண்டனர். சென்னை செய்தியாளர் வெங்கடேசன் 

நெமிலி ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு சிறப்பு பூஜை!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் மாசி அமாவாசை நன்னாளில் நெமிலி ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் மாசிமக திருவிழா 13.03.25 மாசி 29 ம் நாள் வியாழக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெறஇருப்பதால் ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அதற்கான  ஆரம்ப பணிகலை விழா குழுவினர், செங்குந்தர் மரபினர் நெமிலி ஊர் பொதுமக்கள் சார்பாக ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் ஆலயத்தில் தொடங்கி வைத்தனர்.

பரங்கிப்பேட்டையில் வி.ஏ.ஓ அலுவலகம் கட்டித்தரகோரி கவுன்சிலர் அருள் முருகன் கோரிக்கை!

படம்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி கவுன்சிலர் கோ.அருள் முருகன் அவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டது என்னவென்றால் பரங்கிப்பேட்டையில் வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு சொந்தமான கட்டிடம் இல்லாததினால் தற்போது பரங்கிப்பேட்டை வண்டிக்கார தெருவில் உள்ள பழுதடைந்த முன்னாள் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இயங்கி வருகிறது இப்பள்ளி கட்டிடமானது மிகவும் சேதம் அடைந்து விழுகின்ற நிலையில் உள்ளது. இந்த இடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கு தினமும் சென்று வருவதற்கு அச்சமடைந்து வருகின்றனர் இதற்கு தீர்வாக  ஊரின் மையப் பகுதியான கச்சேரி தெருவில் வருவாய் துறைக்கு சொந்தமான பாலடைந்த நிலையில் பயன்பாடு இன்றி காலியிடம் ஒன்று உள்ளது. பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் வி.ஏ.ஓ அலுவலகத்தை அங்கு அமைத்தால் அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக  இருக்கும் என்பதினால் எனவே வி.ஏ.ஓ அலுவலகம் அங்கு அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்ட செய்தியாளர் கு...

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற 123ஆம் ஆண்டு விழா !

படம்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கும்மத் பள்ளி தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆனது கடந்த 1903 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது இப்பள்ளியின் 123 ஆம் ஆண்டு விழா மிக விமர்சையாக  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இதற்கு 2 வது வார்டு கவுன்சிலர் பசிரியாமா ஜாபர் அலி தலைமை தாங்கினார் 6வது வார்டு கவுன்சிலர் ரொகையாமா குன் முஹம்மது .5 வது வார்டு கவுன்சிலர் ஜாபர் ஷெரீப்.பள்ளி கல்வியாளர் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் பாரதி வரவேற்புரை ஆற்றினார் பள்ளி ஆசிரியர் ஜினைதா மற்றும் பக்ருன்னிசா தொகுப்புரையாற்றினார் பள்ளி ஆண்டு விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கபடி போட்டி.ஓவிய போட்டி.கட்டுரை போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது போட்டியில் ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்றனர் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது இதில் மற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள்.ஆசிரியர்கள்.பள்ளி ஆசிரியர்கள்.முன்னாள் மாணவர்கள். தன்னார்வலர்கள். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்.பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ...

பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்!

படம்
கடலூர் மாவட்டம் பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டம் சாா்பில், கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்  நடைபெற்றது.தமிழகத்தில் தொடா்ந்து அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பெண்கள் வன்கொடுமை, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்றவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பவா்கள் மீதும், பஞ்சமி நிலத்தை பட்டா போட்டு விற்பனை செய்பவா்கள் மீதும், பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.மாநகர மாவட்டச் செயலா் ஆா்.சி.முகேஷ் மூா்த்தியாா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா்கள் என்.சங்கரலிங்கம், எம்.பழனிவேல், ரா.ஸ்டாலின், ரா.ராஜ கீா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா் டி.எஸ்.விக்கிதுரை வரவேற்றாா். புரட்சி பாரதம் கட்சியின் மாநிலச் செயலா் பி.வின்சென்ட், மாநில கொள்கை பரப்புச் செயலா் ஜி.சிவலிங்கம் கண்டன ...

மேல்விஷாரம் நகர மன்ற கூட்டத்தில் தனிநபர் தலையீடு அதிகமாக உள்ளதாக கூறி 12 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில் மாதாந்திர நகர மன்ற கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் குல்சார்  அகமது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆணையர் பழணி முன்னிலை வகித்தார்  கூட்டம் தொடங்கிய போதே அதிமுகவை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் ஜமுனாராணி, லட்சுமி சோமசுந்தரம், அமிதாபானு சேட்டு  திமுக நகர மன்ற உறுப்பினர்கள் பொடிக்காரர், முகமது காதர், முகமது ஜியாவுதீன், நஜி  முனிஷா, அப்துல் அலிம், சல்மாபானு, அக்பர், கோபிநாத் ஆகியோர் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு நகர மன்ற கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  அமலில் ஈடுபட்டனர்.அப்போது கோரிக்கை  அடங்கிய மனுக்களை ஆணையர் பழனியிடம்  கொடுத்து வெளிநடப்பு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது  மறைந்த  முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ் டி.அமீன்  உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்  அனைவரையும் அரவணைத்து சென்றார். தற்போது உள்ள நகர மன்ற பொறுப்புத் தலைவர் குல்சார் அஹமத்  தனக்கு சாதகமான நான்கு நபர்க...

ஆற்காடு - பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் அதிமுக  முன்னாள் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி  எம் எல்எ வி கே ஆர். சீனிவாசன் தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் எம். சுகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேருந்து நிலையத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி  மரியாதை செய்தார். ஆற்காடு நகர செயலாளர் ஜிம் சங்கர், ஆட்டோ கண்ணன்  மகளிர் அணியைச் சார்ந்த கீதா சுந்தர், ராதிகா  உள்ளிட்ட நகர முன்னணி பொறுப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக செயலாளர் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியிணை சிறப்பித்தனர் அதனை தொடர்ந்து  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது 5000 திற்க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினர் ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆனந்த் 

ஆற்காடு - சாத்திய வாதியா? சமத்துவ வாதியா?பாரபட்சம் பார்க்கும் உதவி ஆய்வாளர் அண்ணாமலை ஆதிதிராவிடர் மயான கொள்ளை திருவிழாவுக்கு நெருக்கடி கட்டுப்பாடு!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பெரிய தண்டு காரன் தெருவை சார்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் இந்த மனுவில் கூறியிருப்பதாவது ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் அமாவாசை நாளன்று  முன்னோர்களை வழிபடவும் அங்காளம்மன் மற்றும் காளியம்மன் வேடமிட்டு புஷ்ப பல்லாக்குகள் தேர் அலங்காரம் செய்து ஆற்காடு பாலற்றங்கரைக்கு வருவது பாரம்பரியமாக நடந்து வரும் மரபு ஆகும் இந்த திருவிழாவுக்கு அனுமதி கேட்டு ஆற்காடு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் அண்ணாமலையிடம் அனுமதி கேட்டபோது  பல்வேறு நெருக்கடிகளை   கொடுத்தார் 25 நபர்களின் ஆதார் அட்டை கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் பாரம்பரிய மேளதாளம் பறை இசை மற்றும் ஒலிபெருக்கி பேனர் வைக்க கூடாது என்றும்  எச்சரித்து கட்டுப்பாடு விதிக்கிறார்  நான் உங்களுக்கு கூறும் கட்டுப்பாடுகளை ஏற்று திருவிழா செய்ய முடியுமானால் செய்யுங்கள் இல்லையென்றால் மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள் நான் அனுமதி வழங்க மாட்டேன் மீறி நடந்தால்  கைது செய்வேன் என்று கண்டிப்புடன் கூறி மிரட்டுகிறார் ஆற்காட்டில் பெருமாள் கோயில் திருவிழா நடைபெற்ற...

சென்னை ராயபுரத்தில் கண் சிகிச்சை மருத்துவ முகாம்!

படம்
சென்னை - ராயபுரம் கௌதம் ஜீவல்லர்ஸ் மற்றும் எம்.என் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை மருத்துவ முகாம் ராயபுரத்தில் நடைபெற்றது. இதில் 500- க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதனை தொடர்ந்து கௌதம் ஜீவல்லர்ஸ் மற்றும் எம்.என் மருத்துவமனை சார்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று இந்த கண் சிகிச்சை முகாம் நடைபெறும் என்று தெரிவித்தனர். நிலவன் TV செய்தியாளர் வெங்கடேசன்

சென்னை - ராயபுரம் உருது பெண்கள் தொடக்கப்பள்ளியில் 105- வது ஆண்டு விழா!

படம்
சென்னை ராயபுரம் உருது பெண்கள் தொடக்கப்பள்ளியில் 105- வது ஆண்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர். அக்பர் பேகம் தலைமையில் நடைபெற்றது. இதில் ராயபுரம் எம்எல்ஏ ஐ டீம்ஸ் மூர்த்தி, ஐம்பாதவது வட்ட கவுன்சிலர். சுரேஷ்குமார், தம்பு லைன் மாரியம்மன் கோவில் வெல்பர் அசோசியேஷன் தலைவர். ஞானமூர்த்தி, ஜலபதி நசீரா பேகம், பாபு, எல். சுகுமாரன், சுரேஷ்குமார், சமூக ஆர்வலர். வெங்கடேசன், எச்.எப்.எஸ் கபீர் பாய் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர்.

காட்டுப்பாக்கம் கிராமத்தில் மருத்துவ முகாம்!

படம்
  ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர். தணிகாசலம் அவர்கள் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

மும்மொழி கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!

இராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட மாணவர் அணி கூட்டமைப்பு சார்பில் அரக்கோணம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் பசுபதி அவர்கள் தலைமையில் மும்மொழி கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய துணைச் செயலாளர். அன்பழகன், ஒன்றிய பொருளாளர். டில்லிபாபு, ஒன்றிய மாணவர் அணி. சக்கரவர்த்தி, இளைஞர் அணி துணை அமைப்பாளர். அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மும்மொழி கொள்கையை எதிர்த்து வினோத் காந்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் மும்மொழி கொள்கையை எதிர்த்து மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர். ஆர். வினோத் காந்தி அவர்கள் தலைமையில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் அவர்கள் முன்னிலையில் மும்மொழி கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நெமிலி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஒடிசா மாநிலத்தில், 45 மாவட்ட நீதிபதிகளை தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்வுகளில், ஒருவர் கூட வெற்றி பெறவில்லை தொடர்ந்து, 2வது முறையாக போட்டி தேர்வுகளை நடத்துவதா அல்லது தேர்ச்சி சதவீத அளவை குறைப்பதா என, அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசித்து வருகின்றனர்.

கடலூர்- பண்ருட்டி பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி நகர மன்ற தலைவர். ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது!

படம்
  கடலூர் மாவட்டம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட  பேருந்து நிலையம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2024 2025  கீழ் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிக்காக 4 கோடியே 70 லட்சம் மதிப்பீடுகள் ஒதுக்கப்பட்டு     பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகளை துவக்கி வைத்தார்.   உடன் மாவட்ட துணை செயலாளர் தணிகை செல்வம் நகர மன்ற துணைத் தலைவர் சிவா  பொறியாளர் கண்ணன் உதவி பொறியாளர் கார்த்திகேயன் நகர அவைத்  தலைவர் ராஜா நகர பொருளாளர் ராமலிங்கம்   நகர மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் ஷமீம்பேகம் சலீம் ஜரின்னிஷா சபீர் ஒப்பந்ததாரர்கள் பேருந்து நிலைய கடை வியாபாரிகள்   உடன் இருந்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

பண்ருட்டி வடகைலாசம் கூட்டுறவு சங்கத்தில் முதல்வர் மருந்தில்லைபண்ருட்டி வடகைலாசம் கூட்டுறவு சங்கத்தில் முதல்வர் மருந்தகம் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் திறப்பு!

படம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் 1000  முதல்வர் மருந்தகத்தை இன்று 24.2.2025 காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து பண்ருட்டி  வடகைலாசம் கூட்டுறவு சங்கத்தில் முதல்வர் மருந்தகத்தை பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் திரு க இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தார் உடன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன் நகர அவைத் தலைவர் ராஜா நகர பொருளாளர் ராமலிங்கம் நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சங்கர் நகர மன்ற உறுப்பினர் ஷண்முகம்வள்ளி  பழனி. கிருஷ்ணராஜ் வெங்கடேசன் கூட்டுறவு சங்க சொசைட்டி உறுப்பினர்கள் உடன் இருந்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

ஆற்காடு காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக புவியரசி ஜெகன் பதவியேற்பு!

