234 எம்.எல்.ஏக்களிடமும் சத்தியம் வாங்கினார் முதல்வர் விஜய் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேச்சு!!


மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என எங்களை மேடையில் நிற்க வைத்து முதலமைச்சர் சத்தியம் வாங்கினார் இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இப்படி செய்தது இல்லை என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ளார் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களிடம் நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என்று கேட்டால் அந்த முதியோர்கள் சொல்லும் அந்த வரலாறு மனதை வேதனைப்படுத்துகிறது பெற்று வளர்த்து ஆளாக்கி அழகு பார்க்கும் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் நிலை மாற வேண்டும் தற்போதைய சூழலில் பெண்களின் பெற்றோரை அரவணைக்கும் வகையில் இளைஞர்கள் அனுசரித்துச் செல்ல வேண்டும் குடும்பப் பிரச்னைகளால் பெற்றோர்களை பிரித்து வைக்கும் நிலை வேண்டாம் வாழும் போது பெற்றோர்களை மதிக்கத் தெரியாமல் அவர்களை வணங்கத் தெரியாமல் அவர்கள் இறந்த பிறகு அழுவதில் ஒரு பயனும் இல்லை பெற்றோர்களை மதிக்கும் பண்பை இளைஞர்களும் மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் ஜாதி மற்றும் பணம் படைத்தவர்கள் மட்டும் தான் ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையை இந்த த.வெ.க. ஆட்சி மாற்றியுள்ளது வாக்களித்த மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று கூறி 234 சட்டமன்ற உறுப்பினர்களையும் மேடையில் நிற்க வைத்து முதல்வர் விஜய் சத்தியம் வாங்கினார் இந்தியாவிலேயே எந்தக் கட்சியினரும் செய்யவில்லை நேர்மையாக இருப்போம் என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறோம் அந்தப் பணியைத் தான் தற்போது ஆளுங்கட்சியினர் செய்து வருகின்றனர் எனப் பேசியுள்ளார். 

ஆசிரியர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!