அறந்தாங்கி அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு !!

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பெற்றது.

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டமும், புதுக்கோட்டை மாவட்ட நிருவாகமும் இணைந்து, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியருக்காக அண்மையில், வல்லத்திராக்கோட்டை பொறியியல் கல்லூரியில் ஒரு வார கால பேரிடர் மேலாண்மை பயிற்சியை வழங்கின.

இப்பயிற்சியில் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 26 பேர் பங்கேற்று, பயிற்சியை நிறைவு செய்து வந்தனர்.அவர்களுக்கு  கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை, பாராட்டுகளைத் தெரிவித்தார்.துறைத்தலைவர்கள் முனைவர் து.சண்முகசுந்தரம், முனைவர் கா.காளிதாஸ், அ.கணேசன், முனைவர் பா.கிளாடிஸ், முனைவர் ரா.பிரகதாம்பாள் உள்ளிட்ட பேராசிரியர்கள், முனைவர் ச.ரமேஷ், மு.பழனித்துரை ஆகிய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், அலுவலகப்பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!