படம்
  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தென்பாலாற்றங்-கரையில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் அதை சார்ந்த ஒன்பது திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக புவியரசி ஜெகன் அவர்களை அறங்காவல் குழு தலைவராக  தேர்ந்தெடுத்து பதவியேற்பு விழா  நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து  இராணிப்பேட்டை அறங்காவல் குழு தலைவர். இலட்சுமணன் அறங்காவலர் குழு தலைவருக்கான நியமனச் சான்றிதழை  வழங்கினார். மேலும் உறுப்பினர்களாக சுமார், தீனு அவர்களுக்கும் நியமன சான்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் வே.சங்கர், மற்றும் அறங்காவல் துறை அலுவர்கள் ஆற்காடு நகரமன்ற தலைவர். தேவிபென்ஸ் பாண்டியன், மகாத்மாகாந்தி அறக்கட்டளை துணைத்தலைவர். பென்ஸ்பாண்டியன், ஆற்காடு மேற்கு திமுக ஒன்றிய செயலாளர். நந்தகுமார்,  6-வது வார்டு நகரமன்ற உறுப்பினர். இராஜலக்ஷ்மி துரை, நாட்டாமைதாரர்க பாண்டுரங்கள், மலர், சந்திளசியம்மன் ஆலய (நிவோதி) துரை, திமுக நகரத் துணைச் செயலாளர். சொக்கலிங்கம், நகரமன்ற உறுப்பினர் ஆனந்த் பழனி, மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

நெமிலி அருகே பனப்பாக்கத்தில் முதல்வர் மருந்தகம்திறப்பு விழா எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி மேற்கு ஓன்றிய கழக செயலாளர் ஆர். பி. ரவீந்திரன், நெமிலி மத்திய ஓன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், பனபாக்கம் பேரூராட்சி தலைவர். கவிதா சீனிவாசன், பனபாக்கம் பேரூர் கழக செயலாளர் என். ஆர். சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு முதல்வர் மருந்தகம் திறந்து வைத்தனர்.  இதில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

நெமிலியில் அம்மாவின் 77- வது பிறந்தநாள் விழா சு. ரவி எம்எல்ஏ பங்கேற்பு!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூர் கழக அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 77- ஆம் ஆண்டு பிறந்தநாள் நெமிலி நகர செயலாளர். செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்றத் உறுப்பினருமான சு. ரவி எம்.எல்.ஏ அவர்கள் கலந்து கொண்டு ஜெ. ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். இந்த நிகழ்வில் நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன், நெமிலி ஒன்றிய மாணவர் அணி செயலாளர். முருகன், நெமிலி நகர அவைத்தலைவர். சங்கர், மாவட்ட பொறுப்பாளர். சுகுமார் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

சூளேஸ்வரன்பட்டி மதரஸயே ரஹ்மானிய்யா (சிறார் ஒழுக்க நெறி மேம்பாட்டு கலாசாலை)57-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 11-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

படம்
  திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி செம்பா கவுண்டர் காலனி பள்ளிவாசலில் மதரஸயே ரஹ்மானிய்யா (சிறார் ஒழுக்க நெறி மேம்பாட்டு கலாசாலை)57-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 11-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ஆலிஜனாப் எம்.பத்ருதீன் மஸ்ஜிதே ரஹ்மானிய காலனி பள்ளிவாசல் தலைவர் &முத்தவல்லி அவர்கள் தலைமையில், வரவேற்புரை: ஆலிஜனாப் A.சிராஜுதீன் காலனி பள்ளிவாசல் செயலாளர் அவர்கள் முன்னிலை எம்.எஸ்.காஜாஉசேன் காலனி பள்ளிவாசல் பொருளாளர் 7-வது வார்டு கவுன்சிலர் எஸ்.கமாலுதீன்  ஆடிட்டர் (முன்னாள் கவுன்சிலர்) ஏ.கே.இப்ராஹிம் துணை முத்தவல்லிஎம்.முஸ்தபா துணை செயலாளர் இவர்களின் முன்னிலையில்கலகலப்பான இஸ்லாமிய பட்டிமன்றம் தீன் பேச்சுகள் கிராத் போட்டி கேள்வி பதில் பல எண்ணற்ற குழந்தை செல்வங்கள் சொற்பொழிவு செய்தார்கள் பரிசுப் பொருட்களையும் பெற்றுக் கொண்டார்கள்  ..!!!குர்ஆனை மனப்பாடம் செய்ததற்கு 3-பெண்கள் பட்டத்தை கணவர்கள் பெற்றுக் கொண்டனர். சிறப்பித்தவர்கள்: பொள்ளாச்சி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள்,நபிமார்களின் வாரிசார்கள், உஸ்தாபீகள்,பிலால்,காலனி பள்ளிவாசல் செயற்குழு உறுப்பி...

