ஆசிரியர்கள் தின விழா! - ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு!!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு கிராமத்தில் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களை கவுரவிக்கும் விழா நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு-காரப்பட்டு கிராமங்கள் சார்பில்  டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்படம்பர் 5-ந் தேதி ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஆடிட்டர் இராஜீவ்காந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். விழாவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன், ஆசிரியர் பயிற்றுநர் இராமமூர்த்தி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சி பற்றி சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் திருக்குறள் சிறப்பாக வாசித்ததற்காக அவரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர் நடராஜன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!