தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி !!
சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி தொழிலதிபரிடம் ரூ. 40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில் என்பவரிடம் இருந்து ரூ.40 லட்சம் பறித்ததாக பரங்கிமலை காவல் ஆய்வாளர் முகமது புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும் யாணைக்கவுனி போலீஸார் கடந்த ஆக - 03 - ந் தேதி கைது செய்தனர் இவர்கள் இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில் வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்கள் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர் இந்த
மனு நீதிபதி பி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது அப்போது இந்த வழக்கு ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது அதையடுத்து நீதிபதி இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் !
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் கார்மேகம்.

கருத்துகள்
கருத்துரையிடுக