நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!
🔹காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு. வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் 15 நாட்கள் நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு ஆணை.
🔹தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது என டி.கே.சிவக்குமார் மீண்டும் திட்டவட்டம். வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு.
🔹முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல அரசியல் தலைவர்கள், விவசாயிகள் எதிர்ப்பு. மக்களின் உரிமை பிரச்னை என்பதால், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவும் வலியுறுத்தல்...
🔹மேகதாது விவகாரத்தில் தவெக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. தவெக அரசை கண்டித்து வரும் 3-ம் தேதி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
🔹மேகதாது குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்துக்கொண்டே காரில் ஏரிச் சென்ற நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்.
🔹தண்ணீர் இல்லாமல், காவிரியின் கடைமடையான திருமருகல் ஒன்றியத்தில் கருகும் நெற்பயிர்கள். வயல், பாலம் பாலமாக வெடித்து குறுவை பொய்த்து போனதால் விவசாயிகள் வேதனை.
🔹யாருடைய அழுத்தத்துக்குப் பணிந்து திராவிட கழக பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது என மு.க.ஸ்டாலின் கேள்வி. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் காவி என்பது உண்மையாகிவிட்டது என்றும் தவெக குறித்து விமர்சனம்.
🔹எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே வந்தே மாதரம் மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம். இந்தியாவின் பிரிவினைக்கு காரணமான பாடல் வந்தே மாதரம் என திமுக எம்.பி. ஆ.ராசா குற்றச்சாட்டு.
🔹பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம். அமித்ஷா அவைக்கு வராததால் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
🔹ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்துவதால் பதற்றம் அதிகரிப்பு. பதிலடியாக, குவைத், ஜோர்டான், பஹ்ரைன் தளங்களில் ஈரான் தாக்குதல்.
🔹காமன்வெல்த் 'பாரா' தடகளம் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் திலீப் மஹாது தங்கம் வென்றார். பளுதூக்குதலில் லவ்பிரீத் சிங் வெள்ளி வென்றார்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக