பண்ருட்டி மனவளக்கலை மன்றம் சார்பில் நடைபெற்ற குரு பூர்ணிமா தின விழா !!

கடலூர் மாவட்டம்,ஆடி மாதத்தில் வரும் முதல் பெளர்ணமி தினம்தான் ‘குரு பூர்ணிமா’. இந்த குரு பூர்ணிமா தினத்தில் குரு பூஜை செய்வது வழக்கம். குரு பூர்ணிமாவை வியாச பூர்ணிமா எனவும் அழைக்கப்பட்டு வருகின்றது. இது பல காலங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. குரு பூர்ணிமா தினத்தில் கல்வியை போதித்த ஆசிரியரை வணங்கும் ஒரு நாள். 

இந்த தினத்தில் வேதம் படித்த மாணவர்கள் தங்களுடைய குருவை நினைத்து வணங்கும் ஒரு நாளாக இதை அனுஷ்டிக்கலாம். நம் பாரம்பரியத்தை நினைவில் வைத்துள்ள சில பள்ளிகள் இன்றளவும் குருவுக்கு பாத பூஜை செய்து குரு பூர்ணிமாவை பின்பற்றி வருகின்றது.

 கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் குரு பூர்ணிமா விழா நடைபெற்றது.   மன்ற தலைவர் விஜயரங்கன் தலைமை தாங்கினார். மன்ற பொருளாளர் அபிராமி விஜயரங்கன் வரவேற்றார்.

 சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ சாய் அருண் டிவிஎஸ் இயக்குநர் ராமமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 நிகழ்ச்சியில் தவம், துணை பேராசிரியர்களின் சிந்தனை, பேராசிரியர்கள் கெளரவித்தல் நடைபெற்றது.

 அதனை தொடர்ந்து இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது. மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் பேராசிரியர் ராணி ஜெய மேரி,  பன்னீர், ஏழுமலை,  மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிலவன் நியூஸ் தினசரி நாளிதழ் ஆசிரியர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!