வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!!
வேலூர் மாவட்டம்,வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (07.09.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. அவர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் ஞானகுரு, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ராம்குமார் (வேலூர்), செந்தில்குமார் (குடியாத்தம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் மு பாக்யராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக