ஆம்பூர் அருகே பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோர்கள் விற்பனை! -4 பேர் கைது!!
திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மாங்காதோப்பு, பாஷாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ரஹ்மத்துல்லா - ஹவாமா தம்பதியினர், இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண்பிள்ளைகள் மற்றும் 2 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த 14 ஆம் தேதி ஹவாமாவிற்கு 5 ஆவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தையை, தனது உறவினர்கள் மூலம் பெங்களூரை சேர்ந்த ஷம்ரின் தாஜ் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயிற்கு விற்றுள்ளனர்,
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர் சுகப்பிரியா அளித்த புகாரில், பெங்களூர் சென்று குழந்தையை காவல்துறையினர், மீட்ட நிலையில், இதுதொடர்பாக, குழந்தையை விற்ற பெற்றோர் மற்றும் வாங்கிய நபர்கள் என 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்..
பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோர்கள் விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக