கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் அடையாளம் தெரியாத 30 முதல் 35 வயது மதிக்கதக்க ஆண் சடலத்தை மீட்ட காவல்துறையினர் !!

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பாப்பம்பட்டி என்ற இடத்தில் தோட்டத்தில் தகர கொட்டகையில் சடலமாக ஒரு இளைஞர் கிடந்துள்ளார் இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சூலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முதற்கட்ட விசாரணையை துவங்கினர் அதில் அந்த இளைஞரின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொலையானவர் யார்? எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து சூலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இத்தகைய கொலை குற்றங்கள் அதிகரித்து வருகின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!