இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெல்லிக்குப்பம் அருகே வரகால்பட்டு கிராமத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!

படம்
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S. ஜெயக்குமார் IPS அவர்கள் நெல்லிகுப்பம் காவல் சரகம் வரகால்பட்டு கிராமத்தில் சலுன் கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன்  அவர்கள் உடன் இருந்தார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கடலூர் அருகே பெண்ணாடம் காவல் நிலையத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பள்ளி மாணவன் அய்லான்அய்யத்!!

படம்
கடலூர் மாவட்டம்  பெண்ணாடம் வள்ளியம்மை நகர் அல்லா பிச்சை , அம்ரின் தம்பதியினரின் மகன் அய்லான் அய்யத் வயது 4,  என்பவர் பெண்ணாடம் ஜெய சக்தி மெட்ரிக் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். காவல்துறையின் மீது ஈர்ப்பு கொண்டு தான் படித்து காவல்துறையில் அதிகாரியாக வர வேண்டும் என அடிக்கடி கூறி வந்தவர், தனது பிறந்தநாளை காவல் நிலையத்தில் கொண்டாட வேண்டும் என பெற்றோர்களிடம் கூறியுள்ளார். அய்லான் அய்யதின் பெற்றோர் பெண்ணாடம்  காவல் உதவிஆய்வாளர்.பாக்கியராஜ் அவர்களிடம் அனுமதி  பெற்று பெண்ணாடம் காவல் நிலையத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார் . பெண்ணாடம் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் . 4 வயது சிறுவன் காவல் நிலையத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள் . கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கடலூர் அருகே காடாம்புலியூர் பஸ் ஸ்டாப்பில் மர்ம நபர்கள் விட்டுச் சென்ற சூட்கேஸ் ஆல் பரபரப்பு!!

படம்
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த சமயத்தில் மாலை ரோந்து பணி மேற்கொண்டிருந்த  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.  S. ஜெயக்குமார் IPS  அவர்கள்  உடனடியாக அதிவிரைவு படை வீரர்கள் மூலம் அந்த  சூட்கேஸை திறந்து பார்த்தபோது அந்த சூட்கேசில் பொருட்கள் ஏதும் இல்லை என தெரிந்து அந்த சூட்கேஸ் அப்புறப் படுத்தப்பட்டது . கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

பண்ருட்டி அருகே விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய ஜெயகுமார். ஐ.பி.எஸ்!!

படம்
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பண்ருட்டிலிருந்து கடலூர்  சென்றுகொண்டிருந்தபோதுபக்கிரிபாளையம் பெட்ரோல் பங்க் அருகில் முருகவேணி வயது 55 என்பவர்   சாலையில் நடந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் மோதி  கீழே விழுந்த பெண்ணை  கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி முதலுதவி மேற்கொண்டு, அதிவிரைவு படை வீரர்கள் ஆட்டோ மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

சென்னை -திருவூர் சூப்பர் கிங்க்ஸ் சிலம்பம் கிளப் மற்றும் திருநின்றவூர் நடராஜன் கிளப் மாணவ மாணவிகள் சாதனை!!

படம்
சென்னை -திருவூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு காய் கனி வார சந்தை வளாகத்தில் திருவூர் சூப்பர் கிங்க்ஸ் சிலம்பம் கிளப் மற்றும் திருநின்றவூர் நடராஜன் சிலம்பம் கிளப் மாணவர்கள் சுமார் 200 மாணவ மாணவிகள் தொடர்ச்சியாக 25 நிமிடங்கள் 25 நொடிகளில் சிலம்பம் கோலில் ரிப்பன் கட்டி பல்வேறு வகையில் சிலம்பம் சுற்றி சாகசங்கள் செய்து யூனிவர்சல் அச்சுயூவர் புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்தனர், பெற்றோர்கள் பார்வையாளர்கள் என அனைவரும் எழுந்து நின்று  கரகோஷம் எழுப்பி பாராட்டினர்,  மேலும் மாணவ மாணவிகள் சிலம்பம் சண்டை , வாள் சண்டை , ஈட்டி சண்டை நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர்.  சாதனை படைத்த மாணவர்களுக்கான  யூனிவர்சல் அச்சுயூவர் புக் ஆஃப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சான்றிதழை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர். சா.அருணன் அவர்கள் திருவூர் சூப்பர் கிங்க்ஸ் கிளப் நிறுவனர். வை.சுந்தர் , பயிற்சியாளர்கள். ஆர்.ஜெயராமன், ரா.விஜய் ஆனந்த்,  மேலாளர். து.லோகேஸ்வரி,மற்றும் திருநின்றவூர் கிளப் நிறுவனர். நடராஜன்,...

பண்ருட்டியில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மாணிக்கவாசகர் குருபூஜை!!

படம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் திருவதிகையில் வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாணிக்க வாசகர் குரு பூஜை இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் மகம் நட்சத்திர தினத்தன்று மாணிக்க வாசகர்குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.அதேபோல இந்த ஆண்டு மாணிக்கவாசகர்குரு பூஜை விழா நேற்று இரவு நடந்தது. இதனை முன்னிட்டு சாமி, அம்பாள், நால்வர் உள்ளிட்டோர்களுக்கு சிறப்பு அபிஷே ஆராத னை, விசேஷ பூஜை, ஆகியவைநடந்தது.தொடர்ந்துமாணிக்கவாசகர்உற்சவர் சிறப்பு மலர் அல ங்காரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து நடராஜர் சன்னதி யில் ஓதுவா மூர்த்திகள் மாணிக்கவாசகர் அருளிய திருவெண்பாவை இசைக்கத் செய்து மகா தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடு களை விழா குழுவினர், கோயில் நிர்வாகித்தனர், உற்சவ தாரர்கள் சிறப்பாக செய்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!!

படம்
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,உதயநிதி ஸ்டாலின்  அவர்களின் வழிகாட்டுதலில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முழக்கத்தோடு, புதிய கழக உறுப்பினர் சேர்க்கும் பணியை, அரவக்குறிச்சி  சட்டமன்ற தொகுதியை சேர்ந்த BLA-2, BDA மற்றும் பூத் இளைஞர் அணிகள் விரைந்து முடிப்பதற்கான பயிற்சி முகாம்,   இன்று ஞாயிற்றுக்கிழமை , அரவக்குறிச்சி, நொய்யல் அம்மையப்பர் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் அழைப்பாளராக  முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக கழக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சியை  சிறப்பித்தார். இந்நிகழ்வில், மாண்புமிகு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர். இளங்கோ மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கலவை அருகே பொன்னம்பலம் கிராமத்தில் தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை  அடுத்த பொன்னம்பலம் கிராமத்தில் தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர்கள் சங்கத்தினர். 100 க்கும்  மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இவ்வாற்பாடத்தின் போதுடாக்டர். கிருஷ்ணசாமி, விசிக தலைவர் தொல். திருமாவளவன், வன்னி அரசு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர். வேல்முருகன், மார்க்கஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சண்முகம் ஆகியோரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கே.முருகன், செயலாளர். பாலமுருகன், பொருளாளர். ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை குறித்து பேசினார். சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர்.சிவராமன் கண்டன உரையாற்றினார். அவர் பேசுகையில்  பனை,தென்னை, ஈச்சமரம் போன்ற மரங்களில் எடுக்கும் கள்ளு  விஷம் அல்ல உணவு, சாராய தொழிலுமல்ல, குலத் தொழிலுமல்ல,  விவசாய தொழில்  எங்களின் வாழ்வாதாரம்,  இதனை மூன்று வேலையும் எடுத்துக் கொள்ளலாம்  எந்த உணவும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்  அளவோடு தான் எடுத்துக்கொள்ள  வேண்டும்  கள்ளு எங்கள் உணவு, கள்ளு எங்கள் உரிமை இதனை உணவு பட்டி...

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியே,முழு இந்தியாவின் வளர்ச்சி! மகாராஷ்டிரா மாநில ராஜ்யசபா உறுப்பினர் அனில் போண்டே பேச்சு!!

படம்
ஒரு மாநிலத்தின் வளர்ச்சியே,முழு இந்தியாவின் வளர்ச்சி என ராணிப்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்வில் மகாராஷ்டிரா மாநில ராஜ்யசபா உறுப்பினர் அனில் சுக்தியோராவ் போண்டே தெரிவித்தார். ராணிப்பேட்டை டச் கேம்பஸ் நிறுவனம் சார்பாக,பணியாளர் கல்வியில் சிறந்து விளங்குதல்,   ( excellence in employees education), என்ற தலைப்பில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டே மேற்கல்வி ஆலோசனை வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வீடு தேடி கல்வி ஆலோசனை வழங்கும்முறைஅறிமுகப்படுத்தப்பட்டது.வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தில் எவ்வாறு கல்வி சேவைகளை பெறலாம் என்பதையும் அவர்களுக்கு தேவையான பல்கலைக்கழகங்களையும் கல்வி நிறுவனங்களையும் எவ்வாறு தேர்ந்தெடுத்து படிப்பது என்பதையும் டச் கேபஸ் நிறுவனம் கல்வி ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் மகாராஷ்டிரா மாநில பாஜக ராஜ்யசபா உறுப்பினரும், பாஜக கிசான் மோர்சா அமைப்பின் தேசிய செயலாளருமான டாக்டர். அனில் சுக்தியோராவ் போண்டே சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு பேசியதாவது...  தனியார் தொழி...

கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆய்வு செய்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!

படம்
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.  S. ஜெயக்குமார் IPS அவர்கள்கடலூர்மதுவிலக்குஅமல்பிரிவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டார். வழக்கு கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு நிலுவை வழக்குகளில் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்  அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

பண்ருட்டி கெடிலம் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியாண்டவர் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா!!

படம்
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி திருவதிகை எம்.ஜி.ஆர் நகர் கெடிலம் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியாண்டவர் கோயில் மகா   கும்பாபிஷேகம் இன்று 29.6.2025 வெகு விமர்சியாக  நடைபெற்றது பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான.க.இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆடிட்டர் தியாகராஜன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் நகர மன்ற உறுப்பினர். கௌரி அன்பழகன் அருள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விழா குழுவினர் சுற்றுவட்டார பகுதியில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பொது மக்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

அரக்கோணத்தில் நடைபெற்ற எடப்பாடி பிறந்தநாள் விழா! பொதுக்கூட்டம்!! சு.ரவி எம்.எல்.ஏ பங்கேற்பு!!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர். பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் பத்மநாபன், ஜெவி. ஜெய்சங்கர் ஆகியோர் வரவேற்று பேசினர். ஒன்றிய செயலாளர். பிரகாஷ் முன்னாள் நகர செயலாளர். துரை குப்பசாமி வழக்கறிஞர். ஆறுமுகம் ஆகியோர் துவக்க உரை ஆற்றினார்.  தலைமை கழக பேச்சாளர். அமுதா அருணாசலம் மாவட்ட செயலாளரும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர். மீனா ரகுபதி மாவட்ட வர்த்தக அணி செயலாளர். தேவன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர். பி. எ. பாலு மாவட்ட மாணவரணி செயலாளர். பிரபு மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஹரிஹரன் ஒன்றிய செயலாளர். விஜயன் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர். வழக்கறிஞர். பிரகதீஸ்வரன் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர். தண்டலம் அமுல் ராஜ் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர். அம்மனூர் கே. ஆர். சீனிவாசன், இலுப்பை தண்டலம் வழக்கறிஞர். மனோகர்தக்கோலம...

ராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளர் எம். ஏ.முனியசாமிஅவர்களின்முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்!!

படம்
ராமநாதபுரம் மாவட்டம், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சி தலைவி அம்மா ஆகிய இரு பெரும் தெய்வங்களின் அருள் ஆசியுடன். அதிமுக கழக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வரான மாண்புமிகு  எடப்பாடியார் அவர்களின் தலைமை ஏற்று. இராமநாதபுரம் ஆற்றல்மிகு மாவட்ட கழக செயலாளர். எம்.ஏ.முனியசாமி அவர்களின்முன்னிலையில்.இராமநாதபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஓ.பி.எஸ்.அணி நிர்வாகிகள் மற்றும் மாற்றுக் கட்சியினர். 200க்கும்மேற்பட்டோர்அக்கட்சிகளிலிருந்து விலகி இராமநாதபுரம் ஒன்றிய கழக நிர்வாகி` அட்வகேட் M.முத்து முருகன் ஏற்பாட்டில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர். R.G.ரெத்தினம், கழக மாணவரணி துணை செயலாளர். K.செந்தில்குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்.R.G.மருது பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர். ராஜாராம், பாண்டியன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர்.பழனி முருகன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய ஜி. ராஜ்குமார் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்.எம். காயம்பு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஒன்றிய நிர்வா...