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கீரல் குறியீடு உடைய குடுவை கண்டெடுக்கப்பட்டது தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தகவல்!

படம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கீரல் குறியீடு உடைய குடுவை கண்டெடுக்கப்பட்டதுஇதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியது: பண்ருட்டியை அடுத்த எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் எனது தலைமையில், விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவா் ராகுல் மற்றும் வரலாற்று ஆா்வலா் பிரதாப் ஆகியோா் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனா்.  அப்போது, குறியீடு பொறித்த சிவப்பு நிற சுடுமண் குடுவை மற்றும் குறியீடு உள்ள கருப்பு மற்றும் சிவப்பு நிறமுள்ள ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த குறியீடுகள் பொறித்த சுடுமண் குடுவை மற்றும் ஓடுகள், தொல்லியல் துறையால் ஈரோடு அருகே கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளோடு ஒத்துள்ளதை காண முடிகிறது.  அதாவது, சுமாா் 2,000 ஆண்டுகள் பழமையான இந்த குறியீட்டு காலத்தை கணிக்க முடிகிறது. மேலும், தங்களது தொல்லியல் மேற்புற கள ஆய்வில் தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் தொடா்ந்து கண்டெடுத்து ஆவணப்படுத்தி வருகிறது என்றாா். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன...

திருப்புல்லாணியில் மத்திய ஒன்றிய அதிமுக செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப பணி குறித்த ஆலோசனைக் கூட்டம்!

படம்
  ராமநாதபுரம் மாவட்டம் தமிழக முன்னாள் முதல்வர்கள். எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நினைவோடு, கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் முதலமைச்சர்,  எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர். எம். ஏ. முனியசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழகத் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்.வி. வி. ஆர். ராஜ் சத்யன் அவர்கள் மற்றும் விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ. சரவணகுமார் அவர்களின் ஆலோசனைப்படி, திருப்புல்லாணி மத்திய ஒன்றிய செயலாளர். ராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர். செ.நாகராஜன் ராஜா அவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் நியமனம்  தொடர்பான ஆய்வு கூட்டம் மற்றும் அவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற ஆலோசனை கூட்டம் திருப்புல்லாணியில் நடைபெற்றது.   இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி முத்து முருகன் மற்றும் ஒன்றியத்தைச் சார்ந்த கழக முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் க...

காணொளி காட்சிகள் மூலம் முதலமைச்சர் திறந்து வைத்த பரங்கிப்பேட்டை ரிஜிஸ்டர் ஆபீஸ் அதைத்தொடர்ந்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த பேரூராட்சி மன்ற தலைவர்!

படம்
 கடலூரில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காணொளி காட்சிகள் மூலம் பல்வேறு  திட்டங்களை துவக்கி வைத்தார் அதில் ஒரு பகுதியாக பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் அதை தொடர்ந்து சார் பதிவாளர் பாலாஜி தலைமையில் கவுன்சிலர் டாக்டர் மரவாடி கோ.அருள்முருகன். அலுவலக உதவியாளர் நதியா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் கலந்துகண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சரவணன்.பசிரியாமா ஜாபர் அலி.ரொகையாமா குன் முஹம்மது.ஜாஸ்மின் அஜீஸ்.ராஜேஸ்வரி வேல்முருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள். பேரூராட்சி மன்ற ஊழியர்கள். பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

சென்னை உருது பள்ளியின் 105- வது ஆண்டு விழா அழைப்பிதழ்!

படம்
சென்னை ராயபுரம் 50-வது வட்டம் அறத்துன்றோடு உருது பள்ளி வருகிற செவ்வாய்க்கிழமை 25/02/2025 பள்ளியின் 105 வது வருட ஆண்டு விழா அழைப்பிதனை நமது கல்மண்டபம் தம்புலன் மாரியம்மன் கோயில் குடியிருப்பு நல சங்கத்திற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர். அக்தர் பேகம் அழைப்பிதழை வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் நெமிலி பேரூர் திமுக சார்பில் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர்ஸமு.க.ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்கள் தலைமையில், நெமிலி பேரூர் செயலாளர். ஜனார்த்தனன் அவர்களின் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நெமிலி கலா பாரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன! 1.மார்ச்-1, அன்று கிளைக் கழகம் மற்றும் பேரூராட்சி வார்டுகள் முழுவதும் கழகத்தின் இருவண்ணக் கொடி ஏற்றி இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்குதல். 2.பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல். 3.கழகத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு, மார்ச்-16 அன்று, நெமிலி கிழக்கு ஒன்றியம் மற்றும் நெமிலி பேரூர் திமுக சார்பில், கழக அரசின் சாதனைகளை விளக்கி, மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அவர்கள், கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அண்மையில் ம...

கடலூர் மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

படம்
கடலூர் மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முட்லூரில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை உள்ள இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும். கெடிலம் ஆற்றில் ரூ.36 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வெலிங்டன் எதிரில் கரைகளை பலப்படுத்துவது, வாய்க்காலை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். தென்பெண்ணை ஆற்றில் ரூ.58 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

நெமிலி மேற்கு மற்றும் மத்திய ஒன்றிய (பனப்பாக்கம் பேரூர்) திமுக சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் மார்ச் 1 அன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செயற்குழு கூட்டம் மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர் பா.செ. நரசிம்மன், நெமிலி மேற்கு ஒன்றிய அவைத்தலைவர். பொன்னுரங்கம் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், பனப்பாக்கம் பேரூர் கழக செயலாளர். சீனிவாசன் ஆகியோர் கலந்துக்கொண்டு கிளைகழக செயலாளர்களுக்கு கிளைகழகங்கள்தோறும் கழக கொடி ஏற்றி நலத்திட்டங்கள் செய்திட ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள்,பேரூர் கிளைக்கழக செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள்,  துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பனப்பாக்கம் - உளியநல்லூர் - தோப்புலி அம்மன் கோவில் திருவிழா!

படம்
  ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் அடுத்த உளியநல்லூர் கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற தோப்புலி அம்மன் கோவில் திருவிழா.  இதில் பக்தர்கள் அலகு குத்தி, ஆகாய மாலை அணிவித்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். பெண்கள் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கோலம் மூலம் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த எஸ்ஜிசி பெருமாள்!

படம்
  ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர். சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் தங்களது இல்லத்தின் முன்பு கோலம் மூலம் மும்மொழிக்கு எதிராக தமிழ் வாழ்க என கோலமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கோலம் மூலம் மும்மொழி கொள்கையை எதிர்த்த பவானி வடிவேலு!

படம்
  ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பெ. வடிவேலு மற்றும் மாவட்ட தொண்டர் அணி பவானி வடிவேலு அவர்கள் இல்லத்தின் வாசல் முன்பு மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழ் வாழ்க என கோலமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

கோலம் மூலம் மும்மொழிக் கொள்கையை எதிர்த்த எஸ்.ஜி.சி பெருமாள்

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய மற்றும் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் திமுகவினர் மும்மொழி கொள்கையை எதிர்த்து ரெட்டிவலம் திமுக அலுவலகம் முன் தமிழ் வாழ்க என கோலமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன் மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.

புவனகிரியில் வெங்கடேஸ்வரா கம்யூனிட்டி கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

படம்
 புவனகிரியில் வெங்கடேஸ்வரா கம்யூனிட்டி கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது  கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள வெங்கடேஸ்வரா கம்யூனிட்டி கல்லூரியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு கடலூர் மாவட்டம் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது கல்லூரி தாளாளர் சுதா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சுகாதார துறை கடலூர் மாவட்ட நல கல்வி அலுவலர் ஜோசப் பங்கேற்று கல்லூரி மாணவிகளுக்கு தொழுநோய் பரவுதல்  குறித்து விழிப்புணர்வும் தொழுநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து வந்தபின் குணப்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் கன்னியம்மாள் அறக்கட்டளை நிறுவனர் புரட்சியார் வரவேற்றார் மேலும் இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர் தனசேகரன் மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள் முருகன் செல்லதுரை கல்லூரி நர்சிங் விரிவுரையாளர் பிருந்தா மஞ்சு அபிநயா கலந்து கொண்டனர், கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்