முதல்வர். விஜய் கர்நாடக போவதை அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பது ஏன்? இதுதான் காரணம்!!
முதல்வர். விஜய் கர்நாடகா சென்று கர்நாடக முதல்வருடன் பேசி தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் வந்துவிட்டால் அதை வைத்து தங்களால் அரசியல் செய்ய முடியாது என பயப்படுகின்றன மற்ற கட்சிகள்.
ஒரு வேளை, கர்நாடக முதல்வரும் தமிழக முதல்வரும் பேசிய பின் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் வருகிறது என்றால் அது முதல்வர் விஜய்யால் தான் முடிந்தது என மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள்
இதுவரை முதல்வராக இருந்தவர்களால் செய்ய முடியாததை முதல்வர் விஜய் வந்து மூன்று மாதங்களில் இதை செய்து விட்டார் என்று பேசுவார்கள்.
முதல்வர். விஜய்க்கு பாராட்டுக்கள் குவியும், அப்படி நிகழும் பட்சத்தில் இனிவரும் தேர்தலில் தவெக அசைக்க முடியாத சக்தியாக மாறும்.
விஜய் நிரந்தர முதல்வராக ஆகி விடுவார் இது போன்ற சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கட்சிகள் கர்நாடகா போகக்கூடாது என எதிர்த்து வருகின்றன.
முதல்வர். விஜய் போய் தான் பார்க்கட்டுமே! தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது நடக்கிறது என்றால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சந்திப்பதில் தவறே இல்லை.
ஒருவேளை முதல்வர் விஜய் கர்நாடக போகாமல் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
போகக்கூடாது என கூறும் இதே கட்சிகள் முதல்வர் ஈகோவை விட்டு விட்டு போய் பேசி இருக்க வேண்டும், போய் பேசி இருந்தால் தண்ணீர் கிடைத்திருக்கும் எனக் கூறுவார்கள்.
இந்தியாவுக்கு ஒரு தேவை என்பதால் பிற நாட்டிற்கு சென்று பிரதமர் மோடி பேசி பல முதலீடுகளை கையெழுத்திட்டு கொண்டு வருகிறார்.
அதுபோல் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெற முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது தவறில்லை.
எனவே மற்ற கட்சிகளின் எதிர்ப்பை புறம் தள்ளிவிட்டு முதல்வர் விஜய் கர்நாடக போவதே சிறந்தது.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக