காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்! - முதலமைச்சர். விஜய்!!

காவல்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது; விரைவில் நிரப்பப்படும்.

மாணவர்கள் குற்றத்தில் ஈடுபடாத வகையில் வழிநடத்துவது நம் பொறுப்பு.

 சமூக சூழல், குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு காரணமாக இளம் வயதினர் குற்றத்தில் ஈடுபடுகின்றனர்.

இதற்கெல்லாம் யார் மீது பழிபோடலாம் என எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர்.

அவர்களுக்கு இணையாக 2021-25 வரை நடந்த குற்றச்சம்பவங்களை குறிப்பிட மனம் இடம் தரவில்லை.

கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இதே சட்டசபையில் பல அவமானங்களை சந்தித்தார்.

இனி பெண்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

 தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறாக பேச வேண்டாம், தமிழகத்தில் ஆபாச பேச்சு நதியாக ஓடுகிறது.

காவல்நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரண நிகழ்வு அல்ல, அது காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும்.

மக்கள் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரையும் குடும்ப நலனையும் பொருட்படுத்தாமல் காவலர்கள் பணியாற்றுகின்றனர்.

 குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடக்கிறது, அதனால் குற்றம் நடக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பது அவசியம்.

 காவலர்கள் எந்த இடையூறும் இன்றி நேர்மையாக பணி செய்யும் சூழலை இந்த அரசு உருவாக்குகிறது.

சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பனாக இருக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவலர்கள் அச்சமின்றி நேர்மையாக பணி செய்ய முன்னுரிமை அளிக்கப்படும்.

எந்த அரசியல் தலையீடும் காவல்துறை செயல்பாட்டில் இருக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளேன்.

போதை கலாசாரத்தை கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 போதைப்பொருள் தடுப்பு படை தனியாக அமைக்கப்பட்டு, இதுவரை போதை எனும் மரத்தின் சில கிளைகளை மட்டுமே வெட்டியுள்ளோம்.

போதை எனும் முழு மரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும், அதற்கு 100 நாட்கள் போதாது.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!