திண்டுக்கல் மாவட்டம்,தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் தெற்கு மாவட்டம், நத்தம் மத்திய ஒன்றியம் சார்பில் வேலம்பட்டி, ஆவிச்சிப்பட்டி, சமுத்திராபட்டி, பூதகுடி, ஆகிய ஊராட்சிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கழிவு நீர் வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செய்து தர கோரி தமிழக அரசையும் ஊராட்சி நிர்வாகங்களை வலியுறுத்தி சமுத்திராபட்டியில் திண்டுக்கல் தெற்கு மாவட்ட கழக செயலாளர்.S.M.நிர்மல்குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் தெற்கு மாவட்ட கழக செயலாளர்மற்றும்நிர்வாகிகள்.க.சீத்தாராமன்,க.வினோத்குமார், ச.அருள்பாண்டி, ந.பிச்சைமணி, க.கதிரவன் த.செந்தில்குமார், பெ.பாசத்தவம், ச.சுரேஷ், பூமிராஜன், பாரிதாசன், த.பாலகுரு, து.பொன்னன், பூமிநாதன், ராஜேஸ்வரி. தமிழக வெற்றிக் கழக தெற்கு மாவட்ட நிர்வாகிகள், நத்தம் நகரம் நிர்வாகிகள், நத்தம் அனைத்து ஒன்றிய நிர்வாகிகள், சாணார்பட்டி அனைத்து ஒன்றிய நிர்வாகிகள் திண்டுக்கல் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.