வேலூரில் பீடி தொழிலாளர்களின் வாழ்வாதரம் பாதுகாக்க, கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் பீடித்தொழிலாளர்கள் ஆர்பாட்டம்!!

வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்   தொழிலாளர்களின் வாழ்வாதரம் பாதுகாக்க, மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி   பீடி தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பீடித்தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர்சரவணன்  தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட பொதுசெயலாளர். நாகேந்திரன் உள்ளிட்ட திரளான பீடித்தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள் இதில்

 பீடித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் மாதம் ரூ.6000/- வழங்கிடு 1947, 1966, 1976 பீடி சுருட்டு தொழிலாளர் வாழ்வாதாரம் பாதுகாக்க போடப்பட்ட சட்டங்களை பாதுகாத்தது அனைத்து பீடித் தொழிலாளர்களுக்கும் மருத்துவ அடையாள அட்டை வழங்கிடு அனைத்து பீடி மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். மருத்துவ வசதிகளை வழங்காதவரை மருத்துவ சேவைகளை இ.எஸ்.ஐ அனைத்து வகையான பரவலாக்கப்பட்ட உள்கட்டமைப்பு, மருத்துவர்கள், மருந்துகள் போன்றவற்றை முறையாக தொடர்ந்து வழங்கிடு, இ.எஸ்.ஐ. திட்ட உறுப்பினராக சேர்க்கப்படும் பீடித்தொழிலாளர்களின் பங்களிப்பு தொகையை அரசு நிதியிலிருந்து வழங்கிடு, நிலுவையில் உள்ள தொகையை வசூலிக்கும் நடவடிக்கையை ரத்து செய்திடு!பீடி சுற்றுவதற்கு தரமான இலை, புகையிலை வழங்கிடு தமிழக அரசேபீடித் தொழிலாளர் கூலி உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வை அறிவித்திடு பீடித் தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை உயரும் பஞ்சப்படி புள்ளிகள் மிகவும் மோசமாகவும் மிகவும் சொற்பமாகவும் 25 புள்ளி என்பது மோசமாகவும் உள்ளது, உண்மையான பஞ்சப்படி புள்ளி அறிவிக்க நடவடிக்கை எடுத்திடு வருங்கால வைப்புநிதி தொழிலாளர்களுக்கு ஆதார் வயது வித்தியாசம் காரணம் காட்டி இபிஎப்.ரூபாய் பென்சன் பெற தடையாக உள்ளது. ஏற்கெனவே 3 வருடம் வரை ஆதாரில் ஏற்றுக்கொள்ளும் நடைமுறை தொடர வேண்டும்.100 நெ டிரேட் மார்க் கம்பெனி 20 நாள் கூலி, தேசிய பண்டிகை நாளில் கூலியில் சேர்த்து கொடுப்பதை தவிர்த்து 12(3) ஒப்பந்தப்படி மாதம் ஒருமுறை கொடுக்க தொழிலாளர்துறை நடவடிக்கை எடுத்திடு! கடாமார்க்கின் டிரேட்மார்க் கம்பெனி இபிஎப்பில் உள்ள பீடித் தொழிலாளர்களுக்கு 1000 பீடிக்கு இபிஎப் கட்டுவதை தவிர்த்து 1500 பீடிக்கு இபிஎப் கட்டுவதற்கு தொழிலாளர்துறை நடவடிக்கை எடுத்திடு! டிரேட்மார்க் கம்பெனிகள் பீடித் தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை (சர்வீஸ் கார்டு வழங்கிடு * ரிங் லேபிள் ஒட்டும் தொழிலாளர்கள் பீடி ஒட்டுவதற்கு பசை, நூல் 12(3) ஒப்பந்தப்படி 1000 பீடி ஒட்டுவதற்கு முழுமையான கூலி கூட்ட சலுகைகள் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திரளான பீடித்தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

பேட்டி:நாகேந்திரன்   (பீடித்தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர்)

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!