மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற திங்கள் தின மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் .நா.பிரியா ரவிச்சந்திரன், அவர்களிடம் இரண்டு மனுக்கள் அளிக்கப்பட்டது.
மேல்விஷாரம் நகரில் சுமார் 60,000-க்கும் அதிகமாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதால் கொசு மருந்து தெளிக்க வேண்டும். மேலும் மேல்விஷாரம் நகராட்சிக்கு நிரந்தரமாக ஆணையாளரை நியமித்து பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட தாவூத் நகர் முதல் தெருவில் பதினைந்து ஆண்டுகளாக கழிவுநீர் வெளியேற கால்வாய் இல்லாததால் ஆங்காங்கே அவரவர் வீட்டின் எதிரில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுதல், நோய்த் தொற்று மற்றும் கொசுத்தொல்லைகள் போன்ற பிரச்சனைகளால் மக்கள் தினம் தினம் வேதனை அனுபவித்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக பலமுறை நகராட்சிக்கு மனு அளித்து பலனில்லாத நிலையில் தாங்கள் கழிவுநீர் பிரச்சனையை தீர்த்து தர வேண்டும் என்று அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமையில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக