வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் ஜாலியாக வந்த சிறுத்தை.. கோவையில் பதறி ஓடிய டூரிஸ்ட்கள்!!

கோவை  மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. நகர்ப்புற பகுதிகள், எஸ்டேட் பகுதிகள் மட்டுமல்லாமல், பொள்ளாச்சி - வால்பாறை சாலையிலும் சிறுத்தைகளின் உலா தொடர்கதையாகிவிட்டது. அது தொடர்பான ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி காண்போரை பதற வைத்து வருகிறது.கடந்த 4 நாட்களாகவே பகல் நேரங்களிலேயே எஸ்டேட் பகுதிகளுக்குள் சிறுத்தை, யானை, காட்டுமாடு என ஒவ்வொன்றாக வர ஆரம்பித்து விட்டதால், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.இதனிடையே வால்பாறையிலிருந்து அட்டகட்டி செல்லும் சாலையில் யானைகளை தொடர்ந்து சிறுத்தைகளும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டது போலும்.. புதுத்தோட்டம், ரொட்டிக்கடை, அய்யர்பாடி பகுதிகளில் இதன் நடமாட்டம் மிகவும் அதிகமாகவே உள்ளது..மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!