ஆம்பூரில் மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி காரில் கடத்திச்சென்று பாலியல் தொல்லை! - 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது!!
திருப்பத்தூர் மாவட்டம்.ஆம்பூரில் உள்ள ஒரு பள்ளியில், 3 மாணவிகள் படித்து வரும் நிலையில், இந்த பள்ளி மாணவிகளிடம் பழகி வந்த நண்பர்கள் 3 பேர், மாணவிகளை ஆசை வார்த்தை கூறி காரில் கடத்திச்சென்று, பாலியல் தொல்லை அளித்துள்ளனர், மாணவிகளை காணவில்லையென அவர்களது பெற்றோர், ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரின் பேரில், வழக்குபதிவு செய்த காவல்துறையினர், மாணவிகளை தீவிரமாக தேடி, பள்ளிகொண்டா அருகே காரில் இருந்து மாணவிகளை காவல்துறையினர் மீட்டனர், அதனை தொடர்ந்து, மாணவிகளை கடத்திச்சென்றதாக, ஆம்பூரை சேர்ந்த அனான், ஜலால் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை ஆம்பூர் நகர காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்..மேலும் பள்ளி மாணவிகளை காரில் கடத்திச்சென்று பாலியல் தொல்லை அளித்த, நண்பர்கள் மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைதான சம்பவம், ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.