கூட்டணியில் இருந்தே விஜய்க்கு எதிர்ப்பு..முடக்கிய போலீஸ்! கோபத்துடன் கேள்விகளை அடுக்கிய ஆளூர் ஷநவாஸ்!!
சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழகத்தின் வாகன பரப்புரைக்கு காவல் துறை தடை விதித்துள்ளது பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், திராவிடர் கழகம் நடத்த இருந்த நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்திற்கு தடைவிதித்து, பெரியார் திடலில் காவல்துறையை குவித்துள்ளது தவெக அரசு. இது கடும் கண்டனத்திற்கு உரியது எனவும், நீட் விலக்கும், நீட்எதிர்ப்பும் தமிழ்நாட்டின் கொள்கை. அது தவெகவின் கொள்கையா இல்லையா? என விசிக முன்னாள் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் வெடித்திருக்கும் நிலையில் தமிழகத்திலும் பரபரப்பு குறையாமல் நீட் எதிர்ப்பு முழக்கம் அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராகவும், உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுக்க வாகன பரப்புரை செய்யப்படும் என திராவிடர் கழகம் அறிவித்தது.அந்த பிரச்சார வாகனம் தமிழகம் முழுவதும் உலா வர இருக்கும் நிலையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் அனுமதி பெற்று கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் திருச்சியில் திராவிடர் கழகத்தின் வாகன பரப்புரைக்கு திடீரென காவல்துறை தடை விதித்து இருக்கிறது.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக