கமுதி அருகே வில்லானேந்தன் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ உடைகுளத்து காளியம்மன் ஸ்ரீ சப்த கன்னிமார்கள் ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆலய ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேக விழா!!

ராமநாதபுரம் மாவட்டம்,நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஆடி 22 ஆம் தேதி 7 8 2026 வெள்ளிக்கிழமை நவமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 9–15 மணிக்கு மேல் 10–15 மணிக்குள் அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது 

    ஆடி மாதம் 15 ஆம் தேதி 31–7–2026 வெள்ளிக்கிழமை காலை 9–15 மணிக்கு மேல் 10–15 மணிக்குள் அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனையும் முகூர்த்த கால் நடுதலும் காப்பு கட்டுதலும் நடைபெறும் 

இதனைத் தொடர்ந்து 7–8 2026 வெள்ளிக்கிழமை காலை விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி, எடுத்து ஸ்ரீ உடைகுளத்து  காளியம்மன் ஆலயம் வரை எடுத்துச் சென்று விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெறும் இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் மாபெரும் பொது அன்னதானம் நடைபெறுகிறது.

அன்று இரவு சாத்தநாயக்கன்பட்டி பாலையா குழுவினர் குழுவினர் நடத்தும் கிராமிய நிகழ்ச்சி நடைபெறுகிறது 8–8 2026 சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் பொங்கல் வைத்து கிடா வெட்டி அன்று மதியம் ஒரு மணி அளவில் மாபெரும் அசைவ பொது அன்னதானம் நடைபெற உள்ளது.

ஆடி மாதம் அருள் பொழியும் அம்மன் திருநாளில், ஸ்ரீ உடைகுளத்து காளியம்மன் கருணைக் கண்கள் அனைவரையும் காக்கட்டும்

ஸ்ரீ சப்த கன்னிமாரின் சக்தியும், ஸ்ரீ கருப்பண்ணசாமியின் காவலும் என்றும் நிலைத்திருக்கட்டும்.

பால்குடம், அபிஷேகம், அன்னதானம் என பக்தி வெள்ளம் பெருகட்டும்.

வில்லானேந்தல் மண்ணில் வளமும், மக்களின் வாழ்வில் நலமும் மலரட்டும்.

அம்மன் அருளால் அனைவரின் இல்லங்களிலும் இன்பமும், ஐஸ்வர்யமும் என்றும் நிறைந்திருக்கட்டும்.

இந்நன்னாளில் நடைபெறும் திருவிழா மற்றும் சிறப்பு வழிபாடுகளில் தங்களும் தங்கள் குடும்பத்தினருடன் தவறாமல் கலந்து கொண்டு, அம்மனின் அருளாசியைப் பெற்று எல்லா நலன்களும் வளங்களும் பெற அன்புடன் அழைக்கிறோம்.

 வில்லானேந்தல் கிராம பொதுமக்கள் மற்றும் ஸ்ரீ அழகு வள்ளி அம்மன் நற்பணி மன்றம்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!