திண்டுக்கல் அருகே டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது!!
திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி மொண்டியபட்டியை சேர்ந்த டிரைவர் கரண்ராஜ்(27) இவர் கடந்த 31-ம் தேதி கை கால்கள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் குழந்தைப்பட்டியை சேர்ந்த குமரேசன், யோகேஷ், சரவணபாண்டி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய
தம்பகுளத்துபட்டியை சேர்ந்த முருகன் மகன் சந்துரு(எ) முருகன் (25) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக