கோவையில் நடைபெற்ற இந்திய பாரா கிரிக்கெட் லீக் 3.0 நிறைவு, வெற்றிக்கோப்பையை தட்டி சென்ற தமிழ்நாடு அணி! கோப்பைகளுடன் பரிசுகளும் வழங்கபட்டது. விருவிருப்புக்கு பஞ்சமில்லாத ஒரு கிரிக்கெட் போட்டியாக அமைந்தது என ரசிகர்கள் உற்சாகம்!!!

கோவை மாவட்டம், மாற்று திறனாளிகளின் வாழ்க்கையை மாற்றும் வகையில், இந்திய பாரா கிரிக்கெட் லீக் எனும் போட்டிகள் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ரோட்ராக்ட் க்ளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி மற்றும் தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்கம் சார்பில் கடந்த செப்டம்பர்  4ம் தேதி  முதல் 6ம் தேதி வரை  நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பாரா கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர். நான்கு அணிகளாக  களமிறங்கிய இப்போட்டியில், 

தமிழ்நாடு டவுன் டவுன் டைகர்ஸ், கொல்கத்தா தன்டர் வாரியர்ஸ், டெல்லி யுனிகார்ன்ஸ், மற்றும் வியான் வீணை ஸ்கூல் ரேஜிங் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பங்கேற்றது. இதன் இறுதி போட்டிகள் இன்று நடைபெற்றது இந்த போட்டியில் தமிழ்நாடு டவுன் டவுன் டைகர்ஸ், கொல்கத்தா தண்டர் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இப்போட்டிக்கான கோப்பையை தட்டி சென்றது. தமிழ்நாடு டவுன் டவுன் டைகர்ஸ் அணி, இந்தியன் பாரா கிரிக்கெட் லீக்ன் மூன்றாவது பதிப்பான ஐபிசிஎல்  3.0-ல் சாம்பியன் பட்டத்தையும்  வென்றது.

மேலும் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதாக சந்தோஷ் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். சிறந்த பேட்ஸ்மேன்க்கான விருதை கிருஷ்ணா பகடி, மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் விருதை சந்தோஷ் ஆகியோர் பெற்றனர். இதன் பரிசளிப்பு விழாவில் ரொட்டேரியன் மாருதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோப்பைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ரோட்டேரியன் மேலும் ரொட்டேரியன் முர்துஷா ராஜா, ரோட்டேரியன் அசோக்குமார்,  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வீரர்களை பாராட்டினர்.

இத்தொடருக்கு ரோட்டரி கோயம்புத்தூர் டவுன் டவுன் சார்பாக நடைபெற்ற ரோட்டேரியன் காட்வின், ஆன்லைன் 360 அகாடமி உரிமையாளர் ஷேக் அப்துல்லா, ரோட்டரி கோயம்புத்தூர் யூனிகார்ன்ஸ் மற்றும வியான் வீணை பள்ளி ஆகியோர் ஆதரவு வழங்கி போட்டிகளை மூன்று நாட்களாக சிறப்பாக நடத்தி இருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரோட்டரியன் மாருதி கூறியதாவது.. 

பாரா கிரிக்கெட் வீரர்களின் திறமையை தேசிய அளவில் வெளிக்கொண்டு வருவதுடன், விளையாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பை உருவாக்குவதே ஐபிசிஎல் இன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலமாக மாற்று திறனாளிகளுக்கு அரசின் வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்க மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்று தெரிவித்தார்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!