சட்டப்பேரவையில் ஆற்காடு தொகுதி பிரச்சினைகள் குறித்து S.M.சுகுமார் MLA கேள்வி?
ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு ரூ.26 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – சட்டப்பேரவையில் S.M.சுகுமார் MLA வலியுறுத்தல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர், S.M.சுகுமார் MLA ஆற்காடு தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள் மற்றும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
ஆற்காடு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் திட்டத்திற்கு ரூ.26 கோடி நிதி:
ஆற்காடு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக ரூ.26 கோடி திட்ட மதிப்பீட்டை தமிழ்நாடு அரசின் ஏற்றுக்கொண்டுள்ள மத்திய அரசு இதுவரை அந்த நிதியை விடுவிக்க வில்லை என்பதை சுட்டிக்காட்டிய S.M.சுகுமார் MLA, உடனடியாக நிதியைப் பெற்று மருத்துவமனை தரம் உயர்த்தும் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக