இடுகைகள்

கோவையில் நடைபெற்ற இந்திய பாரா கிரிக்கெட் லீக் 3.0 நிறைவு, வெற்றிக்கோப்பையை தட்டி சென்ற தமிழ்நாடு அணி! கோப்பைகளுடன் பரிசுகளும் வழங்கபட்டது. விருவிருப்புக்கு பஞ்சமில்லாத ஒரு கிரிக்கெட் போட்டியாக அமைந்தது என ரசிகர்கள் உற்சாகம்!!!

படம்
கோவை மாவட்டம், மாற்று திறனாளிகளின் வாழ்க்கையை மாற்றும் வகையில், இந்திய பாரா கிரிக்கெட் லீக் எனும் போட்டிகள் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ரோட்ராக்ட் க்ளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி மற்றும் தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்கம் சார்பில் கடந்த செப்டம்பர்  4ம் தேதி  முதல் 6ம் தேதி வரை  நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பாரா கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர். நான்கு அணிகளாக  களமிறங்கிய இப்போட்டியில்,  தமிழ்நாடு டவுன் டவுன் டைகர்ஸ், கொல்கத்தா தன்டர் வாரியர்ஸ், டெல்லி யுனிகார்ன்ஸ், மற்றும் வியான் வீணை ஸ்கூல் ரேஜிங் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பங்கேற்றது. இதன் இறுதி போட்டிகள் இன்று நடைபெற்றது இந்த போட்டியில் தமிழ்நாடு டவுன் டவுன் டைகர்ஸ், கொல்கத்தா தண்டர் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இப்போட்டிக்கான கோப்பையை தட்டி சென்றது. தமிழ்நாடு டவுன் டவுன் டைகர்ஸ் அணி, இந்தியன் பாரா கிரிக்கெட் லீக்ன் மூன்றாவது பதிப்பான ஐபிசிஎல்  3.0-ல் சாம்பியன் பட்டத்தையும்  வென்றது. மேலும் இற...

கோவை சரவணா நகர் பகுதியில் உள்ள, பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் சார்பாக, நடைபெற்ற முதலாம் ஆண்டு ஸ்தோத்திர கூட்ட நிகழ்ச்சி, கோவை சாய்பாபாகாலனி பகுதியில் சீறும் சிறப்புமாக நடைபெற்றது!!

படம்
கோவை சரவணா நகர் பகுதியில் பெத்தேலஹேம் ஜாய் ஜெபவீடு எனும் தேவாலயம் அமைந்துள்ளது இந்த தேவாலயத்தின் முதலாம் ஆண்டு ஸ்தோத்திர கூட்ட நிகழ்ச்சி  கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. பெத்தேல் ஜாய் ஜெபவீட்டின் தலைமை போதகர் ஜான் பீட்டர், உதவி போதகர் ஜெயக்குமார், தலைமை மூப்பர் சுத்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிறிஸ்தவ துதி பாடல்கள் பாடியும், ஆராதனை கீதங்கள் பாடியும், குழந்தைகளின் நடனநிகழ்ச்சியும் நடைபெற்றது.  மேலும் பைபிளில் எழுத பட்ட வசனங்களை எடுத்து கூறியும், விழா சீறும் சிறப்புமாக நடைபெற்றது.  முதலாம் ஆண்டு ஸ்தோத்திர கூட்ட நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.  தொடர்ந்து அனைவருக்கும் இரவு உணவுடன் விழா நிறைவு பெற்றது இந்த நிகழ்ச்சியில், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவன தலைவரும், சமூக ஆர்வலருமான நோட்டரி வழக்கறிஞர் புஸ்பாணந்தம், ஜெபா, வர்ஷா, வர்ஷினி, அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்ற ஓட்டுநர் கிருஷ்ணகுமார்,  பாஸ்டரம்மா ஜாய்ஸ், செளந்தரராஜன், ரிஸ்...

மண்டாடி படம் வெளியான பிறகு வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று படகு பந்தயத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவதாக நடிகர் சூரி கோவையில் தெரிவித்துள்ளார்!!

படம்
கோவை மாவட்டம்,கோவை நவகரை பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக மண்டாடி படக்குழுவினர் வருகை புரிந்தனர்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர். சூரி  மண்டாடி படம் வெளியான பிறகு நமது தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று இந்த மீனவர்களின் வீர விளையாட்டான படகு சவாரி விளையாட்டிற்கும் அரசு உரிய அங்கீகாரம் அளிக்கும் என நம்புவதாகவும் முதல் முறையாக தனது படம் ஐ மேக்சில் வெளியாவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்த அவர் , மண்டாடி  படம்  தான் நடித்த விடுதலை படத்தைப் போலவே மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார். மன்றாடி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் அமைவது தொடர்பாக படப்பிடிப்பின் போதே தான் கேள்வி எழுப்பியதாகவும் அப்போது கதைக்கு தேவை என்பதால் அது போன்ற காட்சிகள் இடம் பெற்றாலும் அதற்கு படத்தில் ஒரு மெசேஜ் கொடுத்துள்ளதாகவும் விளக்கமளித்தார் . நம் மண் சார்ந்த படத்தில் நடித்த தொட்டி தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தவர் பின்னர் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர் மேலும் அவர்களை ...

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!!

படம்
வேலூர் மாவட்டம்,வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (07.09.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. அவர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் ஞானகுரு, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ராம்குமார் (வேலூர்), செந்தில்குமார் (குடியாத்தம்) உட்பட பலர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட செய்தியாளர் மு பாக்யராஜ்.

நத்தம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழா!!

படம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா  கொண்டாடப்பட்டது நிர்வாகவியல் துறைத் தலைவர்  இராம நாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் யாழ் சந்திரா அவர்கள் தலைமை தாங்கி விழா உரையாற்றினார். அப்போது டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இதில்  ஆங்கிலத்துரை தலைவர்  திருமகள் மற்ற துறை சார்ந்த பேராசிரியர்களும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முத்தையா நன்றி கூறினார்.  முன்னதாக இந்நிகழ்ச்சியில் வணிக நிர்வாகவியல் துறை சார்ந்த மாணவர்கள் கல்லூரி சந்தை நடத்தினர். படவிளக்கம்: நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் கல்லூரி சந்தை அமைத்த மாணவர்களிடம்  முதல்வர் யாழ் - சந்திரா பொருட்கள் வாங்கினார். திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

வீரம் தவறல்ல... கோழைத்தனம் தான் தவறு! -எம்.எம்.அப்துல்லா!!

படம்
“மிசாவைப் பற்றி பேசும் போது விஜய் மிசாவில் திமுகவினர் அடி வாங்கியதை கிண்டல் செய்யும் விதமாக மோசமான ஒரு செய்கையைச் செய்து காட்டுகிறார். ஜனநாயகம் காக்க சிறை சென்று அடிபடும் வீரம் தவறல்ல... ஆனால், ஜெயலலிதாவிடம் அடி வாங்கி விடக்கூடாது என கொடநாடு எஸ்டேட் கேட் முன்பு பிச்சைக்காரன் போல கைக்கட்டி விடிய விடிய நின்ற கோழைத்தனம் தான் தவறு!” - தி.மு.க அயலக அணிச் செயலாளர். எம்.எம்.அப்துல்லா விமர்சனம்!  தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

ஒரு போராளியின் வீரத்தழும்பு அது! -டி.ஆர்.பி.ராஜா !!

படம்
“கழகத் தலைவர். மு.க.ஸ்டாலின் அவர்கள் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல. அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், மிசா சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது. சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப் பின்னால் இருப்பது, ஜனநாயகத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட வலி, எதற்கும் அஞ்சாத ஒரு போராளியின் மகத்தான அரசியல் வரலாறு.” - திமுக முன்னாள் அமைச்சர். டி.ஆர்.பி.ராஜா பதிவு! தலைமை செய்தியாளர் சின்னதம்பி.