இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குன்னத்திலிருந்து சென்னைக்கு நேரடி அரசு குளிர்சாதன பேருந்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த அமைச்சர். சிவசங்கர்!!

படம்
குன்னத்திலிருந்து சென்னைக்கு நேரடி குளிர்சாதன பேருந்து வசதி இல்லாத குறையை நிறைவேற்றிடும் வகையில், குன்னம் முதல் பெரம்பலூர் வழியாக சென்னை மாதாவரம் வரை செல்லும் புதிய அரசு போக்குவரத்து கழக குளிர்சாதன பேருந்து வசதியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, குன்னம் பேருந்து நிலையத்திலிருந்து துவக்கி வைத்து பெரம்பலூர் பேருந்து நிலையம் வரை பேருந்தில் பயணம் மேற்கொண்டார். போக்குவரத்து மற்றும் மின் துறை  அமைச்சர். சிவசங்கர் உடன் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர். ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன்,விழுப்புரம் கோட்டம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் குணசேகரன்,அரசு அலுவலர்கள்,கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

கடலூர் மாநகராட்சிகுப்பை வண்டியில் வாக்காளர் அட்டைகள்!!

படம்
கடலூர் மாவட்டம்,கடலூர் மாநகராட்சி 45 வார்டு பகுதிகள் கொண்ட நிலையில் நான்கு மண்டலங்களாக செயல்படுகிறது. இதில் கடலூர் மஞ்சக்குப்பம் 3வது பிரிவு அலுவலகத்திற்கு நேற்று காலை குப்பைகளை சேகரிப்பதற்காக துப்புரவு பணியாளர். காமாட்சி (38) என்பவர் பேட்டரி வாகனத்தை எடுத்துச் செல்வதற்காக வந்துள்ளார்.அப்போது வாகனத்தின் குப்பை கொட்டும் இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் வாக்காளர் அடையாள அட்டைகள், தேர்தலுக்கு அலுவலர்கள் பயன்படுத்தப்படும் பொருட்களாக மை, பேட்ச் உள்ளிட்டவை கிடந்தது. தகவலறிந்து வந்த தாசில்தார். மகேஷ், வருவாய் ஆய்வாளர். வைத்தியநாதன் குப்பை வண்டியில் இருந்த தேர்தல் அடையாள அட்டைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

அரக்கோணம் பழனிபேட்டையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரம் பழனிப்பேட்டை 24, 25, 26 ஆகிய மூன்று வார்டு மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று ஜூலை 31ந் தேதி நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகர மன்ற தலைவர். லட்சுமிபாரி தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர். வெங்கடேசன் ஆணையாளர். துரை செந்தில்குமார் நகர மன்ற துணை தலைவர். கலாவதி அன்புலாரன்ஸ் திமுக நகர அவைத் தலைவரும் நகர மன்ற உறுப்பினருமான துரைசீனிவாசன் நகர துணை செயலாளர். ப.நந்தாதேவி MC ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அலுவலர். தனலிங்கம் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் கலை இலக்கிய பேரவைத் தலைவர். அன்பு MC, நகரமன்ற உறுப்பினர்கள். மோகன்ராஜ் ,ரேவதி, கன்னியப்பன், ராஜலட்சுமி, பிரகாஷ், சிட்டிபாபு உட்பட வட்ட செயலாளர்கள். .பாரி, சரவணன், பழனி உள்ளிட்ட அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூபாய். ஒரு கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை கே.ஸ். மூர்த்தி எக்ஸ். எம்.எல்.ஏ அவர்கள் தொடங்கி வைப்பு!!

படம்
நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர். K.S.மூர்த்தி Ex.MLA அவர்கள் தொடங்கி வைத்தார்.உடன் நகர பொறுப்பாளர்கள் R.நடேசன், தா.கார்த்திகேயன்,நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு,கொமதேக மாவட்ட செயலாளர் ராயல் செந்தில்,கழக நிர்வாகிகள்,கொமதேக நிர்வாகிகள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மார்கெட் காந்தி சிலை:அரக்கோணம் சர்வ கட்சி ஆலோசனைக் கூட்டம்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சிக்கு சொந்தமான (மார்கெட்)நாளங்காடிகட்டிடம் கடந்த 1949-ம் ஆண்டு கட்டப்பட்டது.அப்போதே  நாளங்காடியின் நுழைவு வாயிலின் மாடியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை இருந்தது. மேலும்  காந்தி நாளங்காடி என பெயரிடப்பட்டது. இதனிடையே கடந்த1984-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகத்தால்  நாளங்காடி கட்டிடம் இடித்து புதுபிக்கபட்டது அப்போதும் இந்த நுழைவு வாயில் பகுதி மட்டும் இடிக்கப்படாமல் நாளாங்காடி கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு   காந்தி உருவச்சிலை  அதே இடத்தில் வைக்கப்பட்டது ஆகவே, இந்த சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகள் காந்தி பிறந்த நாள், நினைவு நாள், குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர் இந்த நிலையில் தற்போது புதிய நாலாங்காடி கட்டிடம் கட்டப்பட்டு கட்டிட பணிகள் முடிவடையும் தருவாயில்  மீண்டும்   காந்தி மார்பளவு சிலை வைப்பதற்கு அரசை கோரும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மூத்த அரசியல் பிரமுகர் ஜனதா சேகர் தலைமை தாங்கினார் காங்கி...

நெமிலியில் நடைபெற்ற உங்களுடன் முதல்வர் முகாம்!அமைச்சர். ஆர். காந்தி நல உதவி வழங்கினார்.

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நெமிலி நகரில் உங்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. முதல் எட்டு வார்டுகளுக்கு நடந்த முகாமிற்கு  நெமிலி பேரூராட்சி தலைவர். ரேணுகாதேவி சரவணன்  தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜலட்சுமி செயல் அலுவலர் எழிலரசி முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் தூய்மை துறை  அமைச்சர்.ஆர். காந்தி மற்றும் சோளிங்கர் சட்ட மன்ற  உறுப்பினர். முனிரத்தினம் எம். எல் .ஏ கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆய்வு நடத்திய அரசின் நலத்திட்டங்கள் பலவற்றை பொது மக்களுக்கு உடனுக்குடன் வழங்கினர்.  நிகழ்ச்சியில் கலெக்டர் சந்திரகலா நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் நெமிலி ஒன்றிய குழ  தலைவருமான பெ. வடிவேலு திமுக நகர செயலாளர். ஜனார்த்தனன்மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் எம்.கே சரவணன் நகர அவைத் தலைவர். சேகர் நகர இளைஞரணி  ராகேஷ்ஜெயின்  ஹாரிஷ்மற்றும் அப்துல் ரகுமான்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முகாம் வந்த பொது மக்களுக்கு உதவி மையத்தின் மூலம் சயனபுரம் தலைவர். பவானி வடிவேலு உதவிகள் செய்தார். ...

ராணிப்பேட்டை அருகே புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ நாக கன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 22 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,புளியங்கண்ணு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாக கன்னியம்மன் ஆலயத்தில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் மற்றும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது இந்த நிலையில் இன்று அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலிலிருந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்களான சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வருகை தந்தனர் அப்போது ஆண் பக்தர்கள் அலகுகளை குத்தியபடி ஊர்வலம் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தனர் பின்னர் அருள்மிகு ஸ்ரீ நாக கன்னியம்மன் ஆலயத்தில் ராகு கேது பீடத்தில் அமைந்துள்ள தோஷ நிவர்த்தி 11 அடி உயர நவக்கிரஹ ஸ்ரீ நாககன்னி அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பித்து வழிபாடு நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ நாககன்னி அம்மனின் அருளை பெற்று சென்றனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானத்திலும் பொதுமக்கள் பங்கேற்று உணவு அருந்தி ஆசி பெற்றனர்.இந்த நிகழ்ச்சி ஊர் நாட்டாமைக்காரர்கள் மற்றும் இளைஞர்கள் கிராம பொதுமக்கள் என பலர் பங்கேற்று உள...

செங்கல்பட்டு அருகே ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சூடு போட்டி!!

படம்
தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி 2025, செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் 25.7.2025, 26.7.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. வடக்கு மண்டல அணியின் சார்பாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணாடம் காவல் நிலைய முதல் நிலை காவலர். அன்பரசன் அவர்கள் 300 கஜம் இன்சாஸ் பிரிவில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார்.  தேவனாம்பட்டினம் கடலோர காவல் நிலைய தலைமை காவலர். ராஜகோபால் 300 கஜம் இன்சாஸ் பிரிவில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். கார்பன் துப்பாக்கி பிரிவில் ஆயுதப்படை தலைமை காவலர். வினோத்குமார், பிஸ்டல் துப்பாக்கி பிரிவில் ஆயுதப்படை தலைமை காவலர்.பார்த்திபன் ஆகியோர்கள் அகில இந்திய துப்பாக்கி குண்டு சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பதக்கம் மற்றும் அகில இந்திய துப்பாக்கி குண்டு சுடும் போட்டிக்கு தேர்வான காவலர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கடலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!

படம்
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர். அமர்நாத் அவர்கள்  பள்ளி மற்றும் கல்லூரி  மாணவர்கள் பேருந்து படியில் பயணம்  செய்யக்கூடாது என  அறிவுரை வழங்கியும்,  சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கடலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!

படம்
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் கடலூர் போக்குவரத்து காவல்துறை சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு தலைக்கவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற நகரத் தந்தை எதுவார்குபேர் அவர்களின் பிறந்தநாள் விழா!!

படம்
புதுச்சேரி நகரத் தந்தை எதுவார்குபேர் அவர்களின் பிறந்தநாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று (29.07.2025) கொண்டாடப்பட்டது இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு  மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்.க.இலட்சுமிநாராயணன், அரசு கொறடா P.V. ஆறுமுகம் (எ) A.K.D., சட்டமன்ற உறுப்பினர்கள்  AK.சாய் J. சரவணன்குமார்,  S. ரமேஷ் (எ) K.S.P., R. பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி, U. லட்சுமிகாந்தன்  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கரூர் மாநகராட்சி வாசவி மகாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!!

படம்
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களால், தமிழ்நாடு மக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய அரசு சேவைகள் மக்களின் வீடுகளுக்கே சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் துவக்கி வைக்கப்பட்ட  #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் கரூர் மாவட்டத்தில் மட்டும் 179 இடங்களில் நடைபெறுகின்றன.  இன்று கரூர் மாநகராட்சி, கரூர் மத்திய கிழக்கு பகுதி, வாசவி மகாலில் நடைபெற்ற சிறப்பு முகாமில், அப்பகுதி  பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள்  கரூர் மாவட்ட சொந்தங்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன் என அழைப்பு! இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர். தங்கவேல் இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆய்வு செய்த வேல்முருகன் எம். எல். ஏ!!

படம்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் திருநெல்வேலி  மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போது 7ம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்ற று பிரசித்தி பெற்று விளங்கும் அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதியம்மன், ஆலயத்தில்  வெள்ளித்தேர் அமைப்பது தொடர்பான அரசு உறுதி மொழியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர் தயாரிக்கும் பணிகளையும் கருங்கல் தூண் மற்றும் மேற்கூரைகளை சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கடலூர்- சிஎன் பாளையத்தில் சாலை அருகே உள்ள செம்மண் குவாரியால் போக்குவரத்து அபாயம்!!

படம்
கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம்  சி என் பாளையம் ஊராட்சி கனிமவள கொள்ளை . சி என் பாளையத்தில் இருந்து சிலம்பினாதன் பேட்டை போகும் சாலையில் அமைந்துள்ளது இந்த செம்மண் குவாரி  அனுமதிக்கப்பட்ட அளவை மீறி செம்மண் எடுத்து வருகிறார்கள் சாலை ஓரத்தில் இந்த செம்மண் குவாரி உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.. கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் பலமுறை கடலூர் மாவட்ட நிர்வாகத்திடமும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை காவல் துறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்து ஏற்படும் நிலையில் உள்ள இந்த செம்மண் குவாரியை உடனே தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

திருவந்திபுரம்: ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!!

படம்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவிலில் நேற்று இரவு ஆடிப்பூர மஹோற்சவ திருத்தேர் உத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டுமில்லாமல் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கோழியூர்: பள்ளியில் திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி!!

படம்
பெண்ணாடம் அரிமா சங்க துணை தலைவர். லயன் வெங்கடேஸ்வரன் தந்தை நினைவு நாளை முன்னிட்டு (ஜூலை 28) நேற்று கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கோழியூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மற்றும் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் பெண்ணாடம் அரிமா சங்கத் தலைவர். வசந்த ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

மதுரையில் ஆடிப்புரத்தை முன்னிட்டு நடைபெற்ற அம்மனுக்கு வளையல் திருவிழா!!

படம்
மதுரையில் ஆடிப்புரத்தை முன்னிட்டு  எஸ், எஸ், காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் உள்ள அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

ராணிப்பேட்டையில் மணல் குவாரி திறக்க கோரி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று திங்கள் கிழமை மனுநீதினால்  முகாமில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர். காஞ்சி தீனன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து அரசு அனுமதி பெற்ற இடத்தில் மணல் குவாரி விரைவில் திறக்க கோரியும் எம் சாண்ட் ஜல்லி கல்குவாரிகளில் நடைபெறும் முறைகேட்டை சரி செய்யக்கோரி மனு அளித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி  வந்த அரசு மணல் குவாரி நிறுத்தி வைக்கப்பட்டதால் இரண்டு ஆண்டுகளாக லாரி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் சிரமப்படுகிறோம் தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக அரசு மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தியில் வெளியிட்டிருந்தனர் இதனால் வரை குவாரி திறக்கப்படவில்லை எங்கள் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் விசாரித்ததில் பொதுப்பணித்துறையில்   (CTE கான்சென்ட் to Establish )அனுமதி பெற்றுள்ளதாகவும் அனுமதிக்கு காத்திருப்பதாக தெரிகிறது. எனவே அம்மா அவர்கள் அனும...

பண்ருட்டியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் !!

படம்
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில், பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  வழிகாட்டுதலின் பேரில், பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர்.  பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் உதவி ஆய்வாளர். முரளி ஆகியோர் பண்ருட்டி நகரின் மினி சரக்கு வாகனங்களின்(TataAce)ஓட்டுநர்களிடையேசாலைபாதுகாப்புபற்றியவிழிப்புணர்வு ஏற்படுத்தியும், வாகனங்களின் ஓட்டுநர்கள் குடிபோதையில் வாகனம் இயக்கக் கூடாது எனவும் வாகனங்களில் கம்பி போன்ற அபாயகரமான பொருட்கள் வெளியே நீட்டி இருக்கும் படி எடுத்துச் செல்லக் கூடாது எனவும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பாதுகாப்பாக வாகனம் இயக்க சாலை விதிகளையும் போக்குவரத்து விதிகளையும் மீறி இயக்கும் வாகன ஓட்டுனர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு  துண்டு பிரசுரம் வழங்கினர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

புவனகிரி அருகே சொட்டவனத்தில் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த அருண்மொழிதேவன் எம். எல். ஏ!!

படம்
கடலூர் மாவட்டம்புவனகிரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்று 28.7.2025 திங்கள்கிழமை பகல் 12.00 மணி முதல், கம்மாபுரம் ஒன்றியம், சொட்டவனத்தில் நியாய விலைக் கடையும், சு.கீணனூரில் காத்திருப்போர் கூடமும், அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு புவனகிரி சட்டமன்ற உறுப்பினர். அருண்மொழித்தேவன் எம். எல். ஏ அவர்கள் திறந்து வைத்தார். இதில் அதிமுக கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

அமெரிக்கா போற்றும் தமிழ் பெருவிழா!!

படம்
தமிழரின் பெருமையைப் பகிர்ந்த வடகரோலினா ஆளுநர் – ஒரு வரலாற்றுப் பதிவு! 2025ஆம் ஆண்டிற்கான வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவையின் தமிழ் மகாநாடு, வடகரோலினா மாநிலத்தின் தலைநகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, 2025 ஜூலை மாதம் 'தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாக' வடகரோலினா மாநில ஆளுநரால் பிரகடனப்படுத்தப்பட்டது – இதுபற்றி வடகரோலினா மாநில ஆளுநர் ஜோஷ் ஸ்டைன் வெளியிட்ட உரை: "2025 ஜூலை மாதத்தை 'தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாக' வடகரோலினா மாநிலத்தில் அறிவிக்கிறேன் மற்றும் இதன் அனுசரணையை அனைத்து குடிமக்களுக்கும் பரிந்துரைக்கிறேன்." இது உலகத் தமிழர்களுக்கான மிகுந்த மரியாதை மற்றும் பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்தது.இப்பிரகடனத்தை அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து பெற முனைந்தவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியல் துறையின் முன்னாள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி நாகலிங்கம் சிவயோகன் அவர்கள். அவரது திருநாமத்தில், வடகரோலினா தமிழர் சங்கம் வழங்கிய “தமிழ் மரபு விருது” தமிழ் பணிக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இம்முறை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்...

கடலூர் மாவட்ட அதிமுக சார்பில் 'மக்களைக் காப்போம்' "தமிழகத்தை மீட்போம்"

படம்
கடலூர் மாவட்டம், அதிமுக கழக பொதுச்செயலாளர், வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தலைமையை ஏற்று இன்று 28.7.2025 திங்கட்கிழமை மதியம் 1.00 மணியளவில், கடலூர் மேற்கு மாவட்டம், கம்மாபுரம் தெற்கு ஒன்றியம், சு.கீணனூரில் மாற்றுக்கட்சியினர் 25 பேரும் விருத்தாசலம் நகரத்தில் மாற்றுக்கட்சியினர் 26 பேரும்  கழகத்தில் இணைந்தனர். இதில் அதிமுககழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கடம்பூர்: காளி கோயிலில் ராகுகால பூஜை!!

படம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூரில் சுயம்பு காளி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இன்று ராகுகால சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.