இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணியில் நடைபெற்ற கார்த்திகை பூஜை!!

படம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி  மாத கார்த்திகை பூஜை நடைபெற்றது. இதில் முருகப் பெருமானுக்கு பால், பழம்,பன்னீர், சந்தனம், விபூதி, உள்பட 16 வகையான அபிஷேகமும், அலங்காரமும் தீபாராதனைகளும் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதைபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள் பிரகாரத்தில் உள்ள,  தண்டபாணி சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் ராப்பத்து உற்சவம்!!

படம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் ராபத்து உற்சவம் இரண்டாம் திருநாளில் எழுந்தருளிய பெரிய பெருமாள் ஆண்டாள் ரெங்க மன்னார் ஆகியோர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்  அனைத்து வைணவ கோயில்களிலும் ராபத்து உற்சவத்தின் போது இரு புறமும் ஸ்ரீதேவி பூதேவி இருக்க நடுவில் வீற்றிருக்கும் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி காட்சியளிப்பார்கள் .ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் வலது புறம் ராஜ அலங்காரத்தில் பெரிய பெருமாள் இடதுபுறம் ராஜ அலங்காரத்தில் ரங்க மன்னார் வீற்றிருக்க நடுவில் ஸ்ரீ ஆண்டாள் காட்சியளிக்கிறார் 48 உற்சவத்தில் 10 நாட்களும் இரவு முழுவதும் பெரிய பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் தங்கமன்னாருக்கு திருமஞ்சனம் திருமொழி பாடல்கள் வியாக்கியான பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.  தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

மதுரை:எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு குடிநீர் வழங்க, ரூ.8.40 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிவால் வாரியம் டெண்டர் வெளியீடு!!

படம்
மதுரை மாவட்டம், தோப்பூரில் அமைக்கப்பட்டுவரும் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு குடிநீர் வழங்க, ரூ.8.40 கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பை ஏற்படுத்த தமிழ்நாடு குடிநீர் வடிவால் வாரியம் டெண்டர் வெளியீடு! வைகை ஆற்றை நீர் மூலமாகக் கொண்டு, செயல்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டம் மூலம் எய்ம்ஸ் வளாகத்திற்கு தினசரி 2.61 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

குடியாத்தம் அடுத்த பரதராமி சோதனை சாவடி அருகே 75 கிலோ கஞ்சா பறிமுதல். இருவர் கைது!!

படம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கடத்திவரப்பட்ட 75 கிலோ கஞ்சா பறிமுதல்- இருவரை கைது செய்து பரதராமி போலீசார் விசாரணை! வேலூர் மாவட்டம், குடியாத்தம்,, ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திர தமிழக எல்லையில் உள்ள பரதராமி சோதனை சாவடியில் பரதராமி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர் அப்போது சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அதில் 75 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது இதனையடுத்து 75கிலோ. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது35)மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 44) ஆகிய இருவரையும் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் மேற் கொண்ட விசாரணையில் ஒரிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகத் தில் விற்பனை செய்வது தெரியவந்தது இதனையடுத்து இருவரையும் கைது செய்த பரதராமி போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.

தேனி மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை!!

படம்
தேனி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலையில் சாகசம் செய்வது மற்றும் குடிபோதையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்குவது குற்றமாகும் மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும், வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு ஓட்டுனர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம் என தேனி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

பயனர்கள் கவனத்திற்கு எச்சரிக்கை!!

படம்
2026 புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் WhatsApp-ல் APK பைல்களுடன் வரும் மெசேஜ்களை பயனர்கள் ஓப்பன் செய்ய வேண்டாம்.  Happy_New_Year.apk என்ற பெயரில் அனுப்பப்படும் மெசேஜ்களை ஒப்பன் செய்தால் உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

புத்தாண்டை ஒட்டி டெலிவரி ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நிறுவனங்கள்!!

படம்
டெலிவரி ஊழியர்களுக்கு தற்காலிக ஊக்கத் தொகை உயர்வு! புத்தாண்டை ஒட்டி ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற GIG நிறுவனங்கள் அதன் டெலிவரி ஊழியர்களுக்கு தற்காலிக ஊக்கத் தொகை உயர்வை அறிவித்துள்ளன. இன்று மாலை 6 - நள்ளிரவு 12 மணி வரையான பீக் ஹவர் காலத்தில், டெலிவரி செய்யப்படும் ஆர்டர்களைப் பொறுத்து ஒரு ஆர்டருக்கு ரூ.150 வரை ஊக்கத்தொகை கிடைக்கும் என்றும் 6 மணி நேரத்தில் ரூ. 3,000 வரை சம்பாதிக்கலாம் எனவும் நிறுவனங்கள் கூறியுள்ளன. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

முதன்முறையாக கால்நடை மருத்துவப் படை!!

படம்
குடியரசு தின விழாவில் இந்திய ராணுவத்தின் கால்நடை மருத்துவ படையினரின்( RVC) அணிவகுப்பு நடைபெற உள்ளது. தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி சுற்றுலா மையத்திற்கு நாளை வரவேண்டாம் என வனத்துறை அறிவிப்பு!!

படம்
நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் உள்ள சுற்றுலா மையம் நாளை ( ஜனவரி 1 )ஒரு நாள் மூடல் சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என அறிவிப்பு அங்குள்ள பவானி அம்மன் கோவில் விழாவை ஒட்டி உள்ளூர் மக்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்பதால் வனத்துறை நடவடிக்கை  தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற கோரமண்டல் நிர்வாக இயக்குனர் மற்றும் பி.ஆர்.ஓ அபூபக்கர்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்.ஆர்.காந்தி அவர்களை கொரமண்டல் கம்பெனி Genaral manager ராமநாதன் அவர்களும் PRO.அபுபக்கர் அவர்களும்  இணைந்து சால்வை அணிவித்து 2026  டைரி வழங்கி வாழ்த்து பெற்றார்கள்.இதில்மாவட்ட மாணவரணி அமைப்பாளர். எஸ்.வினோத்.MC, ரவி.ExMC உடனிருந்தனர். ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

வாழை இலை வரத்து குறைவானதால் இலை கட்டு விலை உயர்வு!!

படம்
தேனி மாவட்டத்தில் வாழை இலையின் வரத்து குறைவானதால் வாழை இலை கட்டு விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, அணைக்கரைப்பட்டி, குள்ளப்புரம் பெரியகுளம்  சீலையம்பட்டி சின்னமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வாழை இலை அனுப்பப்படுகிறது. தற்போது மாலை அணிந்து செல்லும் பக்தர்களுக்கு வாழை இலையின் பயன்பாடு தேவை அதிகரித்துள்ளதாலும் மேலும் விசேஷ தினங்கள் வருவதாலும் வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளது. வாழை: இலையின் வரத்து குறைவானதால் வாழை இலை கட்டு இரண்டு மடங்காக விலை உயர்ந்துள்ளது மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 800 ரூபாய்க்கு விற்பனையானது தற்போது இரண்டு மடங்காக உயர்ந்து 1800 முதல் 2200 வரை விற்கப்படுகிறது. தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

பணிநிறைவு பாராட்டு விழா!!

படம்
ராணிப்பேட்டைமாவட்டம்,இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து இன்று (31.12.2025) பணிமூப்பு அடைந்து ஓய்வு பெறும் உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால், இ.கா.ப.அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பணி நிறைவு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்! அய்மன் ஜமால் IPS பங்கேற்பு!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில்  வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.   இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 21 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் இக்குறை தீர்ப்பு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் உடன் இருந்தனர். ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

மன்னீஸ்வரர் அருந்தவ செல்வி தேர் திருவிழா!!

படம்
கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கர்நாடகா மற்றும் அவிநாசியை இணைக்கும் முக்கிய போக்குவரத்து மையமாக அன்னூர் உள்ளது; பழங்காலத்தில் மன்னீயூர் அல்லது அன்னியூர் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதிக்கு வளமான வரலாறு உண்டு மேலும் இங்குள்ள வன்னி மரத்தின் அடியில் கண்டெடுக்கப்பட்ட சுயம்புவாக உருவெடுத்ததாக கருதப்படுகிறது. பழமையான, அன்னூர் மன்னீஸ்வரர் கோவில், 26ம் ஆண்டு தேர்த் திருவிழாவில், சின்னம்மன், பெரியம்மன் கோவிலில், கிராம தேவதை வழிபாடு நடந்தது. இரவு வாஸ்து சாந்தி, கிராம சாந்தி கோவிலில் நடந்தது. கணபதி ஹோமம் நடந்தது கொடிக்கம்பத்தில் நந்தி பகவான் உருவம் அச்சிடப்பட்ட வெள்ளை நிற கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தின் போது பக்தர்கள் மன்னீஸ்வரப் பெருமானுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர், கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். இதைத்தொடர்ந்து சுவாமி திருவீதி உலா, முக்கிய வீதிகளின் வழியாக நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், அறங்காவலர் குழு தலைவர். நடராஜன், அறங்காவலர்கள் மணி, யசோதா, சங்கர், பேரூராட்சி தலைவர். பரமேஸ்வரன், துணைத் தலைவர். விஜ...

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர்கள் குழு நியமனம்!!

படம்
மதுரை மாவட்டம்,மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ருக்மணி பழனிவேல்ராஜன், மீனா அன்புநிதி, பி.கே.எம். செல்லையா, டாக்டர் சீனிவாசன், காந்தி நகர் சுப்புலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வ்தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு நாள் காட்டி வழங்கிய எஸ். ஜி. சி பெருமாள்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், 2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழகம் சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகளுக்கு 2026- ஆம் ஆண்டிற்கான நாள்காட்டி, இனிப்பு மற்றும் பரிசு பொருட்களை எஸ். ஜி. சி பெருமாள் அவர்கள் வழங்கினார்.  இதில் அவைத்தலைவர். பா. செ நரசிம்மன், ஒன்றிய பொருளாளர். ரமேஷ், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள். அ. சீனிவாசன், வழக்கறிஞர் எம். தமின் அன்சாரி, சாவித்திரி சுந்தரவடிவேல், மாவட்ட பிரதிநிதிகள. சி.ஜி. சண்முகம், கா.தே. தனசேகரன்,சுரேஷ், தசரதன், ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள். கலைஞர் தாசன், மணிகண்ட கருணாநிதி, அகவலம் நரசிம்மன், கிளை நிர்வாகிகள். ஜெயக்குமார், தமிழரசு, அருள், பெருமாள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

வீடு தோறும் மக்கள் விரும்பும் முதல்வர் உங்கள் விஜய் சிறப்பு முகாம்

படம்
தேனி மாவட்டம்,கண்டமனூரில் தமிழக வெற்றிக்கழகம் கிளையின் சார்பில் கண்டமனூர் தேர்தல் வாக்குச்சாவடி எண் 151,152 ஆகிய பகுதிகளில் " வீடு தோறும் மக்கள் விரும்பும் முதல்வர் உங்கள் விஜய் " என்ற சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தமிழக வெற்றிக்கழகம் கண்டமனூர் கிளைக்கழக 2026 ஆம் ஆண்டிற்கான காலண்டர் அப்பகுதி மக்களுக்கு பூத் எண் :  151 ல் கண்டமனூர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இணைச் செயலாளர்.C.ராஜேஸ் தலைமையிலும்  பூத் எண் :152 ல் கண்டமனூர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கிளைச் செயலாளர் திரு.M.P.நாகராஜன் தலைமையிலும் இன்று வழங்கப்பட்டது. உடன் கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஐமன் ஜமால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் 31-12-2025 மாலை முதல் 01-01 -2026 வரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . வழிபாட்டுத்தளங்கள் பேருந்து நிலையங்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணி கவனம் செலுத்தி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள் மூலமாக கண்காணிக்கப்படும். புத்தாண்டு அன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியவற்றினை தடுக்க மாவட்ட முழுவதும் 37 இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து களை  காவல் குழுவும். குற்ற நடவடிக்கைகளை படுக்க சாதாரண உடையில் காவல் குற்றப்பிரிவு பணிப்படையும், பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத செயல்கள் நடைபெறாத வண்ணம்...

பத்திரிக்கை உலக ஜாம்பவான் டாக்டர்.சிவதமிழவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!

படம்
டிசம்பர். முப்பது - புதிய திசைகாட்டும் விடிவெள்ளி!ஆண்டு முடியும் தருணத்தில் அறிவாலே எமை ஆளும் அன்புத் தலைவா!உங்கள் பாதச்சுவடு பற்றி பயணம் தொடர்வோம்!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பனியும், மழையும் நனைக்கும் டிசம்பரில்!.. பரவசம் ததும்பும் ஒரு பிறந்தநாள்!மார்கழி மாதத்துக் காலை நேரத்துப் புத்துணர்வாய் வந்த தலைமை நீரே!மக்கள் மனங்களில் இடம்பிடித்தவரே மண்ணின் நலனைத் தன் மூச்சாய்க் கொண்டவரே! சொன்னதைச் செய்யும் உங்கள் துணிவுதொடரட்டும். உங்கள் சீரிய பணிவு! ஆண்டின் இறுதி நாளில் அவதரித்த அக்கினிப் புயலே!நீதியை நிலைநாட்ட வந்த நிமிர்ந்த கொள்கையனே!மக்கள் நலன் ஒன்றே மூச்சாய் கொண்ட தலைவனுக்கு என் சிரம் தாழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!டிசம்பர் 30...சாதனை நாயகனின் சகாப்தம் தொடங்கும் நாள்!தலைவா, நீடூழி வாழ்க!   இலட்சியக் கனவுகள் நனவாகட்டும் வெற்றிகள் உங்கள் நிழலாகட்டும்!ஆரோக்கியமும் அன்பும் சூழ்ந்திட இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அன்புடன்.  சின்னத்தம்பி. தென் மண்டல செய்தியாளர்.

அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!!

படம்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஸ்ரீ கலியுக வரத ஐயப்பன் கோவில் பூக்குழி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. மஞ்சு ஆற்றகரையிலிருந்து சக்தி கிரகம் அழைத்து வரப்பட்டு பிரம்மாண்ட அக்கினி குண்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரணம் ஐயப்பா என்று கோஷத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்  தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

தமிழ்நாடு 2026ம் ஆண்டுக்கான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்களுக்கான பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு!!

படம்
தமிழ்நாடு 2026ம் ஆண்டுக்கான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்களுக்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு ஆயுதப்படை டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக மகேஸ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: 1. மகேஸ்வர் தயாள் - சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம் 2. சந்தீப் மிட்டல். 3. பி.பாலநாகதேவி- பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம் 4. டி.எஸ்.அன்பு- சைபர் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம் 5. பிரேம் ஆனந்த் சின்ஹா- ஆவடி போலிஸ் கமிஷனராக நியமனம். 6. தீபக் எம்.தாமோர்- மத்திய அரசு பணிக்கான ஏடிஜிபியாக நியமனம். 7. செந்தில்குமார்- தலைமையிட ஏடிஜிபியாக நியமனம். 8. அனிசா உசேன்- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எத...

ஒரே அட்ரஸில் 93 பேருக்கு வாக்கு!!

படம்
தமிழகத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், தேனி மாவட்டம், முந்தல் கிராமத்தை சேர்ந்த 93 பேருக்கு ஒரே வீட்டு முகவரி பதிவாகியிருந்ததால் அதிர்ச்சி! இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கவே, 93 பேரும் ஒரே வார்டை சேர்ந்தவர்கள் என்பதால், அந்த வார்டு எண் வீட்டு எண்ணுக்கு பதிலாக அனைவருக்கும் பதிவாகி இருப்பதை SIR சரிபார்ப்பு அலுவலர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து, படிவம் 8-ஐ பயன்படுத்தி தவறை திருத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

ராணிப்பேட்டையில் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர். மோகன்ராஜ் , மாவட்ட செயலாளர். வைத்தியநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றிய மாநில செயலாளர். சுப்பிரமணியன் , கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர். சரவணன் , துப்புரவு பணி மேற்பார்வையாளர் சங்க மாநில பொதுச் செயலாளர். உமா சங்கர். ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் அரசு துறை அலுவலர்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்கள் அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர். ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சிசிடிவி கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையினை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை துணைத்தலைவர்!!

படம்
விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சிசிடிவி கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் விழுப்புரம் சரக காவல் துறை துணைத்தலைவர் இ.எஸ். உமா முன்னிலையில் இன்று (30.12.2025) திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்ததாவது: விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் விழுப்புரம் நகரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும், வாகன ஓட்டிகளை கண்காணிக்கவும், மூன்றாம் கண் எனப்படும் CCTV கண்காணிப்பு கேமராக்கள், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரிலிருந்து மேற்கு காவல் நிலைய நான்கு முனை சந்திப்பு, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், பானாம்பட்டு சந்திப்பு வழியாக கோலியனூர் கும்பகோணம் சாலை நான்கு முனை சந்திப்பு வரை (10 KM), விழுப்புரம் அண்ணாமலை ஹோட்டல் புறவழிச்சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையம், தந்தை பெரியார் நகர் வழியாக ஜானகிபுரம் புறவழிச்சாலை வரை (8 KM) என மொத்தம் 18 கி.மீ தொலைவில் 14 அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட CCTV கேமராக்கள் உட்பட...

ஆவிச்சிபட்டி பகுதியில் உயிருடன் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு!!

படம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள ஆவிச்சிபட்டி பாண்டியன் நகர் பகுதியில் உள்ள சின்னழகு என்பவருக்கு சொந்தமான புளியந்தோப்பில் மலைப் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதைக் கண்ட அப்பகுதியினர் நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு நிலைய  உதவி அலுவலர். அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் குழு சென்று ஊர்ந்து கொண்டு சென்ற மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினர் ஒப்படைத்தனர். அதை அவர்கள் கரந்தமலை மீது உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர். திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு!!

படம்
தேனி மாவட்டம், அனுமந்தம்பட்டி பேரூராட்சியில் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர், பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் என அனைத்து மன்ற உறுப்பினர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

நத்தத்தில் அதிகாரிகளுக்கு எதிராக பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம்!!

படம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சட்டமன்ற தொகுதி பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர். முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பிரச்சார பிரிவு தலைவர் பாண்டியராஜன்,மாவட்ட தலைவர் அருண், தொகுதி பொறுப்பாளர் சொக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பணியாளர்களை அனுப்பிய ஊரக வளர்ச்சித்துறை அதிகாரியை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டது. ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

நத்தத்தில் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த பாம்பு!!

படம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அண்ணா நகரைச் சேர்ந்த சேக்முஜிபுர் ரகுமான் என்பவர் நத்தம் பேருந்து நிலையம் எதிரே(பல்பொருள்அங்காடிக்குள்)டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில், செவ்யாய்கிழமை அவரது கடைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து சென்றது. இதைப் பார்த்த கடை ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். உடனடியாக நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து விரைந்து வந்த சிறப்பு நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கடையில் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்கில் பதுங்கியிருந்த பாம்பை சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின் உயிருடன் பிடித்தனர். பிடிபட்ட பாம்பு சுமார் 4 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் இனத்தைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது. பின்னர், அப்பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

நத்தம் வேணுகோபாலசாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!!

படம்
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் கோவில்பட்டி அக்ரஹாரத்தில் உள்ள வேணுகோபாலசாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை  காலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.  இதையொட்டி சுவாமிக்கும், பாமா ருக்குமணி தேவியருக்கும் 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரம், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து கோயிலில் உள்ள விநாயகர், வாராஹி அம்மன், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

இயற்கை வேளாண்மை பற்றியும் பஞ்சகவ்வியம் தயாரிப்பு முறை பற்றியும் வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம் !!

படம்
உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்ப கல்லூரி இளநிலை இறுதியாண்டு மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தில் உசிலம்பட்டியில் பயிற்சி செய்து வருகின்றனர். உசிலம்பட்டி அருகே இடையப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக இயற்கை வேளாண்மையை பற்றியும் பஞ்சகவ்வியம் தயாரிக்கும் முறை பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர் .வேளாண் கல்லூரி மாணவர்கள் தர்ஷன், அருண்குமார் கார்மெலின், லித்திக் ரோஷன், கதிரவன், ஸ்ரீகாந்த் ஆகியோர் விவசாயிகளுக்கு செயல்முறையில் விளக்கினார்கள். தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

தேஞ்சிட்டு, பூஞ்சிட்டு ,தட்டான் சிட்டு,நடுமாடு, பெரிய மாடு மாட்டு வண்டி! எல்கைபந்தயம் !!

படம்
தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள கோட்டூரில் ஸ்ரீ கோபிநாதசுவாமி கோவில் வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழா மற்றும் திமுக கழக மாண்புமிகு தமிழக துணை முதல்வர்.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.  இந்த பந்தயத்தை பாராளுமன்ற உறுப்பினர்.எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் துவங்கி வைத்தார். மேலும் திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த மாட்டு வண்டி பந்தயம் கோட்டூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் டொம்புச்சேரி வரை நடைபெற்றது இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஜோடி மாட்டு வண்டிகள் பங்கு கொண்டனர். மாட்டுவண்டி பந்தயத்தில் எல்கை நோக்கி சீறிப்பாயும் மாடுகளை உற்சாகப்படுத்தும் விதமாக சாலைஓரங்களில் இரு புறங்களிலும் உள்ள பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரப்படுத்தி உற்சாகப்படுத்தினார்கள் இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு ,தேன்சிட்டு பூஞ்சிட்டு, நடுமாடு ,பெரிய மாடு என ஏழு பிரிவுகளில் 200க்கும் மேலான ஜோடி மாடுகள் கலந்து கொண்டனர் .இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வெற...

திருத்தணி தாக்குதல் - நடந்தது என்ன..? - ஐஜி விளக்கம்!!

படம்
ரயில் பயணத்தில் சாதாரணமாக ரஜ் பார்த்ததை ‘முறைத்து ரிக்கிறாயா?' என ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதல் நடந்துள்ளது வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவர்கள் தாக்கவில்லை. பட்டாக்கத்தியை சிறார்கள் அவர்களது வீட்டில் இருந்து எடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. தொடர்ந்து விசாரணையும், ஆய்வும் நடைபெற்று வருகிறது. கூர்நோக்கு இல்லத்தில் 3 சிறார்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், சிறார் நீதிக் குழுவின் அறிவுறுத்தலின்படி ஒருவரை மட்டும் பெற்றோரிடம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்துள்ளோம். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

காஞ்சிபுரத்தில் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அமைச்சர்.ஆர். காந்தி!!

படம்
காஞ்சிபுரம் மாவட்டம்,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.  உடன்மாவட்டஆட்சித்தலைவர்.கலைச் செல்வி மோகன், இ., இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர். சி.வி.எம்.பி.எழிலரசன்,  காஞ்சிபுரம்: மாநகராட்சி மேயர். எம்.மகாலட்சுமியுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுலைவர்.மலர்க்கொடிகுமார் குன்றத்தூர் ஒன்றியக் குழுத்தலைவர்.சரஸ்வதிமனோகரன் ஆகியோர் உள்ளனர். ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

மாந்தாங்கல் ஸ்ரீ பூமி நிலா சமேத ஶ்ரீ ரங்கநாதர் பெருமாள் ஆலய வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் அமைச்சர். ஆர். காந்தி சாமி தரிசனம்!!

படம்
இராணிப்பேட்டை மாவட்டம்,மாந்தாங்கல் ஸ்ரீ பூமி நிலா சமேத ஶ்ரீ ரங்கநாதர் பெருமாள் ஆலய வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்.ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.  இதில் பாபு மாவட்ட மாணவரணி அமைப்பாளர். எஸ்.வினோத்.MC நகர துணை செயலாளர். ஏர்டெல் குமார்.MC தொழிலதிபர் PRC.ரமேஷ் N.B.சங்கர்வழக்கறிஞர். சிவகுமார் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். பி.யுவராஜா மற்றும் திமுக கழகத்தினர் உடனிருந்தனர். ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

பொங்கல் பரிசு தொகுப்பு!!

படம்
தமிழகத்தில் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி, சர்க்கரை ஒதுக்கீடு! 1,77,22,000 வேட்டி, 1,77,64,000 சேலை கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேஷன் கடைகளுக்கு நகர்வு; ரொக்கம், கரும்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு! தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெயர் மாற்றம் – நிதி வெட்டு மத்திய அரசை கண்டித்து இராணிப் பேட்டையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்!!

படம்
இராணிப்பேட்டை, மாவட்டம்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி, திட்டத்திற்கான நிதியை வெகுவாகக் குறைத்துள்ள மத்திய அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகளை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNRDOA) சார்பில், மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகர உண்ணாவிரதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இராணிப்பேட்டையில் இன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNRDOA), இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் – கு.புஷ்பராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNRDOA), இராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் – பா.உமாபதி வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNRDOA), இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் – ரா.பூபதி கோரிக்கை விளக்க உரையாற்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றம், நிதி வெட்டு மற்றும் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் நிதிச்சுமை ஆகியவற்றை கடுமையாக கண்டித்...