FQL ஆன்லைன் செயல்மூலம் பணத்தை இழந்தவர் தற்கொலை:நத்தம் அருகே நீதி வேண்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நபரின்bஉடலுடன் உறவினர்கள் சாலை மறியல்: உடலை எடுத்து ஆம்புலன்ஸில் ஏற்றிய போது ஆம்புலன்ஸ் போலீசார் மற்றும் போலீசார் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல்!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள காசம்பட்டியைச் சேர்ந்தவர் ராசு (என்ற)மாயழன் (25).விவசாய கூலி தொழிலாளி. இவர் எப்க்யுஎல் செயலியில் பணம் கட்டுவதற்கு அப்பகுதியில் ஊக்குவிப்பாளராக இருந்து முதலீடு செய்ய அப்பகுதியில் செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலியில் பணம் கட்டி பாதிக்கப்பட்ட நபர்களும் அப்பகுதியில் ஆயிரக் கணக்கானோர் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ராசு காசம்பட்டியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இருந்துள்ளது. இதைப் பார்த்த அவரது உறவினர்கள் அவருடைய உடலை
தூக்கிக் கொண்டு வந்து நத்தத்திலிருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை பிரிவு அருகில் உள்ள சொக்கன் ஆசாரி கண்மாய் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் வைத்து (இன்று ஆக்.31) சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், மதுரை மாவட்ட எஸ்பி தேவநாதன் முன்னிலையில் அதிகாரிகள் சமரசப் பேச்சில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர் இறந்தவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டதாகவும், இதற்கு காரணமா வைர்களை கண்டுபிடித்து உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒலிபெருக்கி மூலமாக இது சம்மந்தமாக நாளை மாலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனவே அதிரடிப்படை போலீசார் உதவியுடன் லேசான தடியடி நடத்தி இறந்த ராசுவின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி உடற்கூறாய்வுக்கு எடுத்து திண்டுக்கல் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது போலீஸ் வாகனங்கள் மீது சுற்றி நின்றவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இந்த மறியல் மாலை சுமார் 5 மணிக்கு தொடங்கி இரவு 6.45 வரை மிகுந்த பதட்டத்துடன் உடலுடன் போராடினர். இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் செயலியில் பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களால் இந்த உயிரைக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என்று கூறும் உறவினர்கள் இருந்தனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் இப்பகுதியில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் இடத்திற்கு டிஐஜி சசி மோகன் பிரச்சனைகளை போலீஸாரிடம் கேட்டறிந்தார்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக