பார்வைக்காக நடைபோடுவோம்” எனும் தலைப்பில், பார்வைத் திறனை வழங்கும் கண்தானம் குறித்த விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்!!
கருவிழிப் பார்வையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கு, தங்களின் முகங்களைப் பார்ப்பதும், தங்களைச் சுற்றியுள்ள உலகை மீண்டும் காண்பதும் இன்றும் ஒரு கனவாகவே உள்ளது. கண்தானம் மூலம் இந்தக் கனவை நனவாக்கி, ஒருவரின் வாழ்க்கையில் பார்வை எனும் மிகப்பெரிய பரிசின் மூலம் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்த முடியும்.
ஒருவரின் இருளில் ஒளியாக இருங்கள்” என்ற உத்வேகமூட்டும் கரு பொருளை முன்வைத்து, கோவை மாவட்ட கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்கம், மற்றும் இந்திய மருத்துவ சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து, கண்தானம் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் கண்கள் தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. .
இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்ததுடன், தானும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டார். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்து பேசிய
கோயம்புத்தூர் தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் இணை மருத்துவ இயக்குநர், டாக்டர் ஷ்ரீஷ் குமார் கோடவூர் கூறியதாவது..
கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் தேவைக்கும், கிடைக்கக்கூடிய தானமாக வழங்கப்படும் கருவிழித் திசுக்களுக்கும் இடையே தொடர்ந்து குறிப்பிடத்தக்க இடைவெளி நிலவி வருகிறது. கண்தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதும், மேலும் பலர் தங்களது கண்களை தானமாக வழங்க உறுதிமொழி ஏற்பதும் இந்த இடைவெளியைக் குறைத்து, கருவிழிப் பார்வையிழப்புடன் வாழும் பலருக்கு மீண்டும் பார்வையை வழங்க உதவும். முக்கியமாக, ஒரு கண்தானம் மூலம் கருவிழிப் பார்வையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு பேர் வரை பார்வையைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தானமாக வழங்கப்படும் கருவிழியின் வெவ்வேறு அடுக்குகள், பொருத்தமான மருத்துவ சூழ்நிலைகளில் வெவ்வேறு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட முடியும். இதனால் ஒவ்வொரு கண்தானமும் மிகவும் அர்த்தமுள்ளதாய் அமைகிறது என்று தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது டாக்டர் பிரபு விஜய ராகவன் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.


கருத்துகள்
கருத்துரையிடுக