இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  தேனி மாவட்டம், கம்பத்தில் ஆங்கூர்பாளையம் சாலையில் செல்போன் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டிட தொழிலாளி விழுந்து படுகாயம் அடைந்தார். குழி தோண்டப்பட்டதற்கான தடுப்பு ஏதும் இல்லாததால் குழியில் விழுந்து படுகாயம் அடைந்ததால் அப்பகுதி  பொதுமக்களும் கம்யூனிஸ்டு கட்சியினரும் சேர்ந்து தனியார் தொழில் தொடர்பு நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர் இதனை யடுத்து கம்பம் தெற்கு நிலைய காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட இளைஞருக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

நேருக்கு நேர் இரண்டு அரசு பேருந்து மோதியதில் எட்டு பேர் பலி 40 பேர் படுகாயம் !!

படம்
சிவகங்கை கும்பங் குடி பாலம் அருகே திருப்பத்தூர் சமத்துவபுரம் பிள்ளையார்பட்டி சாலையில் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி சென்ற பேருந்தும் காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் எட்டு பேர் பலி மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து காயமடைந்தவர்களை திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் போக்குவரத்து நெரிசல் மற்றும் பணிமூட்டம் காரணமாகவே விபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது  தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கும்பக்கரையில் குளிக்க தடை!!

படம்
தேனி மாவட்டம், பெரியகுளம் கும்பக்கரை அருவியில்  வெள்ளப்பெருக்கு மற்றும்  டிட்வா புயல் காரணமாகவும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்கவும்  பார்வையிடுவதற்கும் தடை  விதிக்கப்பட்டுள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரகர் அன்பழகன் கூறியுள்ளார். தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

உசிலம்பட்டி செக்கானூரணி பகுதியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாசன நீர் திறப்பு!!

படம்
செக்கானூரணி பள்ளியான் கொக்குளம் சுற்றுவட்டார விரிவாக்க கால்வாயில் இருந்து இன்று சுமார் 9 கிலோமீட்டர் தூரத்திற்கு நீர் திறக்கப்பட்டது இதன் மூலம் 350 ஏக்கர் விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெற உள்ளன. செக்கானூரணி, ஊர்குளம் ,புளியங்குளம் கோரைக்கண்மாய் , கின்னிமங்கலம் கீழ்கண்மாய் உள்ளிட்ட முக்கிய கண்மாய் களுக்கு நீர் சென்று சேரும் நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நீர் திறந்து விடப்பட்டது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். நீரை திருமங்கலம் பாசன கூட்டத் தலைவர் எம் பி ராமன் திறந்து வைத்தார் நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

திருக்கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தை மாவட்ட உணவு நியமன அலுவலர் திடீர்ராய்வு !!

படம்
திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக 731 இடங்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பத்து நாட்களாக அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் டிசம்பர் 1 முதல் நான்காம் தேதி வரை அதிகமானோர் அன்னதானம் வழங்க உள்ளனர் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் செய்பவர்களுக்கு உணவு மேலாண்மை பயிற்சி கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டுள்ளது.  எஃப். எஸ். எஸ். ஐ. லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது உணவில் கலர் சேர்ப்பதில்லை உபயோகித்த எண்ணெய் சேர்ப்பதில்லை பெரும்பாலும் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் இந்த முறை எதிர்பார்க்கப்படுகிறது மேலும் உணவு பரிமாறுபவர்கள் தலையில் கேப் கைவினைகள் உகந்த பாதுகாப்புடன் எந்தவித நோய் தொற்றும் இல்லாதவர்கள் மட்டுமே மருத்துவச் சான்று பெறப்பட்டு தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை திருப்பூர் கோவை சேலம் உள்ளிட்ட 22 உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நான்கு மாவட்ட நியமன அலுவலர்கள் வைத்து 15 குழுவும் சேர்ந்து ஆய்வு செய்து வருவதாக மாவட்ட உணவு நியமன அல...

இலவச மருத்துவ முகாம்!!

படம்
உசிலம்பட்டியில் இலவச மருத்துவ முகாம் எஸ். ஓ. ஆர். தங்கபாண்டியன் துவக்கம் இன்று உசிலம்பட்டியில் பொதுமக்களுக்காக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமை உசிலம்பட்டி திமுக நகரச் செயலாளர். ஓ. ஆர். தங்கபாண்டியன் துவங்கி வைத்தார்.  தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

நெமிலி அருகே அமைச்சர். ஆர். காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!!

படம்
இராணிப்பேட்டைமாவட்டம்,நெமிலி தெற்குஒன்றியசெயலாளர்.ஆர்.பி. இரவீந்திரன் ஏற்பாட்டில் ரெட்டிவலம் பகுதியில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறைஅமைச்சர்.ஆர்.காந்தி அவர்கள் முன்னிலையில் பல்வேறு கட்சியை சேர்ந்த (அஇஅதிமுக பிஜேபி பாமக.வில்)  250 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில மாவட்ட அவைத்தலைவர். ஏ.கே.சுந்தரமூர்த்தி மாவட்ட துணை செயலாளர்கள். மு.சிவானந்தம்,துரைமஸ்தான்,  சோளிங்கர் தொகுதி தேர்தல் பார்வையாளர். பாஸ்கரன்,  நெமிலி ஒன்றிய குழு தலைவர். பெ.வடிவேலு, மத்திய ஒன்றிய செயலாளர். SGC.பெருமாள் ,  வடக்கு ஒன்றிய செயலாளர். மணிவண்ணன் மாவட்ட விவசாய தொண்டர்அணிஅமைப்பாளர்.ராமலிங்கம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். V.S.முரளி மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

சின்னமனூர்: நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேகம் !!

படம்
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே கள்ளப்பட்டி நூறாண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ வெண்டி முத்தையா திருக்கோயிலில் நேற்று கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்கிய நிலையில் இன்று காலை கடம் புறப்பாடு கும்ப கலசத்திற்கு தீர்த்தங்கள் சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதனை அடுத்து சின்னமனூர் சுற்று வட்டார பகுதியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

சாலை வசதி கேட்டு நாற்று நடவு செய்து பெண்கள் போராட்டம் !!

படம்
மதுரை மாவட்டம், உசிலை செல்லம்பட்டி ஒன்றியம் பா. மூப்பன்பட்டிக்கு அருகே பேரூராட்சிக்குட்பட்ட ரெட்டியப்பட்டியில் வழி எங்கும் சேரும் சகதியுமாக உள்ளது இந்த வழியில் செல்பவர்கள் நிலை  தடுமாறி கிழே விழும் சூழ்நிலை உள்ளது.  இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பள்ளிக்கு மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லாததால் பொறுமை இழந்த பெண்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேரும் சகதியுமாக இருப்பதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது எனவே இது குறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேவர் பிளாக் சாலை அல்லது தார் சாலை அல்லது சிமெண்ட் சாலை அமைத்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் மேலும் நடவடிக்கை எடுக்க விட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 8% கூடுதலாக பெய்துள்ளது!!

படம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 8% கூடுதலாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான நிலையில் 352.5 மிமீ மழை பொழியும் நிலையில், இன்று வரை 381.7 மிமீ மழை பொழிந்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

தவெக வில் இனைந்த செங்கோட்டையனுக்கு எச்சரிக்கை!!

படம்
சூடு சொரணை இருந்தால் எம்ஜிஆர், அம்மா படத்தை பயன்படுத்தாதே என்று செங்கோட்டையனுக்கு சுவரொட்டி மூலம் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி சிவகங்கை அதிமுகவினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

நத்தத்தில் செல்வ விநாயகர் திருக்கோயில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழா !!

படம்
திண்டுக்கல் மாவட்டம், வேலம்பட்டி கிராமம் அண்ணா நகரில் உள்ள செல்வ விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 29 12 2023 நேற்று விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா வாஸ்து சாந்தி திருமுறை பாராயணம் கோபூஜை கன்னியா பூஜை நிறைவடைந்து , இன்று 30.11.2025 காலை ராமேஸ்வரம் ,கரந்தமலை, அழகர் கோவில் போன்ற முக்கிய புன்னிய தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்த குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுரத்தின் உச்சியில் எடுத்துச் செல்லப்பட்டு காலை 10 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.பின்பு சுற்றி கூடிஇருந்த பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் செல்வ விநாயகருக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் நத்தம் கோவில்பட்டி மீனாட்சிபுரம் அண்ணா நகர் மற்றும் சுற்றுப் பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர் .அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை செல்வ விநாயகர் திருக்கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். தென்மண்...

செஞ்சி டேனி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா!!

படம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த காரியமங்கலத்தில் உள்ள டேனி கல்வியல் கல்லூரியில் 2019, 2020,2021 ஆண்டுக்கானபட்டமளிப்பு விழா டேனி கல்வியில் கல்லூரியில் உள்ள பஸ்கரன் நினைவு பல்நோக்கரங்கத்தில் நடைபெற்றது. டேனிகல்வி குழுமத்தின் தலைவர். ஜாஸ்பர்தலைமைதாங்கினார்.செயலாளர் டாக்டர். ஸ்டெல்லா பாக்கியவதி  முன்னிலை வகித்தார்.கல்வியாளர் டாக்டர். சக்திவேல் அனைவரையும் வரவேற்றார். விழாவில் முன்னாள் அமைச்சர். செஞ்சி மஸ்தான், எம்எல்ஏ, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர். ராஜசேகரன், ஆகியோர் கலந்து கொண்டு 173 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் வல்லம் ஒன்றிய பெருந்தலைவர். அமுதா ரவிக்குமார்,மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பழங்குடி இருளர் அமைப்பு நிர்வாகி. சுடரொளி சுந்தரம், வழக்கறிஞர். வெற்றிச்செல்வன், மேல் தளவாய் ஊராட்சி மன்ற தலைவர். கலைச்செல்வி பாலச்சந்தர், காரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர். பாலு கல்லூரியின் முதல்வர். மகாலட்சுமி  பேராசிரியர்கள். பரிதிஓவியா, ஈஸ்வரி, சரவணன், நாகராஜ், குமாரசாமி, ஞானவேல், பாலு, ரமேஷ் குமார், மரிய...

திருவரங்குளம் சிவன் கோவிலுக்குள் புகுந்த மழை நீர்:அகற்ற வலியுறுத்தல்!!

படம்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் ஸ்ரீ அரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் மழை பெய்தால் கோவில் முழுவதும் தண்ணீரால் நிரம்பி விடுகின்றது. ஒரு பக்கம் சாலையில் செல்லும் தண்ணீர் கோயிலுக்குள் வருவதும் மறுபுறம் கோவில் ஊற்று நீர், ஒருபுறம் கோவில் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தில் இருந்து தண்ணீர் கோவிலுக்குள் வந்து விடுவதும் தொடர் கதையாக உள்ளது. இதனை சரி செய்ய பொதுமக்கள் தமிழக அரசின் அறநிலை துறைக்கு பலமுறை கோரிக்கை வைத்தும்மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் இந்த கோவிலினுடைய உள் பிரகாரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கு தமிழக அரசின் அறநிலையத்துறை உடனடி தீர்வு காண பொதுமக்கள் பக்தர்கள் தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

பென்னிகுவிக் மணிமண்டபம் முல்லைப் பெரியாறு கட்டுமான அறிக்கை!!

படம்
தேனி மாவட்டத்தில் 130 ஆண்டுகளுக்கும் முன்னர் (1887-1895) முல்லை பெரியாறு கட்டுமானத்தில் உழைத்த இந்த படகில் ஒட்டியிருந்த கட்டுமானக் கலவை நமது அதிகாரிகளால் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டு இப்பொழுது ஓராண்டாகிறது. அறிக்கை இல்லை . பதில் இல்லை. அமைதியாக இப்பொழுது நினைவூட்டி  விண்ணப்பிக்கிறோம். அமைதியாகக் கேட்பது என்பதுகூட ,  தட்டிக் கழிக்க,  எப்பொழுதுமே யாருக்கும்  வசதிதான். அதுவும் அதிகாரிகள் பலருக்கு இது கைவந்த கலை.  இருக்கட்டும். ஆனால் ஒன்று. புயலுக்கு முன் அமைதியாக இருக்கும் கடல். இடமும் படமும்: பென்னிகுக் மணிமண்டபம், லோயர் கேம்ப்- கூடலூர் மலையடிவாரம் - தேனி மாவட்டம். என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

தேனி- உயர் மின் ரக கோபுர விளக்குகளும் தெரு விளக்குகளும் எரியவில்லை!!

படம்
தேனி மாவட்டம் பெரியகுளம் தேரடிதெருவில் உள்ள உயர்மின் ரக கோபுர விளக்குகளும் தெருவிளக்குகளும் சரிவர எரியவில்லை, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?  தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

மழை வெள்ளத்தில் மறைந்து விட்ட மாவட்ட விளையாட்டு மைதானம்!!

படம்
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மைதானத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தங்களது பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். மைதானத்தில் மழைநீர தேங்கி நிற்கிறது. மழைக்காலம் வந்தாலே விளையாட்டு மைதானம் உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்பதால் ஈரப்பதம் கொண்டுள்ளது.  இதனால் விளையாட்டுவீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. விளையாட்டு மைதானத்தில் தேவையான அளவு மண் கொட்டி உயர்த்தி சீர் செய்தால்தான் பயிற்சி மேற்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது.  மேலும் விளையாட்டு மைதானத்தின் நான்கு புறத்திலும் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.  தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் கொசு உற்பத்தி ஆவதால் தொல்லை அதிகரித்து உள்ளது. நடைபயிற்சி மேற்கொள்ளும்  முதியோர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பாம்புகளின்  படையெடுப்பு அதிகரித்துள்ளது. பயற்சி பெறுபவாகள், நடைபயற்சி மேற்கொள்பவர்கள்பாம்புகளை கண்டு நடுங்கு...

கொட்டும் மழையிலும் அரோகரா கோஷத்துடன் அரங்கேறிய அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் நூதன ஆலய ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!!

படம்
கடலூர் மாவட்டம், வடலூர் மாருதி நகரில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ தட்ஷணாமூர்த்தி ஆலய ஜீரணோத்தாரண மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலதாளங்களுடன் மங்கள இசையுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கடம் புறப்பாடு நடைபெற்று விமானதினை அடைந்தது.அதனை தொடர்ந்து ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கோயிலில் சுற்றி இருந்த முருக பக்தர்கள் கொட்டும்ஙமழையில் அரோகரா அரோகரா என பக்தி பரசவசத்துடன் மகா கும்பாபிஷேகத்தினை கண்டு களித்தனர். விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர்.. சிவக்குமார் வடலூர் நகர மன்ற தலைவர். சிவக்குமார் கவுன்சிலர். கண்ணன்  ஆகியோர் உடன் இருந்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

பிறந்தநாள் வாழ்த்து!!

படம்
30/11/2025 இன்று பிறந்தநாள் காணும் என் அன்பு ஆசான் திரு. நாகராஜன் HMI அவர்களின் தவப்புதல்வி செல்வி. ரிதமிகா அவர்கள் பெற்றோர்கள் பெருமையுடன் வாழ்த்த ! உறவினர்கள் உள்ளத்தால் வாழ்த்த ! நண்பர்கள் நலமுடன் வாழ்த்த !நீங்கள் பிறந்த இந்நாளில் ! அன்புடன் வாழ்த்துக்கிறோம்! இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் வாழ.. நிலவன் டிவியின் சார்பில் இனிய பிறந்தநாள்  நல்வாழ்த்துக்கள்.                                                    அன்புடன்,                                                  மு. பிரகாசம்,                                              நிலவன் TV குழுமம்.

வாழைத்தார்களை மழை நீரில் நீந்தி சென்று அறுவடை !!

படம்
திருச்செந்தூரில் மூழ்கிய 250 ஏக்கர் வாழை தோப்பு! தாமிரபரணியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் வெள்ளத்தில் மூழ்கிய வாழைத்தார்கள் .வெள்ளத்தில் மூழ்கிய வாழைத்தார்களை வீணாக்காமல் காக்க அறுவடை செய்து படகுமூலம் கரையேற்றிய விவசாயிகள்.  தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்த நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!

படம்
கடலூர்மாவட்டம்,வடகிழக்கு பருவமழை மற்றும் டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னிட்டு  பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்புக்கு தேவையான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஜே.சி‌.பி இயந்திரம், ஜெனரேட்டர், மணல் மூட்டைகள், கழி, நீர் இறைக்கும் மோட்டார், மரம் இருக்கும் இயந்திரம், மற்றும் பல்வேறு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது நேற்று 29.11.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான  க. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பண்ருட்டி நகராட்சி ஆணையாளர். காஞ்சனா அவர்களும் தயார் நிலையில் உள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.   உடன் உதவி பொறியாளர். கார்த்திகேயன் அசோக் RI நகர அவைத் தலைவர். ராஜா, நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன், நகர மன்ற உறுப்பினர். கிருஷ்ணராஜ், கலைவாணி மதியழகன், கழக நிர்வாகிகள், களப்பணியாளர். சீனிவாசன், மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

நத்தத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த (மின் மயானம்) நவீன எரிவாயு தகன மேடை!!

படம்
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும் என்பது நத்தம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதையடுத்து நத்தம் பேரூராட்சி தேர்தலில் சேர்மன் வேட்பாளராக நின்ற சேக் சிக்கந்தர் பாட்சா தேர்தலில் வெற்றி பெற்றால் மின் மயானம் அமைக்க தனது சொந்த இடத்தை இலவசமாக தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். இதனை ஒட்டி தேர்தலில் வெற்றி பெற்று  பேரூராட்சி தலைவராக உள்ள சேக் சிக்கந்தர் பாட்சா தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நத்தம் அருகே அப்பாஸ்புரம், மெய்யம்பட்டி பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை மின் மயானம் அமைக்க தானமாக வழங்கினார்  தொடர்ந்து 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் வளாகம்  கட்டுமான பணிகள் நிறைவடைந்து நேற்று நவீன எரிவாயு தகன மேடையில் (மின் மயானம்) இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட பொதுமக்கள்  பயன்பாட்டுக்கு வந்தது. திறந்த வெளியில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வந்ததால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் இதனை தவிர்க்கும் வகையில், பொதுமக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்திட பேரூராட்சி  உட்பட்ட பகுதிகள் ...

மதுபான கடை இடம் மாற்ற கோரி தமிழக மக்கள் கட்சி சார்பில் மனு!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் தலைமை இடமாக கொண்டு தமிழக மக்கள் கட்சி பணியாற்றி வருகிறது. இந்த கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர். புலியேந்திரன் தமிழக முதலமைச்சருக்கு  மனு ஒன்று அனுப்பினார் அதில் மது கடைகளை வேறு இடத்தில் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார் அதன்விவரம் வருமாறு  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் மற்றும் மார்கெட் பகுதியில் அமைந்திருக்கும் அரசு மதுபான கடைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும். ஏனெனில் இங்கு பயணிக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் அவதிபடும் நிலை ஏற்பட்டு வருகிறது எனவே மக்கள் நலன் கருதி அரக்கோணம் நகர எல்லையில் இந்த இரண்டு மதுபான கடைகளையும் (ஒயின்ஷாப்) உடனடியாக இடம் மாற்ற செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் கட்சியின் சார்பாக தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். என குறிப்பிட்டு உள்ளார். மேலும் இதன் நகல்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட டாஸ்மாக் நிறுவனம், கோட்டாச்சியர், மற்றும் தாசில்தாருக்கும், அனுப்பி வைத்து உள்ளார். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

மதுரை - அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து!!

படம்
  மதுரை : வக்பு வாரியம் கல்லூரி எதிரே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நடுவில் உள்ள தடுப்பு சுவர்மீது மோதி விபத்து! தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கடலில் மூழ்கிய ரயில் பாதை வெளியில் தெரிந்த அதிசயம்!

படம்
தனுஷ்கோடியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய ரயில் பாதை அதிர்ச்சியில் சுற்றுலா வந்த மக்கள் பிரமித்து பார்த்தனர்.  தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

நெமிலி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர் ஆர். காந்தி!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் நெமிலி ஊராட்சி ஒன்றியம் சேந்தமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டு 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.123 இலட்சம் மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர மாகாலி, சிறப்பு சக்கர நாற்காலி, காதொலிக் கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.  உடன் மாவட்ட ஆட்சித்தலைவர். முனைவர் ஜெ.யு.சந்திரகலா.இஆப, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேறு, மாவட்ட சுகாதார அனுவலர். மரு.செந்தில்ருவார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர். திருவசந்த ராமகுமார், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் SGC.பெருமாள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். அரக்கோணம் செய்தியாளர் ரவி