சோளிங்கர் தாலுக்கா அலுவலகத்தில் "நைட் தாசில்தார்" நியமனமாே? - அரசாங்கம் புது பதவி கொடுத்திருக்குமோ?
சோளிங்கர் தாலுக்கா அலுவலகத்தில் "நைட் தாசில்தார்" நியமனமாே? - அரசாங்கம் புது பதவி கொடுத்திருக்குமோ?...
4 நாள் ஆச்சு... இன்னும் கால்துறையில் புகார் கொடுக்கல மெமோ இல்லை... விசாரணை இல்லை... CCTV பாதுகாப்பு இல்லை!
விதி என்ன சொல்லுது?
அரசு விதிப்படி ரெக்கார்டு ரூம் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். சாவி ரெக்கார்டு கிளார்க் மற்றும் தலைமையிடத்து துணை தாசில்தார் (HQ DT) இருவரிடம் மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால் சோளிங்கரில் நடப்பது என்ன?
இரவு 10 மணிக்கு மேல் ரெக்கார்டு ரூம் திறக்கப்படுகிறது! சாவி இரவு காவலர் ரமேஷ் கையில்! எப்படி வந்தது?
இங்கே தான் பூதம் இருக்கு தலைவா!
1. டூப்ளிகேட் சாவி தயாரித்துவிட்டீர்களா?
HQ DT-ட்ட இருக்க வேண்டிய சாவி, ரமேஷ் கைக்கு எப்படி வந்தது? ஒருவேளை டூப்ளிகேட் சாவி போட்டு பயன்படுத்துகிறீர்களா? என்ற சந்தேகம் இப்போது வலுக்கிறது!
சாவியை டூப்ளிகேட் போடுவது அரசு ஆவண பாதுகாப்பு சட்டப்படி கிரிமினல் குற்றம் தெரியுமா?
2. அடுத்து தாசில்தார் ரூம் சாவியும் டூப்ளிகேட் போட்டுவிட்டீர்களா?
இன்று ரெக்கார்டு ரூம்... நாளை தாசில்தார் ரூமா? தாசில்தார் சேரில் இரவு காவலர் உட்கார்ந்து கையெழுத்து போடுவாரா? அந்த அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா?
3. இரவு காவலர் வேலை என்ன தலைவா?
அரசு விதிப்படி இரவு காவலர் வேலை - ஆபிஸ் கேட்டை பூட்டிய பிறகு வெளியில் காவல் இருப்பது! உள்ளே என்ன வேலை?
ஒருவேளை அரசாங்கம் உங்களுக்கு "நைட் தாசில்தார்" என்று புது பதவி கொடுத்திருக்கிறதா? இரவில் மட்டும் தாசில்தார் வேலை பார்க்க சிறப்பு உத்தரவு ஏதாவது வந்திருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள், நாங்களும் தெரிந்துகொள்கிறோம்!
4 நாள் ஆச்சு... இன்னும் நடவடிக்கை இல்லை என்றால் என்ன அர்த்தம்?*
- CCTV Hard Disk பாதுகாப்பாக இருக்கிறதா? இல்லை "பழுது" என்று சொல்ல தயாராகிவிட்டதா?
- Inward Register-ல் எந்த கோப்பு காணாமல் போனது?
- டூப்ளிகேட் சாவி விவகாரத்தை மூடி மறைக்க யார் முயற்சி செய்கிறார்?
மாவட்ட ஆட்சியர் அவர்களே...
சாதாரண கடைநிலை ஊழியரே "நான் பார்த்தேன்" என்று தைரியமாக சொன்ன பிறகும், 4 நாளாகியும் ஒரு மெமோ கூட கொடுக்கவில்லை என்றால்... இது அலட்சியமா? இல்லை ஆதாரத்தை அழிக்க கொடுக்கும் அவகாசமா?
உடனடியாக 2 காரியம் செய்யுங்கள்:
1. CCTV Hard Disk-ஐ உடனடியாக கைப்பற்றி Forensic Lab-க்கு அனுப்புங்கள்.
2. ரெக்கார்டு ரூம் மற்றும் தாசில்தார் ரூம் பூட்டுகளை உடனடியாக மாற்றி, புது சாவிகளை HQ DT பொறுப்பில் ஒப்படையுங்கள்.
இல்லையென்றால் நாளைக்கு பல அரசு ஆவணங்கள் காணாமல் போய்விடும்!
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக