இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கரூர்: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய். 10 லட்சம் நிவாரணம் வழங்கிய முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!

படம்
கரூர் மாவட்டம்,கடந்த சனிக்கிழமை அன்று, கரூரில் எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 10 லட்சம் நிவாரண தொகையை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் வழங்கினார். இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர். இளங்கோவன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

தேனி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்!!

படம்
தேனி மாவட்ட ஆட்சியரக புதிய கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) மாவட்ட கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர். தங்க தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர். ரஞ்ஜீத் சிங் IAS அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர். கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

காஞ்சிபுரம்: ஒரு லட்சம் பனை விதைகள் நடும் விழா! அமைச்சர். ஆர். காந்தி பங்கேற்பு!!

படம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், நத்தாநல்லூர், மேல்தாங்கல்விதைகள் தன்னார்வ அமைப்பு மற்றும் சேவை அமைப்புகள் இணைந்து 5 ஆம் ஆண்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் விழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை வழங்கினார்.  இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்.  கலைச்செல்வி மோகன்.இஆபமாவட்ட செயலாளர். க.சுந்தர்.MLA,காஞ்சிபுரம் நாடாளுமன்றஉறுப்பினர்.க.செல்வம்.MP,ஒன்றிய செயலாளர். R.K.தேவேந்திரன் மற்றும் ஆர்.வெங்கடேசன்பசுமை சரண் மற்றும் திமுக கழகத்தினர் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

லாரி ஓட்டுனர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய ஜெயக்குமார் IPS!!

படம்
கடலூர் மாவட்டம்,ஆயுத பூஜையை முன்னிட்டு கடலூர் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் கலந்துகொண்டு பேசுகையில் இவ்வாண்டு ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுநர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று சிறப்புரையாற்றினார். பின்னர் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கினார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கடலூர்:தீ பற்றி எரிந்த வால்பற்றை சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார் IPS!!

படம்
கடலூர்மாவட்டம்கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் துறைமுகம் காவல் நிலையம்  பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு பகுதியில் வெங்கடேசன் என்பவரது மரம் அறுக்கும் பட்டரை இரவு  தீப்பற்றி எரிந்த சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு தீயை அணைக்க ஏற்பாடு செய்தார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

அரக்கோணம் ஒன்றிய காங்கிரசார் கையெழுத்து இயக்கம்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் ஒன்றியம், தணிகை போலூர் ஊராட்சியில் வாக்கு திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம் ஒன்றிய காங்கிரசார் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய தலைவர் . நமச்சிவாயம் தலைமை தாங்கினார் . இதில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு ஒன்றிய தலைவர். வாசுதேவன் கலந்து கொண்டு, கையெழுத்து நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்  மாநில பொதுகுழு உறுப்பினர். பிரவினா சரவணன் மாவட்ட செயலாளர்.  மங்கல சேகர், தெற்கு ஒன்றிய தலைவர். மோசூர் ஏ.ராஜேஷ்  பூபதி, .பாலகிருஷ்ணன் , மாணிக்கம், வெங்கடேசன்  சரவணன், நல்லமுத்து நரசிம்மன் மற்றும் திரளாக பலர் கலந்து கொண்டனர். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகை ரூபாய். 5000 வழங்கிய ஜெயக்குமார் IPS!!

படம்
கடலூர் மாவட்டம்,2024 - 2025 கல்வி ஆண்டில் கடலூர் மாவட்ட காவல்துறையினரின் பிள்ளைகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஊக்கத்தொகை ரூபாய். 5000 மற்றும் பாராட்டு சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயகுமார் IPS அவர்கள் வழங்கினார்.  12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற  அனீஷ்கண்ணா, அதிஷ்வரன், நிஷாந்தி, ஹீரா, யாேகஸ்ரீ, ராகுல், அனுஜா, பாலாஜி, காவியா, சுதர்சனராஜ் மற்றும் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பிரணவ், ஏஞ்சல் சௌந்தரம் மேரி, திவ்யாஷ், கீர்த்திலட்சுமி, அனிஷ்கா, வைஷ்ணவி, ஸ்ரீவர்ஷினி, சஞ்சனா, ரக்ஷனா பிரியா, அக்ஷயா ஆகியோர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர். அப்பாண்டைராஜ் அவர்கள் உடன் இருந்தார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட, ரூ.20 இலட்சம் மதிப்புள்ள, 8 சென்ட் நிலம் அரசுக்கு தானமாக வழங்கியவருக்கு அமைச்சர் பாராட்டு!!!

படம்
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகி, மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டித்தரப்பட வேண்டும் என்று, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசிற்கும் கோரிக்கை வைத்திருந்தார். இதனை அடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.5.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்கள். இதனை அடுத்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர். சந்திரகலா IAS ஆகியோர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு நெமிலி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட விஜயபுரம் பகுதியில் அடிக்கல் நாட்டினர். இந்நிலையில், இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட, ஏற்கனவே உள்ள அரசு நிலம் போதுமானதாக இல்லை. எனவே அருகில் உள்ள தனியார் இடத்தில் 8 சென்ட் அளவு இடம் தேவைப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். எனவே நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் அவர்கள் அருகில் உள்ள நிலத்தின் உரிமையா...

சிலம்பம் சிங்கிள் ஸ்டிக் மற்றும் ஸ்டிக் பைட் போட்டிகளில் மாணவர்கள் முதலிடம்!

படம்
தேனி மாவட்டம் SDAT விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சிலம்பம் சாம்பியன் சிப் போட்டியில் ஆண்டிபட்டி ட்ரீமர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமிக் மாணவர்கள் சிங்கிள் ஸ்டிக் மற்றும் பைட் ஸ்டிக் போட்டிகளில் பங்கு பெற்று 2 முதலிடம், 2 இரண்டாம் இடம், 6 மூன்றாம் இடத்தை பெற்று ட்ரீமர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டிபட்டி ட்ரீமர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமிக் பயிற்சியாளர் திரு. P. முத்துகிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தேனி செய்தியாளர் சின்னத்தம்பி 

கடலூர்: லாட்டரி சீட்டு விற்றவர் கைது!!

படம்
கடலூர் மாவட்டம், கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் காவல்துறையினர் நேற்று புதுப்பாளையம் ஜங்ஷன் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுப்பாளையம் மசூதி தெருவைச் சேர்ந்த பூமிநாதன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

நெல்லிக்குப்பம் கஸ்டம்ஸ் சாலையில் ஆட்சியர் ஆய்வு!!

படம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் கஸ்டம்ஸ் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் உடனிருந்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

வேப்பூர்: அரசு மருத்துவமனையில் மரக்கன்று நடுதல்!!

படம்
தூய்மை பாரத இந்தியா திட்டத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் பணியில் இந்தியன் வங்கி கிளை ஈடுபட்டது. இதையொட்டி, அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்தியன் வங்கி கிளை மேலாளர். தங்கராசு மரக்கன்று நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகை மதிப்பீட்டாளர். சபரி மற்றும் வங்கி அலுவலக உதவியாளர். பிச்சைமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு மருத்துவமனை வளாகத்தை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றும் நோக்கத்துடன் நடைபெற்றது. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை எஸ்சி, எஸ்டி அலுவலர் நலசங்க கூட்டம்!!

படம்
கடலூர் மாவட்டம், வடலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை எஸ்சி, எஸ்டி அலுவலர் மற்றும் பணியாளர் நல சங்கத்தின் கம்மாபுரம் ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பதவி ஏற்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

விருத்தாசலம்: குட்கா விற்ற பெண் கைது!!

படம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான காவல் துறையினர் நேற்று (செப்.27) மாலை விளாங்காட்டூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த ஜோதி (45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

சேத்தியாத்தோப்பு: 20 மரங்கள் சாய்ந்து விழுந்தது!!

படம்
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 17 சென்டிமீட்டர் கனமழை பெய்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக, சேத்தியாத்தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. நேற்று பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கடலூர்: தீப்பிடித்து எரிந்த போலீஸ் ஜீப்!!

படம்
படம்: சித்தரிப்பு புகைப்படம் கடலூர் மாவட்டம்,கடலூர் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் பழுதுபார்க்க பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆயுதப்படை கட்டுப்பாட்டில் இருந்த ஜீப், நேற்று (செப்.27) சனிக்கிழமை காலை என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எலி கடித்து ஓயர்கள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கடலூரில் வேலைவாய்ப்பு அலுவலக இடமாற்றம்!!

படம்
கடலூர், செம்மண்டலத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலக கட்டடம் சேதமடைந்ததால் 6/10/2025 முதல் தற்காலிகமாக கடலூர் நியூ சினிமா தியேட்டர் எதிர்புறம், எண் 8 ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம், கடலூர் என்ற முகவரியில் செயல்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04142-290039 மற்றும் 9499055908 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்.சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

சிதம்பரம்: மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!!

படம்
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் அருகே வல்லம்படுகை பருதேசியம்மன் கோவில் தெருவில் காய்கறி வியாபாரி மோகன், தெருவில் நடந்து சென்றபோது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

சயனபுரம் முதல் பள்ளூர் வரை செல்லும் இணைப்புச் சாலையை விரைவில் தார்சாலையாக அமைத்து தரப்படும் பொதுமக்களிடம உறுதி அளித்த நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு!!

படம்
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், சயனபுரம் கிராமத்திலிருந்து பள்ளூர் கிராமம் வரை செல்லும் இணைப்பு சாலை, மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளது. இந்த சாலையின் வழியாக விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு செல்வதற்கும், மருந்து மூட்டைகளை எடுத்து செல்வதற்கும், விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்து செல்வதற்கும், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று திருமால்பூர் இரயில் நிலையம், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு போன்ற வெளியூர்களுக்கு சென்று வருவோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே பழுதடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்தது. இதுகுறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சாலையில் உள்ள மேடு பள்ளங்களை, மழைநீர் தேங்கியுள்ள இடங்களை கிரவல்மண் கொண்டு சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்கள் ஆய்வு செய்தார். அப்போது இந்த சாலையை, தார்சாலையாக அமைக்க, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்களிடமும், மாவட்ட ஆட்சித்தலைவ...

கரூர் உயிரிழப்பு : சிபிஐ விசாரனை வேண்டும்அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் கோரிக்க!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,யாரும் எதிர்பாராத நிலையில்கரூர் பொதுக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சிபிஐ விசாரனை வேண்டும் எனஅகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ஐசக் அய்யா கோரிக்கை விடுத்தார் அவர் மேலும் கூறியதாவது... கரூரில் நடைபெற்ற த.வெ.க தலைவர் பிரச்சாரக் கூட்டத்தில் 41 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது  பொறுத்துக் கொள்ளவும் முடியாத மிகப்பெரிய சோக சம்பவம் நடந்து விட்டது இது குறித்து பல நிலைகளிலே  அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் பொது மக்களும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இது மிகப்பெரிய சோகசம்பவம் இது ஆராய கூடியது எதற்காக  இப்படி இந்த நிகழ்வு நடந்தது. இத்தனை உயிர் எப்படி பலியானது என்பது குறித்து விசாரிக்க அவசியம் சிபிஐ விசாரணை தேவை சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே முழு தகவல் கிடைக்கும் அதே நேரத்தில்  தவறு செய்துள்ளார்கள் யார் என்பது சிபிஐ விசாரணையில் தெரிந்துவிடும் ஆகையினால் அவசியம் சிபிஐ விசாரணை தேவை என்று அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கிற...

தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் 9ம் ஆண்டுநவரசவிழாமற்றும்சாதனையாளர்கள் விருது விழா!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை தலைமை இடமாகக் கொண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தமிழ் படைப்பாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் 9ம் ஆண்டு நவரச விழா மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  சங்க தலைவர். மோகன் தலைமை தாங்கினார். ஆலோசகர். ஆர். வெங்கட்டரமணன் வரவேற்றார். செயலாளர். சுந்தர்ராஜ் மற்றும் பொருளாளர் கேபிகே .பிரபாகரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்  முன்னாள் அரசவை கவிஞர். முத்துலிங்கம், நடிகர். கிங் காங். மற்றும் திருவண்ணாமலை சின்னராசு சிறப்பு அழைப்பாளர்களாக  கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். தொடர்ந்து சாதனையாளர் விருதுகள் பெறும் பெண் மருத்துவர்கள். வாழவந்தாள் பன்னீர்செல்வம், நேத்ரா உமாபதி, மைதிலி பிரசன்னா, ஐஸ்வர்யா செல்வகுமரன் உள்ளிட்ட பலர் குத்து விளக்கேற்றினர்.  முதலில் சேவை செம்மல் விருதினை மருத்துவர். பன்னீர்செல்வம் மற்றும்  வணிகர் சங்க தலைவர். கே. எம். தேவராஜ் பெற்றுக் கொண்டனர். ரோட்டரி சங்கத்தின் 51வது அணி தலைவர். மனோகர் பிரபு செயலாளர். லட்சுமிபதி பொருளாளர். ஒளிவண்ணன் ஆகியோர் பாராட்டு பெற்றனர். தொடர்...

30 ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பில் இருந்த சுடுகாட்டு பாதை மீட்பு !!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கூடலூர் பஞ்சாயத்துக்கூட்பட்ட கங்கை மோட்டுர் உள்ளது.இந்த கிராமத்தில். அருந்ததியர் சாதியினர் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் இவர்களுக்கு நீண்ட காலமாக சுடுகாட்டு பாதை இல்லாத காரணத்தினால் ஆதி திராவிட நலத்துறை சார்பில் நில எடுப்பு பணிநடைபெற்றுநிலஉரிமையாளர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே அவருடைய வங்கிக்கணக்கில்பணம்செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருவாய் துறையினர் சுடுகாட்டு பாதை அளவிட செய்யசெல்லும்போதெல்லாம்நிலஉரிமையாளர்கள்விஷம்அருந்தியும்மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டும் பிரச்சனை எழுப்பி வந்தனர்.இது ஒரு சவாலாகவே இருந்து வந்தது வருவாய்த் துறைக்கு! இந்த நிலையில் இன்று மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை துணை ஆட்சியர். அறிவுடை நம்பி.தலைமையில் ஆதி திராவிட தனி துணை வட்டாட்சியர். இந்துமதி சோளிங்கர் வட்டாட்சியர். செல்வி ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும்மேற்பட்டகாவலர்உதவிகளுடன் நில அளவீடு செய்ய சென்றனர்.  நிலத்தின் உரிமையாளர்கள் நடேசன் s/of அண்ணாமலை,விஜய். s/of சேட்டு சின்னதுரை.    s/of மக்கா ரெட்டி நாராயணசாமிs/of பெரியசாமி ரெட்டி ஆகியோர...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன் முறையாக "Ranex 2025 Industrial & Trade Expo" தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி.. ஏற்பாட்டுக் குழு தகவல்!!

படம்
ராணிப்பேட்டைமாவட்டம்,ராணனிப்பேட்டை மாவட்டத்தில் முதன் முறையாக "Ranex 2025 Industrial & Trade Expo"  RANEX - 2025  என்ற பெயரில்  அக்.24  முதல்  26 வரை " தொழில்  மற்றும் வர்த்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக கண்காட்சி "    ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் முக்கிய தொழில் மையமாகத் திகழும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்  முறையாக RANEX - 2025  என்ற பெயரில் " தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி " அக்டோபர் 24  ஆம் தேதி முதல்  26 ஆம் தேதி வரை  3 நாள் நடைபெற உள்ளது. இக்கண்காட்சி ஏற்பாட்டுக் குழு தலைவர். ஜெ.முரளி,சிட்கோ சங்க தலைவர். டி.ஏ.புனிதவேல்,  ஆலோசகர் கே.சந்திரஹாசன், பொருளாளர் யு.சண்முகநாதன், இணை  செயலாளர்.  டி.சி. சந்திரசேகர்,  இணை செயலாளர். ஆர்.தனசேகர்  ஆகியோர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்ததாவது...  ராணிப்பேட்டை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் தலைமையில்,கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி,மாவட்ட ஆட்சியர். ஜெ.யு.சந்திரகலா IAS ஆகியோரின...

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தொகுதி II & IIA தேர்வினை கலெக்டர். சந்திரகலா IAS அவர்கள் பார்வையிட்டு ஆய்வு !!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். சந்திரகலா IAS அவர்கள் ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி , வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் தேர்தல்கள் (TNPSC ) குரூப் II ,IIA தேர்வு எழுதறதையும் மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்களுடன் தேர்வு எழுதுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் இத் தேர்வானது ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என தேர்வு மையங்களை 29 தேர்வு  கூடங்களில் 7298 தேர்வர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்5656 தேர்வர்கள் தேர்வு எழுதினார். 1642 தேர்வர்கள் பரிச்சை எழுத வரவில்லை. வருகை புரிந்தோர் சதவீதம் 77.50 சதவிகிதம் வருகை புரியாதோர் 22.50 சதவிகிதம் ஆகும். தேர்வு நடைபெறும் மையங்களை கண் காலத்தில2. துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் விடைத்தாள்களை கருவூலத்தில் பாதுகாப்பு வைப்பது எடுத்துச் சொல்வது உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்திட வாலாஜா ஆற்காடு மற்றும் அரக்கோணத்திற்கு ஆகிய வட்டத்திற்கு.2 வட்டாட்சியர்கள் ஒருங்கிணைப்பாளராகவும் சுற்று குழு (mobile team )9...

பண்ருட்டி நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய நிர்வாகிகள்!!

படம்
கடலூர் மேற்கு மாவட்டம், பண்ருட்டி நகரம் நகர தொண்டரணி புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் இன்று 28.9.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க இராஜேந்திரன்  அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். உடன் நகர மன்ற உறுப்பினர். ஷண்முகவள்ளி பழனி மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர். லோகநாதன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். ஏழுமலை வார்டு செயலாளர். முருகன் நகர தொண்டரணி அமைப்பாளர். தயாளன், துணை அமைப்பாளர்கள். எழிலரசன், ஆனந்தன், விமல்ராஜ்,  விஷ்வா,  சிவாகர் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

பண்ருட்டி அருகே வடுக்கம்பாளையத்தில் வயல்வெளியில் கவிழ்ந்து அரசு பேருந்து விபத்து!!

படம்
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அருகே அதிமுக முன்னால் அமைச்சர். எம்.சி.சம்பத் அவர்களின் ஊரான மேல் குமாரமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்து வடுக்கம்பாளையம் என்ற இடத்தின் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக வயல்வெளியில் கவிழ்ந்து விபத்து என தகவல்.இந்த இடத்தின் சாலையின் அகலமானது குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடப்பதாகபுகார்கூறுகின்றனர்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்கொடுத்துள்ளதாகவும் ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குமுறுகின்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கடலூரில் நடைபெற்ற சாம்பியின்ஷிப் போட்டி! ஜெயக்குமார் IPS பங்கேற்பு!!

படம்
கடலூர் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் நண்பர்கள் கைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் கடலூர் மாவட்டம் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி 2025 2026 ஆண்டிற்கான ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி  நேற்று 27.9.2025 மற்றும்  இன்று 28.9.2025 ஆகிய இரண்டு நாட்கள் பண்ருட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் கோப்பைகள் வழங்கினார். பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் பரிசுத்தொகை  வழங்கி வாழ்த்தினார்கள்.  இந்நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர். ராஜா நகர மன்ற உறுப்பினர். சண்முகவள்ளி பழனி. கிருஷ்ணராஜ் . முன்னாள் நகர மன்ற உறுப்பினர். தர்ஷனா  நகர தொழிலாளர் அணி அமைப்பாளர். ஜாகிர் உசேன் வார்டு செயலாளர்.  செல்வகுமார். கிருஷ்ணமூர்த்தி நகர இளைஞர் அணி அமைப்பாளர். சம்பத் துணை அமைப்பாளர். ராஜா கடலூர் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் நண்பர்கள் கைப்பந்து கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.