ஸ்ரீ ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற ஏழாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா வேள்வரைகிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு ஏழாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது இதில் பெரிய மாடு சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பெரிய மாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும்சின்ன மாடு பிரிவில் 36 ஜோடி மாடுகளும் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன.
இதில் புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை போன்ற மாவட்டங்களில் உள்ள மாட்டு வண்டி உரிமையாளர்கள் தங்களது மாடுகளை கொண்டு வந்து இந்த பந்தயத்தில் கலந்து கொண்டனர்
சாலையில் இருபுறமும் கண்டு ரசித்த ரசிகர்கள் சீறிப்பாய்ந்த மாடுகள் இதில் நானா நீயா என போட்டி போட்டு சென்றனர்
இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பணமும் கேடயமும் வழங்கப்பட்டது
பாதுகாப்பு பணியை மீமிசல் காவல் துறையினர் மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக