தமிழ்நாட்டின் அண்ணா, காந்தி காவல் பதக்கங்களை அவமதித்து டெல்லிக்குச் சேவகம் செய்யும் விஜய்!!


முதலமைச்சர் தன் கைவசம் வைத்துள்ள காவல்துறையில், தமிழ்நாடு காவலர்களுக்குப் பதக்கம் வழங்கும் விழாவில், அண்ணா பதக்கமே முதன்மையானது. அதுபோலவே காந்தி காவல் பதக்கமும் மதிப்பிற்குரியது. தமிழ்நாட்டின் இந்த இரு பதக்கங்களையும் இருட்டடிப்பு செய்துவிட்டு, விழா மைதானத்தின் பின்னணியில், அமித் ஷா பொறுப்பு வகிக்கும் 'ஒன்றிய உள்துறை அமைச்சர்' பதக்கத்திற்கு வானளாவிய பிரம்மாண்ட பேனர்களை வைத்துள்ளார் டம்மி முதல்வர் விஜய்!

காவல்துறையினருக்கு வழங்கப்படும் அண்ணா மற்றும் காந்தி பதக்கங்களே தமிழ்நாட்டின் பெருமை. அதை விடுத்து, ஒன்றிய அரசின் பதக்கத்தை மட்டும் வெட்கமில்லாமல் முன்னிலைப்படுத்தி, பெருமைக்குரிய காக்கிச் சீருடை பதக்க விழாவில் காவி நிறத்தைக் காட்டியிருக்கிறது தவெக அரசு. தன் மாநிலப் பதக்கத்தின் மாண்பைக் கூடக் காப்பாற்ற வக்கில்லாத இந்த அரசால், தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க முடியும்?

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!