கோவையில் நடைபெற்று வந்த தேசிய அளவிலான குதிரையேற்ற சாம்பியன்ஷிப் நிறைவு, ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்கில் சென்னை புல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது!!

கோவை மாவட்டம், வெள்ளானைப்பட்டி அருகே உள்ள மோலப்பாளையத்தில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கிய தேசிய அளவிலான ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரையேற்ற போட்டிகளின் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது. 

ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் சார்பில் நடத்தப்பட்ட இந்த தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டி, மோலப்பாளையத்தில் “பவர் ஹவுஸ்”  மைதானத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட போட்டி அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. சென்னை புல்ஸ் தமிழ்நாடு, பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் கேரளா, பெங்களூரு நைட்ஸ் கர்நாடகா, கோல்கொண்டா சார்ஜர்ஸ் தெலங்கானா மற்றும் எலைட் ஈக்வெஸ்ட்ரியன்ஸ் மேற்கு வங்கம் ஆகிய அணிகள் பங்கேற்றன.

100 செ.மீ., 110 செ.மீ. மற்றும் 120 செ.மீ. என மூன்று பிரிவுகளில் ஷோ ஜம்பிங் போட்டிகள் நடைபெற்றன..

தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சத்தியபாமா சட்டமன்ற உறுப்பினர், பிரபல திரைப்பட நடிகர்கள் ஆர்யா மற்றும் ஷாம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

போட்டியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில்,  எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன்,  

பி & எஸ் குரூப் ஆஃப் கம்பெனி  நிறுவனத்தின் நிறுவனர் பிரியங்கா சுந்தர், ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் தலைவர். ஏ.எஸ். சக்தி பாலாஜி மற்றும்  ஐஆர் ஏ  பேஷன் ஸ்டுடியோ நிறுவனர் பாரதி பாலாஜி உள்ளிட்டோரும் நடிகர்கள் ஆர்யா மற்றும் ஷ்யாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐந்து அணிகளைச் சேர்ந்த குதிரையேற்ற வீரர்கள், தங்களது திறமையையும் குதிரைகளுடனான ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்தி, பல்வேறு சவாலான தடைகளைத் தாண்டி சிறப்பாக போட்டியிட்டனர்.

இறுதிப் போட்டிகளின் முடிவில், கோல்கொண்டா சார்ஜர்ஸ் அணி 286 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசை வென்றது. பெங்களூரு நைட்ஸ் அணி 291 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசை வென்றது.

311 புள்ளிகளுடன் சென்னை புல்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்து, ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசையும் தட்டிச் சென்றது.

பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராஜா, வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களை பாராட்டி, பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!