விளையாட்டுப் போட்டிக்கு சென்ற மாணவிக்கு கார் மோதி விபத்து கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! -இடுப்பு எலும்பு முறிவு – பாதிக்கப்பட்டவர்கள் ஆசிரியர்கள், கார் ஓட்டுநர் மீது நடவடிக்கை கோரி ஆம்புலன்சில் வந்து ஆட்சியரிடம் மனு!!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சதாச்சாரி மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு, தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 7 பேர், கடந்த 25-ம் தேதி ஊசூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சென்றனர். போட்டி முடிந்து திரும்பியபோது சாலையில் வந்த கார் மோதியதில், ரூபிகா என்ற மாணவிக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மாணவிகளுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் செல்லாமல் தனியாக அனுப்பி வைத்ததே விபத்துக்கு காரணம் எனக் கூறி, பாதுகாப்பு அளிக்கத் தவறிய ஆசிரியர்கள் மீதும், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் தாய் தீபிகா, பாதிக்கப்பட்ட மாணவியை ஆம்புலன்சில் அழைத்து வந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தார். மேலும், மாணவிக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்க அரசு உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து தீபிகா கூறுகையில், “விபத்து தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது மகளால் தற்போது எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹேண்ட்பால் போட்டியில் மாநில அளவில் விளையாடி பரிசுகள் பெற்றுள்ளாள். விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பது அவளது கனவு. ஆனால், இந்த விபத்தால் அந்தக் கனவு கலைந்துவிட்டது. எனவே, அவளுக்கு உயர் சிகிச்சை அளிக்க அரசு உதவ வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக