குடியாத்தம் நகராட்சி கூட்டம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் குடியாத்தம் நகராட்சி ஆணையரை கண்டித்து நகர மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் 36 வார்டு கொண்ட நகராட்சி ஆகும் 

நகராட்சியில் நகராட்சி ஆணையராக தனலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். 

கடந்த சில நாட்களாக குடியாத்தம் நகராட்சியில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சியும் நகர மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை.

கடந்த திமுக ஆட்சியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்து முடித்த எந்த ஒரு நிதியையும் வழங்கவில்லை என்றும் 

நகராட்சி ஆணையர் தன்னிச்சையாக   செயல்பட்டு வருவதாகவும் 

அதுமட்டுமின்றி குடியாத்தம் ஒன்பதாவது வார்டில் போடப்பட்ட சிமெண்ட்  சாலை  கடந்த திமுக ஆட்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அமலு அவர்களின் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு போடப்பட்ட சாலையை 

தற்போது  தமிழக வெற்றி கழகத்தின் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து அவர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான தார் சாலையை போட்டதாக பொதுமக்களிடம் பொய்யான தகவலை கூறியது கண்டிக்கத்தக்கது என்றும் 

இதனால் இன்று குடியாத்தம் நகர மன்ற கூட்டத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் குடியாத்தம் நகராட்சி ஆணையரை கண்டித்து நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். 

இதனால் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!