இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரக்கோணம் அருகே இச்சிபுத்தூர், ஊ.ஒ.நடுநிலைப்பள்ளிக்கு MRF தொழிற்சாலை மூலம் நடைபெற்ற 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா!!

படம்
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம், இச்சிபுத்தூர், ஊ.ஒ.நடுநிலைப்பள்ளிக்கு MRF தொழிற்சாலை மூலம் 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய  வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது.  இதை மாவட்ட ஆட்சியர். ஜெ.யு.சந்திரகலா IAS அவர்கள் ரிப்பன் வெட்டி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் மரக்கன்று நடப்பட்டு, மாணவர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட பரிசு பொருட்கள் ஆட்சியரால் வழங்கப்பட்டன.  விழாவில் இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மோகனா அவர்கள், மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர் சி.சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில்,வட்டாரக் கல்வி   அலுவலர்கள் இரகுவீரன், கருணாமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் பத்மநாபன் மற்றும் தலைமை ஆசிரியர் மு.கு.தேன்மொழி, ஆசிரியர் பெருமக்கள் இரா.துளசிராமன், கோ.புவனேஸ்வரி,க.சுஜாதா, கோ.அமுதா, பா.பாலமுருகன், அ.தேவராஜன், தணிகைமலை ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகள் அனைத்தும் MRF நிறுவன பொதுமேலாளர் மற்றும் PRO கஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

தென் தமிழகத்தில் இன்று-நாளை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

படம்
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,  (பிப்ரவரி 27) தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.(பிப்ரவரி 28) முதல் மார்ச் 1ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்ட புகைப்பட கலைஞர் விஜய்.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களை இரண்டு வாரங்களுக்குள் காலி செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு !!

படம்
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட சின்ன உடைப்பு பகுதி மக்கள், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தங்கள் இடங்களை காலி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  சுமார் 350 குடும்பங்கள் வசித்து வரும் இந்தப் பகுதியில், நிலத்திற்கான இழப்பீடு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட போதிலும், முறையான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி மக்கள் வெளியேற மறுத்து வந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, "அரசு ஏற்கனவே பெருங்குடியில் 2 செண்ட் நிலமும், 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடும் கட்டித் தர முன்வந்துள்ள நிலையில், மக்கள் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவது முறையல்ல" எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர். வரும் 15 நாட்களுக்குள் மக்கள் தாங்களாகவே முன்வந்து காலி செய்யாவிட்டால், சட்டப்படி பலத்தைப் பிரயோகித்து நிலத்தை அரசு தன்வசப்படுத்திக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி...

மதுரை ஃபாத்திமா கல்லூரியில் நடைபெற்ற 50வது பட்டமளிப்பு விழா!!

படம்
மதுரை மாவட்டம், மதுரையில் 28 பிப்ரவரி 2026 அன்று, மதுரை ஃபாத்திமா கல்லூரியின் 50வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர், மாண்புமிகு அருட்தந்தை ஜோ அருண் சே.ச. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பட்டப்படிப்பை முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.  ஆணையத் தலைவர் அவர்கள் தம் சிறப்புரையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சார்பாகவும், சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பாகவும் கூடி வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, சிறுபான்மை மக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கும் பாதுகாப்புகள், ஏராளமான நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகள் குறித்தும், ஆணையத்தின் செயல்பாடுகளை குறித்தும் விளக்கினார். மேலும், விடா முயற்சியும் நிலைத்தன்மையுமே நம்மை சிறந்து விளங்கச்செய்யும் என்று மாணவிகளுக்கு  எடுத்துக்கூறி, தம் வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். இந்த விழாவில், கல்லூரியின் முதல்வர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என சிறுபான்மைய...

குமுளி: திருடப்பட்ட 15 -க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் மீட்பு !!

படம்
தேனி மாவட்டத்தில் குமுளி பகுதியில் காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்களை காவல்துறையினர் திறம்பட விசாரணை மேற்கொண்டு மீட்டுள்ளனர். இதில் மொத்தம் 15 செல்போன்கள் மீட்கப்பட்டதாகவும், அவை தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி. அவர்களின் உத்தரவின்பேரில், குமுளி காவல் நிலையம் சார்பில் காவல் ஆய்வாளர் அபிலாஷ் குமார் தலைமையில் எஸ்.ஐ. கண்ணன், கான்ஸ்டபிள் மாரியப்பன், கான்ஸ்டபிள் விபின், கான்ஸ்டபிள் அஜித்குமார், கான்ஸ்டபிள் அருண் லால் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் இந்த மொபைல்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட செல்போன்கள் இன்று உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டன. காவல்துறையின் விரைவான மற்றும் சிறப்பான நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் செல்போன் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

திட்டக்குடி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியில் நடைபெற்ற 8ம் ஆண்டு விழா! நடிகை தீபா பங்கேற்பு!!

படம்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8 ம் அண்டு செம்மொழி ஆண்டுவிழா பள்ளி தாளாளர். சி.வெ.க வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளராக சினிமா நடிகை தீபா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார்.பின்னர் நடனமாடி மகிழ்வித்தார். இதில் பள்ளி முதல்வர். பசுபதி,ஆசிரியர்கள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

நத்தம் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் பெருந்திருவிழா!!

படம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம்  அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மாசி பெருந்திருவிழா இனிதே நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வருகின்ற 03.03.2026 ஆம் தேதி அன்று சந்திர கிரகணம் நடைபெற இருப்பதால்  அன்றைய தினம் நத்தம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மதியம் ஒரு மணியிலிருந்து மாலை 7 மணி வரை கோவில் நடை சாத்தப்படுகின்றது என்பதனை பக்தர்களுக்கும்  பொதுமக்களுக்கும்  தெரியப்படுத்திக் கொள்கிறோம். அன்றைய தினம் 7 மணிக்கு மேல் சாமி தரிசனமும்,  அதன் தொடர்ச்சியாக இரவு 11 மணிக்கு மேல் சிம்ம வாகனத்தில் அம்பாள் மின்னொளி ரதத்தில் நகர்வலம் வருகிறது. என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். இப்படிக்கு கோவில், செயல் அலுவலர் பால சரவணன் மற்றும் பரம்பரை அறங்காவலர் பூசாரிகள் கணேஷ், சின்ராஜ், கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், யுவராஜ், தினேஷ்குமார், முத்துக்குமார், புருஷோத்தமன், திருக்கோவில் நிர்வாகம். திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன் 

குடியாத்தத்தில் கார் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு!!

படம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் புதிய மேம்பாலம் செல்லும் சாலை வளைவில் கல்லூறை சேர்ந்த ஜெயக்கொடி மகன் பாலிடெக்னிக் படித்து.  வருகிறார்  . இவர் இருசக்கர வாகனத்தில் சென்று மேம்பாலத்தில் கீழிருந்து வளைய முற்பட்ட பொழுது அப்பொழுது அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த மாணவனை இடித்து விட்டு  நிற்காமல் தப்பி சென்றது தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவன் உயிரிழந்தார். மேலும் கல்லூரி மாணவனை இடித்து விட்டு சென்ற கார் மற்றும் நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்துக்கு முக்கிய காரணம் போதிய வெளிச்சம் இல்லாததால் இந்த விபத்து நடந்ததாக பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர். குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

எம்.ஆர்.எப் நிதி ரூ.1 கோடியில் புதிய அரசு பள்ளி கட்டிடம் மாவட்ட ஆட்சியர் திறந்தார்!!

படம்
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் இச்சிப்புத்தூர் ஊராட்சியில் எம் ஆர் எப் நிறுவனத்தின் சி எஸ்ஆர் நிதி ரூ 1.05கோடி மதிப்பில் புதிய அரசு பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு  திறப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு எம்ஆர்எப் பொது மேலாளர்.ஜான் டேனியல் தலைமை தாங்கினார் தலைமை ஆசிரியர் தேன்மொழி வரவேற்றார்.  இச்சிப்புத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்.பத்மநாபன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக .மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் , மாவட்ட ஊரசு வளர்ச்சி திட்ட இயக்குனர் சரண்யா தேவி, ஊராட்சி மன்ற துணை தலைவர். முனியம்மாள் சீனிவாசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள். மலா சஸ்வந்த்ரான் ஜெயலட்சுமி விஜயகுமார். மல்லிகா பொன்னுசாமி, .சுமதி சீனிவாசன், நாகராஜன், .சந்திரசேகரன், வெங்கடேசன் உட்பட பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். எம்ஆர்எப் மக்கட் தொடர்பு அலுவலர் கஜேந்திரன் நன்றி கூறினார். அரக்கோணம் செய்தியாளர் ரவி 

STAR GURU CHARITABLE FOUNDATION சார்பாக, மதுரை நேரு வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளியில் 78வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது!!

படம்
STAR GURU CHARITABLE FOUNDATION சார்பாக, மதுரை நேரு வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளியில் 78வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் திரு. குருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பல மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.  மாணவர்களின் முன்னிலையில் குருசாமி அவர்கள் ஊக்கமளிக்கும் உரை நிகழ்த்தி, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நல்ல ஒழுக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து திறமையான மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்புடன் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த விழா அனைவருக்கும் ஊக்கமும் மகிழ்ச்சியும் அளித்தது.  தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

என்.ஜி.ஜி.ஓ காலனி ஸ்ரீ ஐயப்பன் திருகோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் சாமி தரிசனம்!!

படம்
கோவை துடியலூர் அருகே அசோகபுரம் என் ஜி ஜி ஓ காலனி ஸ்ரீ ஐயப்பன் திருகோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி கோவில் மூலவர் மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை துடியலூர் அருகே அசோகபுரம் என் ஜி ஜி ஓ காலனி கிருஷ்ணமூர்த்தி 1 வது வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ஐயப்பன் திருகோவில். இக்கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு புணரமைக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா விமர்சையாக நடைபெற்றது. மஹா கணபதி ஹோமத்துடன் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து முதற்கால வேல்வி, இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்விகள் நடைபெற்றது.  இன்று நான்காம் கால வேள்வி நடைபெற்று புனித நீர் கலசங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு முதலில் மூலவர் ஐயப்பனுக்கு புனித நீர் பூஜைகள் செய்யப்பட்டத...

மதுரை மக்களுக்கு தகன சேவை — நாகனாகுளத்தில் ஈஷா சார்பாக நவீன எரிவாயு தகனமேடை!!

படம்
மதுரை: மதுரை மாநகராட்சியின் சார்பில் மதுரை நாகனாகுளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடை, இனி  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச தகன சேவையாக வழங்கப்பட உள்ளது. இந்த தகனமேடையின் பராமரிப்பு மற்றும் இயக்கப் பொறுப்பு, சமூக நல நோக்குடன் செயல்பட்டு வரும் ஈஷா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில், அனைத்து தரப்பு மக்களுக்கும் கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகள் மற்றும் எரியூட்டு சேவைகள் வழங்கும் உயரிய நோக்குடன், ஈஷா அறக்கட்டளை கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து தமிழகம் முழுவதும் பல மயானங்களை திறம்பட இயக்கி பராமரித்து பொதுமக்களிடையே நன்மதிப்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மதுரையிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈஷா தன்னார்வலர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. நகர்ப்புற மக்களின் நீண்ட நாள் தேவையை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பாரம்பரிய மர தகன முறைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்...

கே.வி குப்பம் அருகே மேல் காவனூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கு தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சி!!

படம்
வேலூா் மாவட்டம் கே.வி. குப்பம் ஒன்றியம் மேல் காவனூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் வானில் நிகழ்வுகளை அரிய வான் நோக்குதல் நிகழ்வுகளை தொலை நோக்கி மூலம் மாணவர்கள் பொதுமக்கள் காணும் நிகழ்வுகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். சுரேஷ். தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி. கலந்து கொண்டு நிகழ்ச்சி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் தொடர்ந்து தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சி அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள்  நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்  நிகழ்ச்சியில் பகல் 10 மணி முதல் மாலை 05 மணி வரை சூரியன் மற்றும் சூரியனின் கரும்புள்ளிகள் மாணவ மாணவிகளுக்கு பார்க்கப்பட்டது இரவு 07 மணி முதல் ஒன்றரை மணி வரை நிலவு வியாழன் சனி ஒரியன் நெபுல நட்சத்திரக் கூட்டம் மற்றும் பெரிய நட்சத்திரங்கள் கிரேட் பியர் துருவ நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் ரிஷப நட்சத்திர கூட்டம் என மாணவ மாணவிகள் என சுமார் 800க்கு மேற்பட்டோர்களுக்கு அப்பள்ளியின் வளாகத்தில் காண்பிக்கப்பட்டது. இதில் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கண்டு களித்தனர் நிகழ்ச்சியில் மேல் காவன...
படம்
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி  மத்திய ஒன்றிய தி.மு.க சார்பில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் ஆணைக்கினங்க, மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் R. வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மார்ச் - 1 அன்று பிறந்தநாள் விழா காணும் திமுக கழக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சயனபுரம் கிராமம் ரோட்டுத் தெருவில் மத்திய ஒன்றிய கழகத்தின் சார்பாக  நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் நாளை காலை 9 மணி அளவில் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி 500  நபருக்கு அன்னதானம்  நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய கழகத்தின் நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர் பிரதிநிதிகள், BLA2, BDA, BLC, மகளிர்  அணி மற்றும் கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். அரக்கோணம் செய்தியாளர் ரவி 

இட்மா பாரம்பரிய வைத்தியர்கள் சங்கம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது!!

படம்
மதுரை மண்டல அமைப்பாளர் லெட்சுமி சந்திரலிங்கம் இல்லத்தில் இருந்து இட்மா பாரம்பரிய வைத்தியர்கள் சங்கம் சான்றிதழ்கள். முதலில் அப்பிளிக்கேஷன் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட்டது . இட்மா மதுரை மண்டல அமைப்பாளர் லெட்சுமி அவர்கள் நன்றியை தெரிவித்தார்கள். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

பாஜகவிடம் சரண்டர்.. பெரியார் படத்தை அகற்றிய அதிமுக சரண்டர்!!

படம்
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள NDA கூட்ட அரங்கின் முகப்பில் இருந்த பெரியாரின் புகைப்படத்தை பாஜகவின் உத்தரவின் பேரில் அகற்றியது அதிமுக. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

19 கட்சிகளுடன் பலமான கூட்டணியில் திமுக!!

படம்
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 13 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.  அந்த கட்சிகள் அப்படியே 2026 தேர்தலில் தொடர்வதோடு புதிதாக மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்திருக்கின்றன.   இதனால், திமுக கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை 19-ஆக உயந்திருக்கிறது. 1. திமுக 2. காங்கிரஸ் 3. மதிமுக 4. இந்திய கம்யூனிஸ்ட் 5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6. விடுதலை சிறுத்தைகள் 7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 9. மனிதநேய மக்கள் கட்சி 10. அகில இந்திய பார்வர்டு பிளாக் 11. தமிழக வாழ்வுரிமை கட்சி 12. மக்கள் விடுதலை கட்சி 13. ஆதிதமிழர் பேரவை 14. மக்கள் நீதி மய்யம் 15. தேமுதிக 16. எஸ்டிபிஐ 17. மனித நேய ஜனநாயகக் கட்சி 18. முக்குலத்தோர் புலிப்படை 19. கொங்கு இளைஞர் பேரவை. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

விழுப்புரம் வி.ஆர்.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 31-ம் ஆண்டு விழா!!

படம்
விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள வி.ஆர்.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 31-ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சோழன் தலைமை தாங்கினார். ஆடிட்டர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கந்தசாமி அனைவரையும் வரவேற்றார். அரசு வக்கீல் நாகராஜன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, தேர்வில் ஒவ்வொரு வகுப்பிலும் முதலிடத்தை பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசு,சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் தாசில்தார் வேல்முருகன், நகரமன்ற கவுன்சிலர் கோதண்டராமன், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் அன்பு, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பிருதிவிராஜ், மழலையர் பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி, வக்கீல் மனோ, நிர்வாகிகள் இருவேல்பட்டு குமார், மோகன், செல்வம...
படம்
கடந்த 14-ஆம் தேதி திரிஷாவை பற்றி நயினார் நாகேந்திரன் பேசிய போது கடும் எதிர்ப்புகள் எல்லா தரப்பிலும் எழுந்தது. ஆனால், பாஜகவில், ’’இதெல்லாம் ஒரு விஷயமா?’’ என கடந்து போனார்கள். அப்போதே சந்தேகம் எழுந்தது. நயினார் நாகேந்திரன் காரியத்தோடுதான் இப்படி பேசியிருக்கிறார் என தெரிகிறது. விஜய் மனைவி சங்கீதாவின் விவகாரத்து விவகாரம் இருக்கிறது. வெறும் விவகாரத்து என கடந்து போய்விட முடியவில்லை. சங்கீதாவின் மனுவில் உள்ள வாசகங்கள் அனைத்தும் விஜய்யின் இமேஜ்ஜை சுக்குநூறாக உடைக்கிறது. தனிநபராக இருந்தால் இது தனிப்பட்ட விவகாரம் என்று கடந்து போவார்கள். பொதுவாழ்க்கைக்கு வந்ததால் விமர்சிக்கப்படுகிறது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி
படம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (பிப். 28) இரவு தமிழகம் வருகிறார். ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலப் பயணங்களை முடித்துக் கொண்டு, இன்று இரவு 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வரும் அவருக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், நாளை (மார்ச் 1) காலை 11.45 மணியளவில் புதுச்சேரி சென்று ரூ. 2,700 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மதியம் 3 மணியளவில் மதுரை வரும் பிரதமர், ரூ. 4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதோடு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். தேர்தல் நெருங்கும் வேளையில் பிரதமரின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

தேனி அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடுதல் – நன்செய் அமைப்பின் பசுமை முயற்சி!!

படம்
தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில், நன்செய் அமைப்பு சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பசுமை செந்தில் அவர்களின் ஒருங்கிணைப்பில், தேனி அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மரக்கன்றுகள் நடும் இந்நிகழ்வில், இந்து எழுச்சி முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் திரு இராமமூர்த்தி தேனி நகர தலைவர் திரு சிவராம் தேனி நகர செயலாளர் ஏழுமலையான் திரு சுரேஷ் நகர செயற்குழு உறுப்பினர் திரு இராஜேஷ்கண்ணன் ஆகியோர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். மருத்துவமனை வளாகம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், சுத்தமான காற்றையும் ஆரோக்கியமான சூழலையும் உருவாக்கும் முக்கியமான முயற்சியாகும். இது நோயாளிகளுக்கும் அவர்களை பார்க்க வரும் உறவினர்களுக்கும் நிம்மதியான இயற்கைச் சூழலை ஏற்படுத்தும். பசுமை வளர்ப்பு என்பது ஒரு சமூகப் பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இயற்கையை காக்கும் முயற்சியில் சமூக அமைப்புகளும் பொதுமக்களும் இணைந்து செயல்படுவது மிகவும் பாராட்டத்தக்கதாகும். இத்தகைய பசுமை முயற்சிகள் தொடர்ந்து ந...

மூணாறில் தெரு நாய்களின் கொடூரம்!!

படம்
மூணார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தெரு நாய்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. மூணார் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை தான் கடந்த தினம் தெரு நாய் கொடூரமாக தாக்கியது வீட்டின் முற்றத்தில் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு காத்திருந்த சிறுமிக்கு நேராக தான் தெரு நாயின் தாக்குதல் பலத்த காயமடைந்த சிறுமியை அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் தெரு நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை. தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

இளைஞரணி கங்கு வாய்ப்பளிக்க ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்!!

படம்
தென் மாவட்டங்களில் சிட்டிங் அமைச்சர்களை எதிர்த்து போட்டியிட, மன்னர் பரம்பரையை சேர்ந்த பாஜக மாநில இளைஞரணி செயலாளரான ராஜா ஆதித்ய சேதுபதியை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்; ABVP பின்னணி இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் வலியுறுத்தலுக்கு மாநில பாஜக ஒத்துழைத்துள்ளதாகவும் தகவல் திருச்சுழி அல்லது முதுகுளத்தூர் தொகுதிகளில் அவரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

இன்று இரவு தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!!

படம்
இரண்டு நாள் பயணமாக இன்று (பிப்.28) தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் இன்று இரவு 9 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை காலை புதுச்சேரி சென்று நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் மதுரை வருகிறார்.  தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார் 
படம்
நாளை (01-03-26)  மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் பாரத பிரதமர் மோடி அவர்கள் மதுரை AIIMS மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார். இந்த மருத்துவமனை பணிகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை வைத்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில மகளிரணி தலைவி கவிதா ஸ்ரீகாந்த் மற்றும் நிர்வாகிகள் ஒரு வித்தியாசமான சுவரொட்டிகளை அறந்தாங்கி நகரமெங்கும் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

திருமயம் அருகே கண்ணனூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை நமதே தமிழ்நாடு நமதே என்னும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!!

படம்
திருமயம் அருகே கண்ணனூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை நமதே தமிழ்நாடு நமதே என்னும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக அவைத்தலைவர் ஆர் எம்.கருப்பையா, ஒன்றிய செயளாலர் (ITwink)தினேஷ்குமார், மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலர்   ஸ்ரீ காந்த், மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர் பாண்டி குமார், ஆர்.எம்  செந்தில்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறு. சரவணன், மேற்கு ஒன்றி ய செயலாளர் சுப்பு .பழனிச்சாமி, பிரச்சார கூட்டத்தில் மாவட்ட தலைவர் வக்கீல் ஜெகதீசன்  பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர்.ராம. சேதுபதி, மாவட்ட  துணைத்தலைவர் முருகேசன்,ஆதவா. செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

அறந்தாங்கி அருகே நாகுடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்!!

படம்
அறந்தாங்கி தாலுகா நாகுடியில் திமுகவினர் சார்பில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில்  புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 51 ஜோடி மாடுகள்  போட்டியில் பங்கேற்றன.பெரிய மாடு, கரிச்சான்மாடு, பூஞ்சிட்டு என 3-பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் (9)ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் (14)ஜோடி மாடுகளும், தேன்சிட்டு மாடு பிரிவில் (27)ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டி சீறிப்பாய்ந்தன. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 2லட்சம் மதிப்பிலான கோப்பைகள், ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சாலையில் இரு புறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தயத்தைக் கண்டு ரசித்தனர். நாகுடி  காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

பிரதமர் திருப்பரங்குன்றம் பயணம் - மறுபரிசீலனை செய்ய மனு!!

படம்
“சில பிரச்னைகள் நீடிப்பதால் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் செல்வது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் மாற்றாக, மீனாட்சி அம்மன் கோயில் அழகர் மலை, பழமுதிர்ச்சோலை போன்ற இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கலாம்” -மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மனு. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் வருசாபிஷேகம்!!

படம்
மதுரை ஆரப்பாளையம் ஏஏ ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில்   வருசாபிஷேகம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.  கும்பாபிஷேகம் செய்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து வருசாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு ஹோமம்  ஏற்பாடு செய்திருந்தனர். கோயில் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா 

கோவையில் தொடர்ந்து 42 ஆண்டுகாலம் மக்கள் சேவையாற்றும், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42வது நிறுவனர் நாள் விழா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாட பட்டது!!

படம்
கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடுவால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் கீழ் மருத்துவம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இதன் நிறுவனர் நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி 42-வது ஆண்டு நிறுவனர் நாள் விழா, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆண்டறிக்கை வாசித்தனர். விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக ஏ.வி.எம். லேப்ஸ், ஏ.வி.எம். ஸ்மைல்ஸ் மற்றும் தைரோகேர் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஏ. வேலுமணி கலந்து கொண்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஊழியர...

புதுக்கோட்டை - இலுப்பூர் அருகே மேட்டுச்சாலை பகுதியில் உள்ள மதர் தெரசா வேளாண்மை கல்லூரியில் நடைபெற்ற 2-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா!!

படம்
புதுக்கோட்டை மாவட்டம்: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மேட்டுசாலை பகுதியில் செயல்பட்டு வரும் மதர் தெரசா வேளாண்மை கல்லூரியில் 27.02.2026 அன்று 2ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா காலை 11.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் செயல் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் முனைவர் கா. சுப்பிரமணியன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு 100க்கும் அதிகமான மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்; மொரைஸ் குழும இயக்குநர் திருமதி சிசிலியா ஈடல் பிரியா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நிறுவனர் முனைவர் இரா. சின்னத்தம்பி, தாளாளர் இரா.சி. உதயகுமார், இயக்குநர் முனைவர் மா. பூங்குன்றன், பதிவாளர் மு. தினேஷ்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சுப. இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் ஒரு பகுதியாக மதர் தெரசா வேளாண் கல்லூரியின் பேராசிரியர்கள்  பின்வரு...

தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலினின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் ரத்ததான முகாம்!!

படம்
விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான  இரா. லட்சுமணன் MLA அவர்கள் தொடங்கி வைத்து, ரத்ததானம் செய்தார். இதைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள், இளைஞரணியினர் உள்ளிட்ட பலரும் ரத்ததானம் செய்தனர். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக் குழுவினர் முகாமில் கொடையாளர்களிடமிருந்து ரத்தத்தை தானமாக பெற்றனர். முகாமில் மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினர்கள். இரா.கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர். சம்பத், மாரிமுத்து, நகரச் செயலர்கள். எஸ். வெற்றிவேல், எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி, மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர்.  செ.மணிண்டன், ஒன்றியச் செயலர்கள். பா.தெய்வசிகாமணி, வி.ஜி.பிரபாகரன், வளவனூர் பேரூர் செயலர் பா.ஜீவா, விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கோலியனூர் ஒன்றியக்குழுத் தலைவர் இ.சச்சிதாநந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சௌந்தர நாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாசி திருவிழா!!

படம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கல்லல் ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சௌந்தர நாயகி அம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப்ரவரி 21 ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.இன்று ஏழாம் நாள் விழாவில் திருவீதி உலா நடைபெற்றது. ஸ்வாமி சுந்தரஸ்வரர் சௌந்தர நாயகி  அம்மன் தம்பதி சமேதரராக பட்டாடை சர்வ அலங்காரத்துடன் காட்சி தந்து அருள் பாலித்தார். இத்திருவிழாவில் கல்லலை மற்றும் அதன் சுற்றி உள்ள குன்னங்கோட்டை கிராம மக்கள் கோயில் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

குடியாத்தத்தில் நடைபெற்ற அஞ்சலி ஊர்வலம் மற்றும் கூட்டம்!!

படம்
வேலூர் மாவட்டம்,மறைந்த தலைவர் தியாக சீலர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்... குடியாத்தம் தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து  அனைத்து கட்சி சார்பிலும் அஞ்சலி ஊர்வலம் தொடங்கி பழைய பஸ் நிலையத்தில் முடித்து அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர். கே. சி. பிரேம்குமார் தலைமை தாங்கினார்.  கீழ் கண்ட அனைத்து கட்சி தலைவர்கள் புகழஞ்சலி உரையாற்றினார்கள். சிலம்பரசன் சிபிஎம் சு. சம்பத்குமார் மூத்த வழக்கறிஞர்.ஏகலைவன்...வி. தொ.ச சிபிஎம்.சடகோபன் திராவிட கழகம் குமரேசன் விசிக.வேதாசலம் விசிக கவிஞர் பாரி திமுக.செல்வகுமார் தேமுதிக.பழணி மதிமுக வீராங்கன் காங்கிரஸ் பரத்நவீன் காங்கிரஸ் மீரான் குத்துஷ் தமுமுக கா.கு. நெடுஞ்செழியன் அவை த. திமுக.வே. குமார் சிபிஐ.துரைசெல்வம் சிபிஜ.எல் மணி சிபிஐ.அருனோதையம்தமாக ஜி. லதா சிபிஐ மா.செயலாளர் அமலுவிஜயன் MLA.குடியாத்தம்.ஆகியோர் பேசினார்கள் குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.