பிரபல பெண் டிவி தொகுப்பாளினி சாரா கலீஃபாவிற்கு எகிப்து நீதிமன்றம் அதிரடி தூக்கு தண்டனை 750 கிலோ போதைப்பொருள் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!!

🔵 போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் கும்பல்.

எகிப்து நாட்டில் தொலைக்காட்சி குற்றப்புலனாய்வு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிப் புகழ்பெற்ற 39 வயதான பிரபல டிவி தொகுப்பாளினி சாரா கலீஃபா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சட்டவிரோதமாக போதைப்பொருட்களைத் தயாரித்து விநியோகம் செய்ததாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்து அடுக்குமாடி குடியிருப்புகளை ரகசிய ஆய்வகங்களாக மாற்றி போதைப்பொருள் தயாரித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  

🔵 750 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்.

காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் இந்த கும்பலிடமிருந்து சுமார் 750 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மற்றும் அதற்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களிடமிருந்து அனுமதியற்ற துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டு மொத்தம் 28 பேர் மீது கெய்ரோ குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. 

 🔵 12 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி அதிரடி உத்தரவு.

இந்த வழக்கை விசாரித்த கெய்ரோ குற்றவியல் நீதிமன்றம், கிராண்ட் முஃப்தியின் மார்க்க ஆலோசனையைப் பெற்று இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்பட்ட டிவி தொகுப்பாளினி சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் குற்றமற்றவர்கள் என 7 பேர் விடுவிக்கப்பட்டனர். பிரபல டிவி தொகுப்பாளினிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் எகிப்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!