தென்காசியில் நடைபெற்ற 23 வது சப் ஜூனியர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டி!!
தென்காசி மாவட்டம்,தென்காசியில் நடைபெற்ற 23 வது சப் ஜூனியர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டி 04.09.2026 முதல் 06.09. 2026 மூன்று நாட்கள் நடைபெற்றது. போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இன்ஃபினிட்டி வாரியர்ஸ் அகாடமி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 12 வயது உட்பட்ட மாணவர்கள் பிரிவில் 34 கிலோ எடை பிரிவில்
நேகன் மணிஷ் பாண்டி தங்க பதக்கமும் 36 கிலோ எடை பிரிவில் வெற்றி ஜெய் வெள்ளி பதக்கமும் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் 60 கிலோ பிரிவில் முகமது சாலிக் தங்கப்பதக்கமும் 64 கிலோ எடை பிரிவில் விஷ்வா தங்க பதக்கமும் 12 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 39 கிலோ எடை பிரிவில் அனிகா ராஜேஷ் வெங்கல பதக்கமும்,12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான தனித்திறமை பிரிவில் கவிஸ் வெள்ளிபதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். மதுரை மாவட்டம் தமிழக அளவில் ஒட்டு மொத்ததில் 3வது இடம் பிடித்துள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களை மாநிலச் செயலாளர் திரு. ஜான்சன் அவர்களும், மேற்பார்வையாளர் தங்கபாண்டியன் அவர்களும், மாவட்ட தலைவர் பழனி குமார் கோச் பிரபாகரன் வாழ்த்தினார்கள். தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக