கோவை சரவணா நகர் பகுதியில் உள்ள, பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் சார்பாக, நடைபெற்ற முதலாம் ஆண்டு ஸ்தோத்திர கூட்ட நிகழ்ச்சி, கோவை சாய்பாபாகாலனி பகுதியில் சீறும் சிறப்புமாக நடைபெற்றது!!
கோவை சரவணா நகர் பகுதியில் பெத்தேலஹேம் ஜாய் ஜெபவீடு எனும் தேவாலயம் அமைந்துள்ளது இந்த தேவாலயத்தின் முதலாம் ஆண்டு ஸ்தோத்திர கூட்ட நிகழ்ச்சி
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. பெத்தேல் ஜாய் ஜெபவீட்டின் தலைமை போதகர் ஜான் பீட்டர், உதவி போதகர் ஜெயக்குமார், தலைமை மூப்பர் சுத்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிறிஸ்தவ துதி பாடல்கள் பாடியும், ஆராதனை கீதங்கள் பாடியும், குழந்தைகளின் நடனநிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும் பைபிளில் எழுத பட்ட வசனங்களை எடுத்து கூறியும், விழா சீறும் சிறப்புமாக நடைபெற்றது.
முதலாம் ஆண்டு ஸ்தோத்திர கூட்ட நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து அனைவருக்கும் இரவு உணவுடன் விழா நிறைவு பெற்றது இந்த நிகழ்ச்சியில், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவன தலைவரும், சமூக ஆர்வலருமான நோட்டரி வழக்கறிஞர் புஸ்பாணந்தம், ஜெபா, வர்ஷா, வர்ஷினி, அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்ற ஓட்டுநர் கிருஷ்ணகுமார், பாஸ்டரம்மா ஜாய்ஸ், செளந்தரராஜன், ரிஸ்மா வர்ஷினி, ராஜேஷ், போதகர் பாபு, போதகர் கனகராஜ், சகோதரி பெரில், இவாஞ்சலின் ஜான் ஜோஸ்வா, சகோதரி கெட்ஸி, போதகர் மோஸஸ் ஜெயக்குமார், அரசு போக்குவரத்து ஜெபக்குழு சார்பாக ராஜா நம்பி, துரைராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.



கருத்துகள்
கருத்துரையிடுக