விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற காவலர் நாள்!!
காவலர் நாள் – விழுப்புரம் மாவட்ட காவல் துரை சார்பில் தமிழக காவலர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 1859-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி மெட்ராஸ் மாகாண காவல் சட்டம் கொண்டுவரப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்ட இரவு பகலாக பணியாற்றும் காவல்துறையினரின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் போற்றும் நாளாக காவலர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறையில், விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் அரா. அருளரசு, IPS., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. மதிவாணன், IPS., அவர்கள் வழிகாட்டுதலில், மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ஞானவேல் அவர்கள் கண்காணிப்பிலும், மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காவல்துறையினரின் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் போற்றுவதுடன், காவல்துறையின் உன்னத நோக்கங்களை நிலைநிறுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர் நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக