குடியாத்தத்தில் மூதாட்டியை ஏமாற்றி போலி இறப்பு சான்று வழங்கிய மர்ம நபர் நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் தகவல்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியை சேர்ந்த கோகிலா வயது 65 இவருடைய தாய் செல்லம்மாள் கடந்த 2010 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் . உயிரிழந்து உள்ளார்.
அந்த சமயத்தில் கோகிலா தன்னுடைய தாய் இறந்ததை பதிவு செய்யவில்லை
தற்போது இறப்புச் சான்று தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதனை குடியாத்தம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது நபர் ஒருவர் கோகிலா என்ற மூதாட்டியிடம் எதற்காக வந்துள்ளாய் என்று கேட்டதாகவும் அதற்கு எனது தாய் 2010 இறந்துவிட்டார்கள் அவருடைய இறப்புச் சான்று வாங்குவதற்காக வந்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
உடனடியாக அந்த நபர் இறப்புச் சான்று நான் வாங்கித் தருகிறேன் என்று கூறி சில தொகையை பெற்றுள்ளார்.
நேற்று மூதாட்டி கோகிலா அவர்களின் தாய் செல்லம்மாள் இறப்பு சான்று அந்த நபர் வழங்கி உள்ளார்.
அதனை இன்று குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விசாரித்த போது அந்த இறப்புச் சான்று போலி என்பது தெரியவந்துள்ளது.
இது சம்பந்தமாக மூதாட்டி கோகிலா குடியாத்தம் வட்டாட்சியரிடம் அந்த இறப்பு சான்று வழங்கியவர் யார் என்பது குறித்து விசாரணை செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தாங்கள் முறையாக இறப்புச் சான்று விண்ணப்பிக்கும் படியும் அறிவுறுத்தி அனுப்பினார்.
போலியாக வேலூர் மாநகராட்சி இறப்பு சான்றிதழில் குடியாத்தம் துணை வட்டாட்சியர் கையொப்பமிட்டு அரசு கோபுர முத்திரை போட்டு வழங்கிய சம்பவம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக