ரெட்டியார்சத்திரம் அருகே மண் திருட்டில் ஈடுபட்ட 3 டிப்பர் லாரிகள், 1 பொக்லைன் இயந்திரம் பறிமுதல்!!

திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் மாங்கரை குளத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மண் திருடும் கும்பல் மண் திருடி காமாட்சிபுரம் பகுதியில் தனியார் தோட்டத்தில் குவித்து வைத்து தனியார் செங்கல் சூளை மற்றும் வீடு கட்டும் நபர்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது மண் திருட்டில் ஈடுபட்ட கும்பல் தப்பி ஓடிவிட்டது உடனடியாக போலீசார் மண் திருட்டில் ஈடுபட்ட ஒரு பொக்லைன் இயந்திரம் 3 டிப்பர் லாரிகள் ஆகியவற்றில் பறிமுதல் செய்து

மண் திருடும் கும்பலை சேர்ந்த அருண்குமார், கோபால், கிருஷ்ணன், முத்துராம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!