நத்தம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழா!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா  கொண்டாடப்பட்டது நிர்வாகவியல் துறைத் தலைவர்  இராம நாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் யாழ் சந்திரா அவர்கள் தலைமை தாங்கி விழா உரையாற்றினார். அப்போது டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இதில்  ஆங்கிலத்துரை தலைவர்  திருமகள் மற்ற துறை சார்ந்த பேராசிரியர்களும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முத்தையா நன்றி கூறினார்.  முன்னதாக இந்நிகழ்ச்சியில் வணிக நிர்வாகவியல் துறை சார்ந்த மாணவர்கள் கல்லூரி சந்தை நடத்தினர்.

படவிளக்கம்: நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் கல்லூரி சந்தை அமைத்த மாணவர்களிடம்  முதல்வர் யாழ் - சந்திரா பொருட்கள் வாங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!