இடுகைகள்

செப்டம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோவையில் நடைபெற்ற இந்திய பாரா கிரிக்கெட் லீக் 3.0 நிறைவு, வெற்றிக்கோப்பையை தட்டி சென்ற தமிழ்நாடு அணி! கோப்பைகளுடன் பரிசுகளும் வழங்கபட்டது. விருவிருப்புக்கு பஞ்சமில்லாத ஒரு கிரிக்கெட் போட்டியாக அமைந்தது என ரசிகர்கள் உற்சாகம்!!!

படம்
கோவை மாவட்டம், மாற்று திறனாளிகளின் வாழ்க்கையை மாற்றும் வகையில், இந்திய பாரா கிரிக்கெட் லீக் எனும் போட்டிகள் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ரோட்ராக்ட் க்ளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி மற்றும் தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்கம் சார்பில் கடந்த செப்டம்பர்  4ம் தேதி  முதல் 6ம் தேதி வரை  நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பாரா கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர். நான்கு அணிகளாக  களமிறங்கிய இப்போட்டியில்,  தமிழ்நாடு டவுன் டவுன் டைகர்ஸ், கொல்கத்தா தன்டர் வாரியர்ஸ், டெல்லி யுனிகார்ன்ஸ், மற்றும் வியான் வீணை ஸ்கூல் ரேஜிங் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பங்கேற்றது. இதன் இறுதி போட்டிகள் இன்று நடைபெற்றது இந்த போட்டியில் தமிழ்நாடு டவுன் டவுன் டைகர்ஸ், கொல்கத்தா தண்டர் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இப்போட்டிக்கான கோப்பையை தட்டி சென்றது. தமிழ்நாடு டவுன் டவுன் டைகர்ஸ் அணி, இந்தியன் பாரா கிரிக்கெட் லீக்ன் மூன்றாவது பதிப்பான ஐபிசிஎல்  3.0-ல் சாம்பியன் பட்டத்தையும்  வென்றது. மேலும் இற...

கோவை சரவணா நகர் பகுதியில் உள்ள, பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் சார்பாக, நடைபெற்ற முதலாம் ஆண்டு ஸ்தோத்திர கூட்ட நிகழ்ச்சி, கோவை சாய்பாபாகாலனி பகுதியில் சீறும் சிறப்புமாக நடைபெற்றது!!

படம்
கோவை சரவணா நகர் பகுதியில் பெத்தேலஹேம் ஜாய் ஜெபவீடு எனும் தேவாலயம் அமைந்துள்ளது இந்த தேவாலயத்தின் முதலாம் ஆண்டு ஸ்தோத்திர கூட்ட நிகழ்ச்சி  கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. பெத்தேல் ஜாய் ஜெபவீட்டின் தலைமை போதகர் ஜான் பீட்டர், உதவி போதகர் ஜெயக்குமார், தலைமை மூப்பர் சுத்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிறிஸ்தவ துதி பாடல்கள் பாடியும், ஆராதனை கீதங்கள் பாடியும், குழந்தைகளின் நடனநிகழ்ச்சியும் நடைபெற்றது.  மேலும் பைபிளில் எழுத பட்ட வசனங்களை எடுத்து கூறியும், விழா சீறும் சிறப்புமாக நடைபெற்றது.  முதலாம் ஆண்டு ஸ்தோத்திர கூட்ட நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.  தொடர்ந்து அனைவருக்கும் இரவு உணவுடன் விழா நிறைவு பெற்றது இந்த நிகழ்ச்சியில், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவன தலைவரும், சமூக ஆர்வலருமான நோட்டரி வழக்கறிஞர் புஸ்பாணந்தம், ஜெபா, வர்ஷா, வர்ஷினி, அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்ற ஓட்டுநர் கிருஷ்ணகுமார்,  பாஸ்டரம்மா ஜாய்ஸ், செளந்தரராஜன், ரிஸ்...

மண்டாடி படம் வெளியான பிறகு வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று படகு பந்தயத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவதாக நடிகர் சூரி கோவையில் தெரிவித்துள்ளார்!!

படம்
கோவை மாவட்டம்,கோவை நவகரை பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக மண்டாடி படக்குழுவினர் வருகை புரிந்தனர்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர். சூரி  மண்டாடி படம் வெளியான பிறகு நமது தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று இந்த மீனவர்களின் வீர விளையாட்டான படகு சவாரி விளையாட்டிற்கும் அரசு உரிய அங்கீகாரம் அளிக்கும் என நம்புவதாகவும் முதல் முறையாக தனது படம் ஐ மேக்சில் வெளியாவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்த அவர் , மண்டாடி  படம்  தான் நடித்த விடுதலை படத்தைப் போலவே மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார். மன்றாடி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் அமைவது தொடர்பாக படப்பிடிப்பின் போதே தான் கேள்வி எழுப்பியதாகவும் அப்போது கதைக்கு தேவை என்பதால் அது போன்ற காட்சிகள் இடம் பெற்றாலும் அதற்கு படத்தில் ஒரு மெசேஜ் கொடுத்துள்ளதாகவும் விளக்கமளித்தார் . நம் மண் சார்ந்த படத்தில் நடித்த தொட்டி தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தவர் பின்னர் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர் மேலும் அவர்களை ...

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!!

படம்
வேலூர் மாவட்டம்,வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (07.09.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. அவர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் ஞானகுரு, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ராம்குமார் (வேலூர்), செந்தில்குமார் (குடியாத்தம்) உட்பட பலர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட செய்தியாளர் மு பாக்யராஜ்.

நத்தம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழா!!

படம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா  கொண்டாடப்பட்டது நிர்வாகவியல் துறைத் தலைவர்  இராம நாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் யாழ் சந்திரா அவர்கள் தலைமை தாங்கி விழா உரையாற்றினார். அப்போது டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இதில்  ஆங்கிலத்துரை தலைவர்  திருமகள் மற்ற துறை சார்ந்த பேராசிரியர்களும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முத்தையா நன்றி கூறினார்.  முன்னதாக இந்நிகழ்ச்சியில் வணிக நிர்வாகவியல் துறை சார்ந்த மாணவர்கள் கல்லூரி சந்தை நடத்தினர். படவிளக்கம்: நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் கல்லூரி சந்தை அமைத்த மாணவர்களிடம்  முதல்வர் யாழ் - சந்திரா பொருட்கள் வாங்கினார். திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

வீரம் தவறல்ல... கோழைத்தனம் தான் தவறு! -எம்.எம்.அப்துல்லா!!

படம்
“மிசாவைப் பற்றி பேசும் போது விஜய் மிசாவில் திமுகவினர் அடி வாங்கியதை கிண்டல் செய்யும் விதமாக மோசமான ஒரு செய்கையைச் செய்து காட்டுகிறார். ஜனநாயகம் காக்க சிறை சென்று அடிபடும் வீரம் தவறல்ல... ஆனால், ஜெயலலிதாவிடம் அடி வாங்கி விடக்கூடாது என கொடநாடு எஸ்டேட் கேட் முன்பு பிச்சைக்காரன் போல கைக்கட்டி விடிய விடிய நின்ற கோழைத்தனம் தான் தவறு!” - தி.மு.க அயலக அணிச் செயலாளர். எம்.எம்.அப்துல்லா விமர்சனம்!  தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

ஒரு போராளியின் வீரத்தழும்பு அது! -டி.ஆர்.பி.ராஜா !!

படம்
“கழகத் தலைவர். மு.க.ஸ்டாலின் அவர்கள் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல. அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், மிசா சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது. சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப் பின்னால் இருப்பது, ஜனநாயகத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட வலி, எதற்கும் அஞ்சாத ஒரு போராளியின் மகத்தான அரசியல் வரலாறு.” - திமுக முன்னாள் அமைச்சர். டி.ஆர்.பி.ராஜா பதிவு! தலைமை செய்தியாளர் சின்னதம்பி.

மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற திங்கள் தின மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மேல்விஷாரம்‌ தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் .நா.பிரியா ரவிச்சந்திரன், அவர்களிடம் இரண்டு மனுக்கள் அளிக்கப்பட்டது. மேல்விஷாரம் நகரில் சுமார் 60,000-க்கும் அதிகமாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதால் கொசு மருந்து தெளிக்க வேண்டும். மேலும் மேல்விஷாரம் நகராட்சிக்கு நிரந்தரமாக ஆணையாளரை நியமித்து பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட தாவூத் நகர் முதல் தெருவில் பதினைந்து ஆண்டுகளாக கழிவுநீர் வெளியேற கால்வாய் இல்லாததால் ஆங்காங்கே அவரவர் வீட்டின் எதிரில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுதல், நோய்த் தொற்று மற்றும் கொசுத்தொல்லைகள் போன்ற பிரச்சனைகளால் மக்கள் தினம் தினம் வேதனை அனுபவித்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக பலமுறை நகராட்சிக்கு மனு அளித்து பலனில்லாத நிலையில் தாங்கள் கழிவுநீர் பிரச்சனையை தீர்த்து தர வேண்டும் எ...

சட்டப்பேரவையில் ஆற்காடு தொகுதி பிரச்சினைகள் குறித்து S.M.சுகுமார் MLA கேள்வி?

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு ரூ.26 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – சட்டப்பேரவையில் S.M.சுகுமார் MLA வலியுறுத்தல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர், S.M.சுகுமார் MLA  ஆற்காடு தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள் மற்றும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார். ஆற்காடு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் திட்டத்திற்கு ரூ.26 கோடி நிதி: ஆற்காடு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக ரூ.26 கோடி திட்ட மதிப்பீட்டை தமிழ்நாடு அரசின் ஏற்றுக்கொண்டுள்ள மத்திய அரசு  இதுவரை அந்த நிதியை விடுவிக்க வில்லை என்பதை சுட்டிக்காட்டிய S.M.சுகுமார் MLA, உடனடியாக நிதியைப் பெற்று மருத்துவமனை தரம் உயர்த்தும் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

சோளிங்கர் தாலுக்கா அலுவலகத்தில் "நைட் தாசில்தார்" நியமனமாே? - அரசாங்கம் புது பதவி கொடுத்திருக்குமோ?

படம்
சோளிங்கர் தாலுக்கா அலுவலகத்தில் "நைட் தாசில்தார்" நியமனமாே? - அரசாங்கம் புது பதவி கொடுத்திருக்குமோ?... 4 நாள் ஆச்சு... இன்னும் கால்துறையில் புகார் கொடுக்கல மெமோ இல்லை... விசாரணை இல்லை... CCTV பாதுகாப்பு இல்லை! விதி என்ன சொல்லுது? அரசு விதிப்படி ரெக்கார்டு ரூம் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். சாவி ரெக்கார்டு கிளார்க் மற்றும் தலைமையிடத்து துணை தாசில்தார் (HQ DT) இருவரிடம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் சோளிங்கரில் நடப்பது என்ன? இரவு 10 மணிக்கு மேல் ரெக்கார்டு ரூம் திறக்கப்படுகிறது! சாவி இரவு காவலர் ரமேஷ் கையில்! எப்படி வந்தது? இங்கே தான் பூதம் இருக்கு தலைவா! 1. டூப்ளிகேட் சாவி தயாரித்துவிட்டீர்களா? HQ DT-ட்ட இருக்க வேண்டிய சாவி, ரமேஷ் கைக்கு எப்படி வந்தது? ஒருவேளை டூப்ளிகேட் சாவி போட்டு பயன்படுத்துகிறீர்களா? என்ற சந்தேகம் இப்போது வலுக்கிறது! சாவியை டூப்ளிகேட் போடுவது அரசு ஆவண பாதுகாப்பு சட்டப்படி கிரிமினல் குற்றம் தெரியுமா? 2. அடுத்து தாசில்தார் ரூம் சாவியும் டூப்ளிகேட் போட்டுவிட்டீர்களா? இன்று ரெக்கார்டு ரூம்... நாளை தாசில்தார் ரூமா? தாசில்தார் சேரில் இரவு காவலர்...

காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்! - முதலமைச்சர். விஜய்!!

படம்
காவல்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது; விரைவில் நிரப்பப்படும். மாணவர்கள் குற்றத்தில் ஈடுபடாத வகையில் வழிநடத்துவது நம் பொறுப்பு.  சமூக சூழல், குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு காரணமாக இளம் வயதினர் குற்றத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கெல்லாம் யார் மீது பழிபோடலாம் என எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர். அவர்களுக்கு இணையாக 2021-25 வரை நடந்த குற்றச்சம்பவங்களை குறிப்பிட மனம் இடம் தரவில்லை. கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இதே சட்டசபையில் பல அவமானங்களை சந்தித்தார். இனி பெண்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.  தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறாக பேச வேண்டாம், தமிழகத்தில் ஆபாச பேச்சு நதியாக ஓடுகிறது. காவல்நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரண நிகழ்வு அல்ல, அது காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும். மக்கள் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரையும் குடும்ப நலனையும் பொருட்படுத்தாமல் காவலர்கள் பணியாற்றுகின்றனர்.  குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடக்கிறது, அதனால் குற்றம் நடக்கும...

சிவகங்கை ஆயுதப்படை ஏ.ஆர். குவார்ட்டர்ஸ் செல்லும் சாலை படுமோசம்! பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் விபத்து அபாயம்! – உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!

படம்
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் ஆயுதப்படை (AR) குவார்ட்டர்ஸ் செல்லும் முக்கிய சாலை பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல், தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலையில் ஆங்காங்கே தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சாலையில் உள்ள பள்ளங்களால் நிலைதடுமாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத பகுதிகளில் சாலையின் நிலை தெளிவாக தெரியாததால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சாலை போலீஸ் ஆயுதப்படை குடியிருப்புகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக இருப்பதால், காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் மட்டுமின்றி பொதுமக்களும் தினசரி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சாலை பல ஆண்டுகளாக உரிய முறையில் பராமரிக்கப்படாததால், நாளுக்கு நாள் அதன் நிலை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், பள்ளங்களின் ஆழம் த...

ரெட்டியார்சத்திரம் அருகே மண் திருட்டில் ஈடுபட்ட 3 டிப்பர் லாரிகள், 1 பொக்லைன் இயந்திரம் பறிமுதல்!!

படம்
திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் மாங்கரை குளத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மண் திருடும் கும்பல் மண் திருடி காமாட்சிபுரம் பகுதியில் தனியார் தோட்டத்தில் குவித்து வைத்து தனியார் செங்கல் சூளை மற்றும் வீடு கட்டும் நபர்களுக்கு விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது மண் திருட்டில் ஈடுபட்ட கும்பல் தப்பி ஓடிவிட்டது உடனடியாக போலீசார் மண் திருட்டில் ஈடுபட்ட ஒரு பொக்லைன் இயந்திரம் 3 டிப்பர் லாரிகள் ஆகியவற்றில் பறிமுதல் செய்து மண் திருடும் கும்பலை சேர்ந்த அருண்குமார், கோபால், கிருஷ்ணன், முத்துராம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர் திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

அன்னை தெரசா 116 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!!

படம்
தருமபுரி மாவட்டம், அரூர் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் சங்கம் மற்றும் அன்னை தெரசா 116 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தனியார் மண்டபத்தில் NT குமரேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் 300 -க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இறுதியில் நலிவடைந்த நாட்டுபுற கலைஞர்களுக்கு பாரட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்ட செய்தியாளர்.வே. பசுபதி.

சட்டமன்றத்தில் ஏன் எங்களை பேச விடல!..உதயநிதி ஸ்டாலின் பதிவு!!

படம்
தவெக நிர்வாகிகள், அமைச்சர்கள் மீது பல குற்ற செயல்களும், புகார்களும் உள்ளது பட்டப்பகலில் கொலை நடந்துள்ளது; போதைப்பொருளை ஆளும் கட்சியினரே கடத்துகின்றனர்! இதையெல்லாம் பேசக் கேட்டால் அனுமதி தர மறுக்கின்றனர்வியாழக்கிழமை எப்படி ஓட்டப் பந்தயத்தில் ஓடுவது மாதிரி சட்டப்பேரவையில் இருந்து ஓடினாரோ, அதே மாதிரி மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதல் போட்டியில் ஒப்புவிப்பது மாதிரி பஞ்ச் டயலாய் பேசி சினிமாவில் பேசுவது மாதிரி பேசியிருக்கிறார் முதல்வர் விஜய். இது வெறும் மடைமாற்றும் உத்திதான்  சினிமா வசனங்கள், பஞ்ச் டயலாக், ஆக்ஷனுடன் முதலமைச்சர் பதிலுரை தந்துள்ளார் சட்டமன்றத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் டயலாக்கை பேசிவிட்டு சென்றுள்ளார் முதலமைச்சர் விஜய்        அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?  பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM. எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepar...

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தருமபுரி ரோட்டரி சங்கம் சார்பில் அம்பேத்கார் விருது!!

படம்
தர்மபுரி மாவட்டம்,ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தருமபுரி ரோட்டரி சங்கம் சார்பில் கல்விப் பணி சமூகப்பணி  பேச்சுப் பணி என பல்வேறு பன்முக தன்மை கொண்ட ஆசிரியர் சமூக செயற்பாட்டளர். உறைவாள்  எ.கொ அம்பேத்கார்  அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்ட செய்தியாளர் வே. பசுபதி.

தென்காசியில் நடைபெற்ற 23 வது சப் ஜூனியர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டி!!

படம்
தென்காசி மாவட்டம்,தென்காசியில் நடைபெற்ற 23 வது சப் ஜூனியர்களுக்கான  சாம்பியன்ஷிப் போட்டி 04.09.2026 முதல் 06.09. 2026 மூன்று நாட்கள் நடைபெற்றது. போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இன்ஃபினிட்டி வாரியர்ஸ் அகாடமி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.   12 வயது உட்பட்ட மாணவர்கள் பிரிவில் 34 கிலோ எடை பிரிவில்  நேகன் மணிஷ் பாண்டி தங்க பதக்கமும் 36 கிலோ எடை பிரிவில் வெற்றி ஜெய் வெள்ளி பதக்கமும் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் 60 கிலோ பிரிவில் முகமது சாலிக் தங்கப்பதக்கமும் 64 கிலோ எடை பிரிவில்  விஷ்வா தங்க பதக்கமும் 12 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 39 கிலோ எடை பிரிவில் அனிகா ராஜேஷ் வெங்கல பதக்கமும்,12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான தனித்திறமை பிரிவில் கவிஸ் வெள்ளிபதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். மதுரை மாவட்டம் தமிழக அளவில் ஒட்டு மொத்ததில் 3வது இடம் பிடித்துள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களை மாநிலச் செயலாளர் திரு. ஜான்சன் அவர்களும்,   மேற்பார்வையாளர் தங்கபாண்டியன் அவர்களும்,  மாவட்ட தலைவர் பழனி குமார் கோச் பிரபாகரன் வாழ்த்தினார்கள். தங்கப்பதக்கம் வென்ற ...

நத்தம் அருகே பெண் தூக்குபோட்டு தற்கொலை!!

படம்
நத்தம் அருகே ஏரக்காபட்டியில் சிவரஞ்சனி என்ற பெண் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை- புகாரின் பேரில் நத்தம் போலீசார் விசாரணை. திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

பேர்ணாம்பட்டு பகுதியில் தொடரும் இரவு நேர தொடர் மின்வெட்டு!மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்!! – பொதுமக்கள் கோரிக்கை!!

படம்
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தாலுகாவிற்குட்பட்ட குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தலப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இரவு 9 மணிக்கு மேல் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாகவும், இதனால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இரவு நேர மின்வெட்டால் குடிநீர் விநியோகம், வீட்டு உபயோகப் பணிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பேர்ணாம்பட்டு பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து மின்சாரத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, மின்வெட்டுக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அகில இந்திய மக்கள் மனிதநேய கழக மாநில செயலாளர் அங்காளன் கூறுகையில், “பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின...

விளையாட்டுப் போட்டிக்கு சென்ற மாணவிக்கு கார் மோதி விபத்து கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! -இடுப்பு எலும்பு முறிவு – பாதிக்கப்பட்டவர்கள் ஆசிரியர்கள், கார் ஓட்டுநர் மீது நடவடிக்கை கோரி ஆம்புலன்சில் வந்து ஆட்சியரிடம் மனு!!

படம்
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சதாச்சாரி மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு, தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 7 பேர், கடந்த 25-ம் தேதி ஊசூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சென்றனர். போட்டி முடிந்து திரும்பியபோது சாலையில் வந்த கார் மோதியதில், ரூபிகா என்ற மாணவிக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மாணவிகளுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் செல்லாமல் தனியாக அனுப்பி வைத்ததே விபத்துக்கு காரணம் எனக் கூறி, பாதுகாப்பு அளிக்கத் தவறிய ஆசிரியர்கள் மீதும், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் தாய் தீபிகா, பாதிக்கப்பட்ட மாணவியை ஆம்புலன்சில் அழைத்து வந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தார். மேலும், மாணவிக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்க அரசு உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து தீபிகா கூறுகையில், “விபத்து தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உ...

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திங்கள் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன்,இன்று (07.09.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்கள்.  உடன் மாவட்ட வருவாய் அலுவலர். ந.சரவணன், திட்ட இயக்குநர் வளர்ச்சி முகமை. ச.செல்வராணி,நேர்முக உதவியாளர். பாக்கியலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியர். கீதாலட்சுமி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர். பூமா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர். செந்தில் குமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர். பன்னீர்செல்வம் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.  ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார். 

குடியாத்தம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் சுமார் 183 தூய்மை பணியாளர்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில் குறைந்த அளவிலான சம்பளம் கிடைக்கிறது வாகனம் பழுதாகியிருந்தால் ஓட்டுநரே சரி செய்து கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது சம்பந்தமாக இன்று பிற்பகல் 12 மணியளவில் நகர மன்ற தலைவர். எஸ். சௌந்தரராஜன், நகராட்சி ஆணையாளர். தனலட்சுமி   நகர மன்ற உறுப்பினர். ஜி. எஸ். அரசு, ஒப்பந்ததாரர். சிட்டிபாபு ஆகியோர் தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தை.. நடத்தியதின் பேரில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. குடியாத்தம் செய்தியாளர் கே.வி.. ராஜேந்திரன்.

குடியாத்தம் எல்ஐசி அலுவலகத்தில் நடைபெற்ற புதிய பாலிசி வெளியீட்டு விழா!!

படம்
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் ஆயில் காப்பீட்டுக் கழகத்தின் புதிய பாலிசி வெளியிட்டு விழா ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 70 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதிதாக ஜீவன் ரக்க்ஷா,பீமா பிளாட்டினம் ஆகிய பாலிசிகள் இன்று வெளியிடப்பட்டது. குடியாத்தம் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு முன்னாள் தலைவர் பொகலூர் டி. பிரபாகரன்புதிய பாலிசிகளை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். வேலூர் கோட்ட திட்ட மேலாளர் எஸ். மணிகண்டன் தலைமை தாங்கினார். தென்மண்டல முகவர் சங்க பொதுச் செயலாளர் ஜே கே என் பழனி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வளர்ச்சி அலுவலர் அன்பழகன், அலுவலக ஊழியர்கள் சரவணன் இளங்கீரன் உதவி நிர்வாக அதிகாரிகள் எஸ் சுதாகர் சி சுந்தர்  மற்றும் முகவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். தாக்கம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

குடியாத்தத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம். தமிழ்நாடு . எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சென்னை சார்பாக குடியாத்தம் மார்க்கெட், குடியாத்தம் பழைய  பேருந்து நிலையம் பால்வினை நோய் மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தன்னார்வு தொண்டு நிறுவனம் MSDS மற்றும் குடியாத்தம்   அரசு மருத்துவமனை குடியாத்தம் ஒருங்கிணைத்து நடத்தியது முதல் திரளான மக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு சாரல் கலைக்குழு விழிப்புணர்வு செய்தார்கள். கலை நிகழ்ச்சியை கலந்து கொண்டவர்கள்  J.கோகிலா திட்ட மேலாளலர்(MSDS )J. மீனா நம்பிக்கை மையம் குடியாத்தம் R மோகன் பிரபு Lt K. செம்மலர் ORW (MSDS )அவர்கள் கலந்து கொண்டார்கள். குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

த.வெ.க. கூட்டணியில் இடம் பெறவில்லை இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் திட்டவட்டம்!!

படம்
சென்னை பனையூரில்  உள்ள அலுவலகத்தில் 9 - ந் - தேதி த.வெ.க. கூட்டணி கட்சிகள் கூட்டம் நடக்கிறது த.வெ.க. மூத்த நிர்வாகிகளும் அமைச்சருமான ஆனந்த் ஆதவ்அர்ஜுனா சி.டி.ஆர். நிர்மல் குமார் ராஜ்மோகன் ஆகியோர் நேற்று தங்கள் கூட்டணி கட்சி தலைவர்களையும் நிர்வாகிகளையும் நேரில் சந்தித்தனர் அதன்படி சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று மாநில செயலாளர்கள் வீரபாண்டியன் மற்றும் சண்முகத்தை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள் த.வெ.க. ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தில்  இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்காத நிலையில் 2 - வது கூட்டத்தில் பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது இந்நிலையில் தி.நகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது த.வெ.க. வின் நல்லாட்சி நல்ல திட்டங்களை வரவேற்று ஆதரிப்போம் அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை நாங்கள் ஏற்கவில்லை மக்கள் அதிகாரத்தின் குறியீடாக உள்ள முதலமைச்சர் அமைச்சர்கள் தான் அதிகா...

கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் அடையாளம் தெரியாத 30 முதல் 35 வயது மதிக்கதக்க ஆண் சடலத்தை மீட்ட காவல்துறையினர் !!

படம்
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பாப்பம்பட்டி என்ற இடத்தில் தோட்டத்தில் தகர கொட்டகையில் சடலமாக ஒரு இளைஞர் கிடந்துள்ளார் இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சூலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முதற்கட்ட விசாரணையை துவங்கினர் அதில் அந்த இளைஞரின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொலையானவர் யார்? எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து சூலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இத்தகைய கொலை குற்றங்கள் அதிகரித்து வருகின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற காவலர் நாள்!!

படம்
காவலர் நாள் – விழுப்புரம் மாவட்ட காவல் துரை சார்பில் தமிழக காவலர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 1859-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி மெட்ராஸ் மாகாண காவல் சட்டம் கொண்டுவரப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்ட இரவு பகலாக பணியாற்றும் காவல்துறையினரின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் போற்றும் நாளாக காவலர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட காவல்துறையில், விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் அரா. அருளரசு, IPS., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செ. மதிவாணன், IPS., அவர்கள் வழிகாட்டுதலில், மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர்  ஞானவேல் அவர்கள் கண்காணிப்பிலும், மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தினம்  அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் காவல்துறையினரின் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் போற்றுவதுடன், காவல்துறையின் உன்னத நோக்கங்களை நிலைநிறுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ச...

ஆசிரியர்கள் தின விழா! - ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு!!

படம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு கிராமத்தில் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களை கவுரவிக்கும் விழா நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு-காரப்பட்டு கிராமங்கள் சார்பில்  டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்படம்பர் 5-ந் தேதி ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஆடிட்டர் இராஜீவ்காந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். விழாவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன், ஆசிரியர் பயிற்றுநர் இராமமூர்த்தி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சி பற்றி சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் திருக்குறள் சிறப்பாக வாசித்ததற்காக அவரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர...

ஆசிரியர் நூருல்லாவிற்கு மாணவர் வழங்கிய அன்பின் விருது !!

படம்
மதுரை காந்திபுரத்தில் ஆசிரியர் தின முன்னிட்டு சர்வதேச உதவும் உறவுகள் அறக்கட்டளை மாணவர் தன்னார்வ இயக்கம் சார்பில் மாணவர்களால் ஆசிரியர் நூருல்லாவிற்கு விழாவிற்கு சிறப்பு விருது வழங்க விழா நடைபெற்றது. மாணவர்களின் வாழ்க்கையில் பாடப் புத்தகமாக அறிவைத் தாண்டி பிறருக்கு உதவுவதே உயர்ந்த மனித பண்பு என்ற எண்ணத்தை விதைத்து சமூக நல சொற்களின் அவர்களை ஈடுபடுத்தி வழிகாட்டிய திகழும் ஆசிரியர் நூலாசிரியருக்கு மாணவர்கள் இனைந்து "மாணவர் மனம் கவர்ந்த ஆசிரியர் விருது" வழங்கினார்கள்.   இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள் தலைமை செய்தியாளர் சின்ன தம்பி.

ஸ்ரீ ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற ஏழாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்!!

படம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா வேள்வரைகிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு ஏழாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது இதில் பெரிய மாடு சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பெரிய மாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும்சின்ன மாடு பிரிவில் 36 ஜோடி மாடுகளும் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன. இதில் புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை போன்ற மாவட்டங்களில் உள்ள மாட்டு வண்டி உரிமையாளர்கள் தங்களது மாடுகளை கொண்டு வந்து இந்த பந்தயத்தில் கலந்து கொண்டனர் சாலையில் இருபுறமும் கண்டு ரசித்த ரசிகர்கள் சீறிப்பாய்ந்த மாடுகள் இதில் நானா நீயா என போட்டி போட்டு சென்றனர் இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பணமும் கேடயமும் வழங்கப்பட்டது பாதுகாப்பு பணியை மீமிசல் காவல் துறையினர் மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

மதுரை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்!!

படம்
மதுரை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழக வெற்றிக்கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் எம்.எல். ஏ.காந்திகேயன் அவர்களின் தலைமையில் ஊமச்சிகுளத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விருதுநகர் எம்எல்ஏ செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன், மாவட்ட இணை செயலாளர் வக்கீல் கார்த்திக், துணைச் செயலாளர் ரோஷன், சந்திரபாண்டியன், இதனுடன் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியம், பகுதி, வட்ட மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இரணியம் சுந்தரராஜன்பட்டி சௌ.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் கிளை கழக நிர்வாகிகள் சுரேஷ், நாகராஜன், பால்பாண்டி, ஜெகன், தேவராஜ், பாலா மற்றும் இரணியம் ஊராட்சி கிராம பொதுமக்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு!!

படம்
சென்னையை அடுத்த காட்டங்குளத்தூர் பகுதியில் அமைச்சர். ஜெகதீஸ்வரியின் கார் மோதி 26 வயது இளைஞர் உயிரிழப்பு. ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் வந்த இறையன்பு என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை அமைச்சர். ஜெகதீஸ்வரி சென்னை வந்து கொண்டிருந்தார். அமைச்சர் அரசு வாகனத்தில் வந்துள்ளார்; அவருக்கு பின்னால் எஸ்கார்ட் வண்டியும்; அதற்கு பின்னால் அவரது சொந்த வாகனமும் வந்துள்ளது. காட்டாங்குளத்தூர் சந்திப்பில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த காரான மாருதி எர்டிகா கார் மோதி இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு. மறைமலைநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த காரை பறிமுதல் செய்து விசாரணை. திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரைவீரன்.

சட்டப்பேரவைக்கு வருகை தந்தார் எதிர்க்கட்சித் தலைவர். உதயநிதி ஸ்டாலின்!!

படம்
பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தல். விவாதம் வேண்டும்! தமிழ்நாட்டில் தொடரும் கொலை சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக உறுப்பினர்கள் அமளி. தலைமை செய்தியாளர் சின்னதம்பி.

திண்டுக்கல் அருகே டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது!!

படம்
திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி மொண்டியபட்டியை சேர்ந்த டிரைவர் கரண்ராஜ்(27) இவர் கடந்த 31-ம் தேதி கை கால்கள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் குழந்தைப்பட்டியை சேர்ந்த குமரேசன், யோகேஷ், சரவணபாண்டி ஆகிய 3  பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய தம்பகுளத்துபட்டியை சேர்ந்த முருகன் மகன் சந்துரு(எ) முருகன் (25) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் விஜய் வருகை!!

படம்
சட்டப்பேரவை கூடியது..  காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது முதலமைச்சர். விஜய் பதிலுரை இன்று பதிலளிக்கும் விஜய்! தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முதலமைச்சர் விஜய், ஊதியம் வழங்கல் திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார்   எம்.எல்.ஏ.க்களுக்கு கார்கள் வழங்க உள்ள நிலையில் ஓட்டுநர் ஊதியம், எரிபொருள் செலவிற்கான தொகையை வழங்க நடவடிக்கை.  தலைமை செய்தியாளர் சின்ன தம்பி.

பிரபல பெண் டிவி தொகுப்பாளினி சாரா கலீஃபாவிற்கு எகிப்து நீதிமன்றம் அதிரடி தூக்கு தண்டனை 750 கிலோ போதைப்பொருள் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!!

படம்
🔵 போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் கும்பல். எகிப்து நாட்டில் தொலைக்காட்சி குற்றப்புலனாய்வு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிப் புகழ்பெற்ற 39 வயதான பிரபல டிவி தொகுப்பாளினி சாரா கலீஃபா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சட்டவிரோதமாக போதைப்பொருட்களைத் தயாரித்து விநியோகம் செய்ததாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்து அடுக்குமாடி குடியிருப்புகளை ரகசிய ஆய்வகங்களாக மாற்றி போதைப்பொருள் தயாரித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.   🔵 750 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல். காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் இந்த கும்பலிடமிருந்து சுமார் 750 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மற்றும் அதற்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களிடமிருந்து அனுமதியற்ற துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டு மொத்தம் 28 பேர் மீது கெய்ரோ குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது.   🔵 12 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி அதிரடி உத்தரவு. இந்த வழக்கை விசாரித்த கெய்ரோ குற்றவியல் நீதிமன்ற...

சட்டப்பேரவையில் இன்று பதிலளிக்கிறார்!- முதலமைச்சர். விஜய்!!

படம்
வியாழக் கிழமை நடந்த காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று பதிலளிக்கிறார் முதலமைச்சர் விஜய்!        பேரவையில் இன்று 3 நாட்கள் விடுமுறைக்குப் பின் இன்று கூடுகிறது சட்டப்பேரவை. காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை அளிக்கிறார். தலைமைச் செய்தியாளர் சின்னத்தம்பி.