இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதுரை கல்லூரி பள்ளியில் வல்லபாய் படேல் பிறந்த நாள் விழா!

படம்
இந்தியாவின் இரும்பு மனிதர் பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் 150ஆவது பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் நிலையில் பழம்பெரும் பள்ளியான மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளியில் பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று  சிறப்பாக கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தலைமையாசிரியர். பாலாஜிராம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் இல.அமுதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். உதவி தலைமையாசிரியர். மகேஸ்வரன் அவர்கள் நன்றி கூறினார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

ஆற்காடு அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம் !!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சேட்டு இவரின் மகன் பிரகாஷ் (வயது 23) என்பவர் இன்று காலை திமிரியில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 59) மற்றும் பிரவீன் (வயது 13) ஆகியோரும் பயணித்தனர். மகாலட்சுமி கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த டாடா ஏசி வாகனம் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த கோவிந்தம்மாள் மற்றும் பிரவீன் இருவரும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திமிரிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

நெமிலியில் நான்கு ஆண்டுகளுக்கு முன் திமுக வெற்றி விழா கொண்டாடிய நாள்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் முதல்முறையாக நெமிலி ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக. இதுவரை அதிமுக, பாமக மட்டுமே வெற்றி பெற்றுவந்த நிலையில், திமுகவை சேர்ந்த பெ. வடிவேலு அவர்கள் தற்போது வென்றுள்ளார். அவர்களது பணி மென்மேலும் சிறக்க நிலவன் TV சார்பில் வாழ்த்துக்கள்.                                                   அன்புடன்,                                                  மு.பிரகாசம்,                                          நிலவன் TV குழுமம்.

நெய்வேலி ஆர்ச் கேட் அருகேஎன்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!!

படம்
கடலூர். மாவட்டம்,நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்தில் சுமார்ஆயிரத்திற்கும் மேற்பட்டஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சொசைட்டி தொழிலாளர்கள் நிறுவனத்தின்பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள்தங்களுக்கு 20 சதவீதம் போனஸ்வழங்க வேண்டும், பணிநிரந்தரம்செய்யப்படவேண்டும்.மேலும் பணி நிரந்தரம் செய்யும்வரை மாத ஊதியம் 70 ஆயிரம்வழங்க வேண்டும். எனகோரிக்கைவைத்துபல்வேறுபோராட்டங்களை நடத்திவருகின்றனர்.8 இதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றம் என்.எல்.சி. ஒப்பந்ததொழிலாளர்கள் மற்றும்சொசைட்டிதொழிலாளர்களின்கோரிக்கைகள் தொடர்பாகஉயர் மட்ட குழு அமைத்து தீர்வுகாண உத்தரவிட்டி ருந்தது.ஆனால் கடந்த 24-ந் தேதிமற்றும் இன்றுநடத்தஅறிவிப்புகொடுக்கப்பட்டிருந்த நிலையில்மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.இதை கண்டித்தும் உயர்மட்டகுழுவின் உறுதியான தேதியைஅறிவிப்பதோடு, அதை  நெய்வேலியிலேயே நடத்தப்பட வேண்டும்என்றதலையாயகோரிக்கையைமுன்வைத்துநேற்றுகாலைநெய்வேலிஎன்.எல்.சி.ஆர்ச்கேட்அருகேஉண்ணாவிரதப்போராட்டத்தைதொடங்கினர்.இப்போராட்டத்தைதே.மு.தி.க.மாவட்டதொழிற்சங்கதலைவர்.தெய்வீகதாசன்தொடங்கிவைத்தார்.மாலைமுடிவடையும்உண்ணாவிரதப்போராட்டத்தில் சிறப்புத...

கடலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, மாவட்ட ஆட்சித்தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS தகவல் !!

படம்
கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 01.10.2025 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து,  வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத்  திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள்  பெறப்படுகின்றன. பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 30.09.2025 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.  மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பிஎஸ்சி,நர்சிங் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள்  முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.   இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல்...

பேர்ணாம்பட்டு: பத்தலபல்லி சோதனை சாவடியில் கர்நாடக மது பாக்கெட்டுகள் மற்றும் ஹான்ஸ் மூட்டைகள் பறிமுதல் !!

படம்
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பத்தலபல்லி சோதனை சாவடியில் கர்நாடக மது பாக்கெட்டுகள் மற்றும் ஹான்ஸ் மூட்டைகள் கடத்தி வந்த காரை துருத்தி பிடித்த போலிசார் பேரணாம்பட்டு பத்தலபல்லி சோதனை சாவடியில் கர்நாடக மது பாக்கெட்டுகள், ஹான்ஸ் மூட்டைகள் கடத்தி வந்த காரை துருத்தி பிடித்த போலிசார், வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி சோதனை சாவடி தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி அமைந்துள்ளது‌.இவ் வழியாக கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கர்நாடக மது பாக்கெட்டுகள் காரில் கடத்துவதாக பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபுவுக்கு இன்று இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பெயரில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகன தனிக்கையில் ஈடுபட்டனர்.அப்பொழுது கர்நாடகா பதிவின் கொண்ட காரை  நிற்க வைத்து சோதனை செய்தபோது அதில் 10 மூட்டை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகியிலை பொருட்களான ஹான்ஸ் கூலிப் பான் மசாலா போன்றவை இருப்பது தெரியவந்துள்ளது.அதனை பறிமுதல் செய்து போலிசார் காரை ஓட்டி வந்தவரை விசாரித்த போது மொஹபூப் உசேன் (வயது 36) கர்நாடக...

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் 118 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 63ஆம் ஆண்டு குருபூஜை விழா!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தேவர் பேரவை சார்பில் மாவட்ட தலைவர். P. பெருமாள்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர் களின் 118வது  ஜெயந்தி விழா மற்றும் 63ஆம் ஆண்டு குருபூஜை  விழா நடை பெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்,  மண்டல பொறுப்பா ளர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கழக செய லாளர்.  ExMLA NG பார்த்திபன் BABL மற்றும் அதிமுக நகரச் செயலாளர். மோகன் பிஜேபி பிரமுகர். சதீஷ்குமார் ரத்ததான வள்ளல் குமரன் ரவிசங்கர் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் தன்னார் வலர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு அலங்கரித்த தேவர் ஐயாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார் . வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.

4 வருட சுரங்க பாதை பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் கைனூர் தலைவர் கோரிக்கை மனு!!

படம்
4 வருடமாக ஆமை வேகத்தில் நடந்து வரும் சுரங்க பாதை பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என கேட்டு கைனூர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி கோரிக்கை மனு கொடுத்தார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே பணிகள் விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கைனூர் ஊராட்சி மன்ற தலைவர். உமா மகேஸ்வரி பொதுமக்கள் சார்பில் மனு ஒன்றை அதிகாரிகளும் கொடுத்தார். அவரது அந்த மனுவில் கேட்டுக்கொண்டதாவது ஐயா வணக்கம் அரக்கோணம் வட்டத்தில் கைனூர் கிராமம் உள்ளது. இந்த மக்களுக்கு முக்கிய பாதையாக எல்சி 32 ரயில்வே சுரங்க பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை மக்களுக்காக  நான்கு வருடங்களுக்கு முன் பணிகள் துவங்கியது ஆனால் இது நாள் வரை பாலத்தின் பணிகள் முழுமை அடையாமல் இருந்து வருவதால் பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி வருகிறார்கள் ஆகவே சுரங்கப் பாதை பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு மனுவில் உமா மகேஸ்வரி கேட்டுக்கொண்டார். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

மேல்விசாரம் நகராட்சி 4-வது வார்டு மக்களின் அதிருப்தி: மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விசாரம் நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பொதுமக்கள், தங்களது வார்டில் நிலவும் அடிப்படை வசதிப் பற்றாக்குறை மற்றும் நிர்வாக அலட்சியம் குறித்துக் கூறி, நேற்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனு அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அப்பகுதி மக்கள், தங்கள் துயரங்களையும், நகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பற்ற போக்கையும் வெளிப்படுத்தினர். சமீபத்தில் காலமான முன்னாள் நகரமன்றத் தலைவரும், 4-வது வார்டின் கவுன்சிலருமான  அமீன் அவர்களின் மறைவுக்குப் பிறகு, தங்கள் வார்டு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். தற்போது நகராட்சித் தலைவராக இருக்கும் குல்சாத் அஹமத் அவர்களிடம் வார்டின் குறைகள் குறித்துப் பேசச் சென்றபோது, அவர் "4-வது வார்டு பற்றி எனக்குத் தெரியாது" என்று கூறியது தங்கள் மனதை மிகவும் புண்படுத்தியதாக மக்கள் குற்றஞ்சாட்டினர். 4-வது வார்டு மக்கள் சந்திக்கும் பிரதானப் பிரச்சினைகள் பின்வருமாறு:சாலை மற்றும் வடிகால்: சிமெண்ட் சாலை அமைக்கப்படவில்லை. முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை.மின்சாரம் மற்றும் குடிநீர்: தெருவிளக்குக...

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா!!

படம்
மதுரை மாவட்டம்,மதுரையில் தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியை  முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு திரு உருவ சிலைகள் பல கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி முன்னிட்டு பெண்கள் பால்குடம் மற்றும் முலப்பாரியை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் ஆக எடுத்து வந்தனர் . இந்த ஊர்வலத்தில் சிறுவர்கள் ஆடி ,பாடி நடனமாடிக் கொண்டு வந்தார்கள்  சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்ற  நாட்டுப்புற நடனமும் ஆடி வந்தார்கள். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி.

அரக்கோணம் ரயில்வே ஆலோசனைக் கூட்டம்! 3ம் கண் பயன்படுத்தி கொள்ள நகராட்சிக்கு அனுமதி!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் ரயில்வே இரட்டை கண் பாலத்தில் விரிவாக்க பணி துவங்க இருப்பதால் ரயில் நிர்வாகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அப்போது 3ம் கண் பயன்படுத்தி கொள்ள நகராட்சிக்கு அனுமதி அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனி பேட்டை பகுதியில் இரட்டைக்கண் பாலம் அமைந்துள்ளது இந்தப் பாலத்தில் விரிவாக்க பணிக்காக நவம்பர் 2ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை போக்குவரத்து நிறுத்த ரயில்வே முடிவு அறிவித்தது எனவே  இதற்கான ஆலோசனை கூட்டம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது அப்பொழுது அதிகாரிகள் மக்கள் கருத்தை கேட்டறிந்தனர் அப்போது பலர் பல கோரிக்கை முன்வைத்தனர் சட்டமன்ற உறுப்பினர் பேசிய போது பாலத்தின் பணி துவங்குவதற்கு முன் பாலம் அகலப்படுத்துவோம் அல்லது மேம்பாலம் அமைக்கவும் உறுதி அளிக்க வேண்டும் இல்லையென்றால் தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார் கவுன்சிலர் துரைசீனிவாசன் பேசியபோது 3ம் கண் பாலத்தை நகராட்சி பயன்படுத்தி கொள்ள அனுமதி கோரினார் அதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ரயில் பயணிகள் சங்க தலைவர். நைனா மாசிலாமணி பேசிய போது   வேக ரயில்கள் அனைத்தையும்...

ஊரக வளர்ச்சித்துறை சார்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

படம்
தேனி மாவட்டம், தேனி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர்.  பெ . பாலமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர். எஸ். பி. சுருளி மாவட்ட பொருளாளர். பி.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து சங்கங்களின் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

புதிய வினாத்தாள் வடிவமைப்பு பற்றிய போதிய தெளிவில்லாததால் டி.ஆர்.பி., தேர்வு எழுதியவர்கள் வேதனை!!

படம்
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர். பி.,) நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வில், பிரதான பாடங்களில் அதிக மதிப் பெண்கள் பெற்ற தேர்வர்கள், தமிழ் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வேதனையில் உள்ளனர். இதனால் அவர்கள் தமிழ் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வலியுறுத்தினர். மாநிலம் முழுவதும் அக்.12ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வை  டி.ஆர்.பி.,  நடத்தியது. 1500பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் எழுதினர். முதன் முறையாக தமிழ்த் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்த் தேர்வில் 20 மதிப்பெண் பெற்றால் தான் முதன்மை பாடப்பிரிவு விடைத்தாள் மதிப்பிடப்படும் என்றே அறிவிக்கப்பட்டது. இந்நி லையில் வினாக்கள் மிகக் கடினமாக இருந்தன என தேர்வர்கள் தெரிவித்து இருந்தனர். 'தற்போது ஓரிரு வாரங்களுக்கு முன்பு கீ ஆன்சர்'  வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதன்மை பாடத் தில் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் பலர், தமிழ்த் தேர்வில் 20 மதிப் பெண்களுக்கும் குறைவாக பெற்றுள்ளனர். இதனால் பல ஆண்டுகளாக தயாராகி முதன்மை பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றும் ஆசிரியர் பணி  கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்த் ...

,கடலூர் அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 20 பேருக்கு வாந்தி மயக்கம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!

படம்
கடலூர் மாவட்டம்,கடலூர் அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதி மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு உடல் உபதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.  நேற்று அதே பகுதியைச் வனிதா. பாலசுந்தரம். நந்தன் உள்ளிட்டோருக்கு திடீர் வாந்தி மயக்கம் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டதாக தெரிகிறது   இது குறித்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். கடலூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனால் கடலூர் அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

அரக்கோணத்தில் நடைபெற்ற 25 வது வார்டு மக்களுக்கான சபை கூட்டம்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சி 36 வார்டுகளில் சிறப்பு சபை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பழணிப்பேட்டை 25 வது வார்டு மக்களுக்கான சபா கூட்டம் போல் நாயுடு தெருவில் ராமர் கோவில் அருகில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வார்டு உறுப்பினர். துரை சீனிவாசன் தலைமை தாங்கினார்; ஆணையாளர். ஆனந்தன் நகராட்சி மேற்பார்வையாளர். பிரேம் சுந்தர் கலந்து கொண்டு மக்கள் பிரச்சனைகளுக்கு மனுக்களை பெற்றுக் கொண்டனர். அவற்றில் கால்வாய் மற்றும் தெரு விளக்கு பிரச்சனைகளுக்கு முன் உரிமை அளிப்பதாக உறுதி அளித்தனர். கூட்டத்தில்  திமுக நகர மன்ற உறுப்பினர்கள். நந்தாதேவி பழனி, ரேவதி கன்னியப்பன் மற்றும் சி. என். அன்பு வட்ட செயலாளர். பழனி ஆகியோரும் கலந்து கொண்டனர். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கடலூரில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்!!

படம்
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026... கடலூர் மாவட்ட அளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்  கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர்  முதன் முதலாக இன்று தான் பங்கேற்கிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர். பா.தாமரைச்செல்வன் மாவட்ட செயலாளர்கள். மாநகர் மாவட்ட செயலாளர். மு. செந்தில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர். அரங்கத் தமிழ்ஒளி  மேற்கு மாவட்ட செயலாளர். திராவிடமணி  மேலும் இந்த கூட்டத்தில்  திமுக, அண்ணா திமுக, காங்கிரஸ்,  சிபி. எம், சி. பி. ஐ உள்ளிட்ட அனைத்து கட்சிகள் பங்கேற்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

பண்ருட்டியில் நடைபெற்ற சிறப்பு சபை கூட்டம் நகர்மன்ற தலைவர்.க. ராஜேந்திரன் பங்கேற்பு!!

படம்
கடலூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திடும் வகையில் நகர மன்ற உறுப்பினர்களைக் கொண்டு வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்களை நடத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று 29.10.2025 பண்ருட்டி தட்டாஞ்சாவடி  GK. மஹால் திருமண மண்டபத்தில் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 26 வது வார்டு சிறப்பு சபை கூட்டம்  பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நகராட்சி ஆணையாளர். காஞ்சனா அவர்கள் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர். அசோகன் அவர்களை கூட்டுநராக கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.  இதில் பொது மக்களிடம் மனுக்களை பெற்று பல்வேறு கருத்துக்கள் வழங்கி வார்டு உள்ள அனைத்து பிரச்சனைகளும் நிறைவேற்றப்படும் என கூறினார். இக்கூட்டத்தில் வார்டு அவை தலைவர். மோகன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். லோகநாதன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். ஏழுமலை வார்டு செயலாளர்கள். முருகன், செல்வகுமார் நகர ...

சாலையில் மயங்கி கீழே விழுந்தவருக்கு முதலுதவி செய்த ஜெயக்குமார் IPS!!

படம்
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூரில் இருந்து குள்ளஞ்சாவடி சென்று கொண்டிருந்தபோது சுப்ரமணியபுரம் அருகே சாலையில் மயங்கி விழுந்து கிடந்தவரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி முதலுதவி மேற்கொண்டு, அதிவிரைவு படை வீரர்கள் காவல் வாகனம் மூலம் சிகிச்சைக்காக குள்ளஞ்சாவடி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன். இலக்க

ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி நிறைவு நாள் விழா!!

படம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி சுப்புலாபுரத்தில் கந்த சஷ்டி திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது இங்கு கந்த சஷ்டி விழா மற்ற ஊர்களை காட்டிலும் மிகவும் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது கந்த சஷ்டி விழாவிற்கு காப்பு கட்டிய பக்தர்கள் கோயிலில் முதல் நாள் ஒருமிளகு இரண்டாம் நாள் இரண்டு மிளகு என்று ஆறு நாட்களும் அந்த மிளகை மட்டுமே சாப்பிட்டு விரதம் கடைப்பிடிப்பார்கள். ஆறாம் நாள் பருப்பு நீர் நெய்வேத்தியம் செய்து முருகனுக்கு படைத்து பின்பு பக்தர்கள் அந்த பருப்பு நீரை அருந்தி அதன் பிறகு பழங்கள் மட்டும் சாப்பிடும் வழக்கம் உள்ளது. ஏழாம் நாள் திருக்கல்யாணம் முடிந்த பிறகு இரவு ஒரு மணி அளவில் பூஜைகள் நடத்தப்பட்டு  பிரசாதத்தை பெற்றுக் கொண்டு பிரசாதத்தை உண்டு விரதத்தை முடித்து பக்தர்கள் முருகனின் அருளை பெற்று செல்வர். இங்கு ஏழு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஐந்தாம் காப்பு மூன்றாம் காப்பு மற்றும் கந்த சஷ்டி ஏழாம் நாள் முழுவதும் ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து முருகனை வழிபட்டு அருள் பெறுவர் மற்ற எல்லா ஊர்களிலும் பால் பலம் அருந்திவிட்டு விரதம் இருக்கும் பழக்கம் உண்டு ஆனால் இங்கு டி சுப்ப...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணம்!!

படம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்கனூர் லயன்ஸ் கிளப் மண்டலத் தலைவர்.கே. டி.ஆர்.கலிய பெருமாள் அவர்கள் ஏற்பாட்டில் கே.ஆர்.பாளையம், வழிகாட்டி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து,தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியபோது. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

வடலூர் நகராட்சியில் வார்டு சிறப்பு கூட்டம்!!

படம்
கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு முருகன் கோயில் அருகில் உள்ள ஜோதி நகரில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வார்டு சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், வடலூர் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சேவைகளை மேம்படுத்துவது குறித்து குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தின் மூலம் மக்களின் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

நடுவீரப்பட்டு: கைலாசநாதர் கோவிலில் வேல் அபிஷேகம்!!

படம்
கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் மற்றும் வேல் அபிஷேகம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து, விழாவில் பங்கேற்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

காட்டுமன்னார்கோவில்: ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு!!

படம்
கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார்கோவில் அருகே வடக்கு கொளக்குடி கிராமத்தில் தனியார் அறக்கட்டளை மூலம் 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இலவச ஆம்புலன்ஸ் நேற்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. அறக்கட்டளை நிறுவனர். முகமது ஜாக்கீர், ஆம்புலன்ஸின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் கல்வீசி சேதப்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

விழுப்புரம்: வீரபாண்டி கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு முருகப்பெருமான் உடனரை வள்ளி தெய்வானை அம்மனுக்கு நடைபெற்ற கந்த சஷ்டி தின விழா!!

படம்
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்த வீரப்பாண்டி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு அதுல்ய நாதேஸ்வரர் உடனுறை சௌந்தர்ய கனகாம்பிகை ஆலயத்தில்,  அருள்மிகு முருகப்பெருமான் உடனுறை வள்ளி, தெய்வானை அம்மனுக்கு நடைபெற்ற கந்தசஷ்டி தின பெருவிழா   திருக்கல்யாண வைபவ உற்சவ தரிசனம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

சோளிங்கா் பேருந்து நிலையத்தில் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி நரிகுறவப்பெண்ணிடம் ஆறுமாத ஆண் குழந்தையை கொடுத்து விட்டு மாயமான இளம் பெண்ணால் பரபரப்பு !!..

படம்
' குழந்தையை  மீட்டு காவல்துறையினா் குழந்தை மீட்பு பாதுகாப்பு உதவியினரிடம் ஒப்படைப்பு '. இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில்  இரவு ஆறுமாதமே ஆன  ஆண் குழந்தையுடன் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவா். பேருந்து நிலைய சாலை ஓர கடை நடத்திவரும் வயதான பெண்மனியிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் கழிவறைக்கு சென்று வருவதாக எனக் கூறி சென்றுள்ளார். அந்தப் பெண் சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. இதனால் செய்வதறியாது  மூதாட்டி சோளிங்கர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்  தகவலின் பேரில் அங்கு வந்த காவல் நிலைய  ஆய்வாளர். ராமச்சந்திரன் மற்றும் காவலா்கள் மூதாட்டியிடம்  இருந்த குழந்தையை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து சைல்டு ஹெல்ப்லைன் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . அங்கு மருத்துவா்கள் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்து வருகின்றனர். இதனிடையே குழந்தையை விட்டுசென...

300 வீடுகள் பாதுகாக்க மங்கம்மா பேட்டை மதகு திறந்து சு.ரவி MLA நடவடிக்கை!!

படம்
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வடமாம்பாக்கம், பாப்பாங்குளம் மற்றும் அரக்கோணம் இரண்டாவது வார்டு உட்பட்ட மாதவ நகர் பொம்மி சாமி நகர் ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை நீர்த்தேக்கத்தால் வீடுகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் மங்கம்மா பேட்டை ஏரிவழியாக செல்லக்கூடிய ஏரி நீர் தடுக்கப்பட்டதால் மக்கள் இன்னலுக்கு தள்ளபட்டனர்.    இது குறித்து தகவல் அறிந்த சட்டமன்ற உறுப்பினர். சு.ரவி MLA அவர்கள் மங்கம்மாபேட்டை ஏரி மதகை பொதுப்பணி துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து மதகு  திறக்க நடவடிக்கை எடுத்தார். இதன் மூலம் ஏரி நீர் வழிந்தது சுற்றுவட்ட மக்கள் நீர் தேக்கத்தில் இருந்து விடுபட்டனர். அப்பொழுது ஏரி பாசன முன்னாள் தலைவர். தாமோதரன் இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர். பாபு வடமம்பாக்கம் துணைத் தலைவர். பிரசாந்த் மற்றும் ஏரி பாசன உறுப்பினர். சத்தியநாராயணன் உடன் இருந்தனர். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

அரக்கோணம் தர்மராஜா கோவில் அருகில் நடைபெற்ற ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருகல்யாணம்!!

படம்
இராணிப் பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்புகழ் திருஅருட்பா சபை சார்பில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பி ரமணிய சுவாமிக்கு  மஹா கந்தசஷ்டி பெருவிழா நடை பெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருகல்யாண வைபவம் நேற்று தொடங்கியது இதனையொட்டி காலை சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் தொடர்ந்து பகல் 12 மணி அளவில் ஸ்ரீ வள்ளிதெய் வானை சமேத ஸ்ரீ சுப்பிரம ணிய சுவாமி திருக்கல்யாணமும் நடந்தது. அப்போது மாப்பிள்ளை வீட்டு சார்பில் தேவராஜ் பள்ளி தம்பதியர்களும்   இரு பெண் வீட்டார் சார்பில் பாரதி ஹரிஹரன் தம்பதியர்களும் மற்றொருபெண் வீட்டார் சார்பில் வக்கில். யோகானந்தம் சபிதா தம்பதியர்களும்கலந்துகொண்டனர்.மேலும் சிறப்பு விருந்தினர்களாக ராமமூர்த்தி ஆச்சாரி, கற்பகம், சரவணன் உஷாராணி தம்பதியர்களும் ஹரி பிரசாத், சிட்டிபாபு சர்மா, சண்முகம், பார்த்தசாரதி  உள்ளிட்டவர்களும் திரளாக பக்தர்களும் திருக்கல்யாண வைபத்தில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கிருஷ்ணா மளிகை ஸ்டோர் குடும்பத்தார் சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கபட்...

சாலையில் கிடந்த மணி பர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர்களுக்கு பாராட்டு!!

படம்
கடலூர் மாவட்டம்,வடலூர்  கரைமேடு வருவாய் கிராமத்தில்  சாலையில் கிடந்த மணிபர்சில் ரூபாய் 12840 பணம் இருந்ததை எடுத்த உதயநிதி,  வசந்தகுமார்  சீனிவாசபுரம் பின்னலூர் ஆகியோர்கள்  வடலூர் காவல் ஆய்வாளர்.  உதயகுமார்  ஒப்படைத்தனர். உதவி ஆய்வாளர். பரந்தாமன்  விசாரணை மேற்கொண்டு மணிபர்சை தொலைத்த நபர் அஜித்குமார், த/பெ குணசேகரன், ஜெயப்பிரியா நகர் விருதாச்சலம் என்பவரை கண்டுபிடித்து, காவல் நிலையம் வரவைத்து ஒப்படைத்தனர். நேர்மையாக செயல்பட்ட உதயநிதி, வசந்தகுமார் ஆகியோர்களை வடலூர் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர்  பாராட்டினார்கள். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

தேமுதிக நெமிலி துணை செயலாளர். பாலகுருவின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த நெமிலி மேற்கு ஒன்றிய தேமுதிக துணை செயலாளர் M.பாலகுரு (எ) பாலு அவர்களின் தந்தை M. முத்துக்கிருஷ்ணன் (எ) ராஜா அவர்கள் 26/10/2025 அன்று இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு தேமுதிக பொதுச்செயலாளர். பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து தேமுதிக மாநில தொண்டர் அணி துணை செயலாளர். SS. தினகரன் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதில் தேமுதிக மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.  ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆசிரியர் நூருல்லாஹ்!!

படம்
மதுரை மாவட்டம்,தனக்கு வேண்டும் என்பது தேவை!! எல்லோருக்கும் வேண்டும் என்பது சேவை!என்ற கொள்கை மனப்பான்மையோடு தன்னுடைய ஊதியம் கொண்டும் நண்பர்களின் உதவியுடனும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார் மதுரை சேர்ந்த ஆசிரியரும் சமூக ஆர்வலருமான  நூருல்லாஹ்.  இஸ்லாமியராக இருந்தாலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோர மக்களும் பண்டிகை நல்ல முறையில் கொண்டாடுவதற்காக அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கியும், நண்பர்களின் உதவியோடு மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியவர்களுக்கும், மாணவர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கியுள்ளார்.  மேலும் தீபாவளி அன்று சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் நேரத்தில் அங்கு மயக்க நிலையில் இருந்த செல்வம் என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு முதலுதவி செய்து அவருக்கு வேண்டிய உதவியும் செய்து அவருடைய இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி.

சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோவில் சுற்றுச்சுவர் இடிந்தது: ₹1.25 கோடி வீண்? - ஊழல் குற்றச்சாட்டு!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் கோயிலின் சுமார் 15 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர், அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ₹1.25 கோடி செலவில் சீரமைப்புப் பணிகள் நடந்து, குடமுழுக்கு நடந்து சில மாதங்களே ஆன நிலையில் இந்தச் சுவரின் சரிவு, கோயில் மறுசீரமைப்புப் பணிகளில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. கோடிக்கணக்கில் செலவு; தரமில்லை? - மக்கள் கொந்தளிப்பு!ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தின் அருகில், 400 படிக்கட்டுகளுடன் மலையில் அமைந்துள்ள யோக ஆஞ்சநேயர் கோயிலில், இந்து அறநிலையத்துறை சார்பில் சுமார் ₹1.25 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், பணிகள் நிறைவடைந்து 07.07.2025 அன்று குடமுழுக்கு நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டுகள்:  "₹1.25 கோடி செலவில் தரமான மறுசீரமைப்புப் பணிகள் நடந்திருந்தால், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருக்க வாய்ப்பே இல்லை. இது பராமரிப்புப் பணிகள் சரிவர செய்யப்படவில்லை என்பதையே காட்டுகிறது....