ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கேவேளூரில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழா!
ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு அதிமுக கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு கிழக்கு ஒன்றியம் கேவேளூர் பகுதியில் முன்னாள் காவல் ஆய்வாளர். முகுந்தன் அவர்கள் ஏற்பாட்டில் ஒன்றிய கழக செயலாளர் வளவனூர் எஸ்.அன்பழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர் வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர். VKR.சீனிவாசன், மாவட்ட கழக துணை செயலாளர். ரமா பிரபா உட்பட திரளான அதிமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்